சுப நிகழ்ச்சிகளை முன்னிட்டு வாழை மரங்கள் விற்பனை அமோகமாக நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் பகுதியில் பெரும்பாலான விவசாயிகள் வாழை மரங்களை சாகுபடி செய்து வருகின்றனர். இந்த வாழை மரங்களை பண்டிகை மற்றும் விழாக்காலங்களில் அலங்காரத்திற்கு வாயிலில் கட்டுவதற்காக விவசாயிகள் வியாபாரம் செய்து வருகின்றனர். அதன்படி நேற்று விநாயகர் சதுர்த்தி மற்றும் திருமண நிகழ்ச்சிகளை முன்னிட்டு பெரும்பாலான வாடிக்கையாளர்கள் வாயிலில் கட்டுவதற்கான வாழை மரங்களை வாங்குவதற்கு விவசாயிகளிடம் முன்பதிவு செய்து வைத்திருந்தனர். இந்நிலையில் விவசாயிகள் தங்களது நிலங்களில் […]
