தாய் மகளுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விஸ்வநத்தம் கிராமத்தில் வேல்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வனிதாராணி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு லோகேஷ்ராஜ் என்ற மகனும், காவியபிரியா என்ற மகளும் இருந்துள்ளனர். இவர்கள் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் படித்து வந்துள்ளனர். இந்நிலையில் லோகேஷ்ராஜ் பத்தாம் வகுப்பில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் தனியார் பள்ளியில் படிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் வனிதா ராணி […]
