சேலம் மாவட்டத்தில் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களிலுள்ள குளிர்பதன கிடங்குகளில் காய்கறிகள் மற்றும் பழங்கள் இருப்பு வைத்து விற்பனை செய்யலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டத்திலுள்ள வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கொங்கணாபுரம், ஓமலூர் மற்றும் எடப்பாடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மொத்தம் 14 இடங்களில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. அந்த விற்பனைக் கூடங்களில் 18 ஆயிரத்து 900 மெட்ரிக் டன் விளை பொருட்கள் வைக்கும் அளவிற்கு சேமிப்பு கிடங்குகள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. மேலும் […]
