எரிவாயு விலை நிர்ணயம் செய்யப்படும் முறையை மறு ஆய்வு செய்வதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவில் சமையல் சிலிண்டர் விலை உயர்வு என்பது மக்களிடையே பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் பல மாநிலங்களில் சிலிண்டர் விலை ஆயிரம் ரூபாய்க்கு மேல் உள்ளது. உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் எரிவாயுவுக்கு விலை நிர்ணயம் செய்யும் முறையை மறு ஆய்வு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக தனிக்குழு அமைத்து உத்தரவிட்டுள்ளது. […]
