Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கல்யாணம் செய்து கொள்கிறோம்… 2 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை… மூவர் போக்சோவில் கைது…!!

ஆசைவார்த்தை கூறி 2 சிறுமிகளை பாலியல் வன்புணர்வு செய்த 3 பேரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைதுசெய்தனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள ரெட்டியபட்டி பகுதியில் 16 வயதுடைய 2 சிறுமிகள் காணவில்லை என கீழராஜகுலராமன் போலீஸ் ஸ்டேஷனில் பெற்றோர் புகாரளித்தனர். இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்த கீழராஜகுலராமன் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த சங்கிலி மற்றும் பொண்ணு பாண்டியன் இருவரும் 2 சிறுமிகளிடம் திருமணம் செய்வதாக ஆசையாக பேசி பாலியல் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நிலப்பிரச்னை… போலீசார் தாக்கியதால் மனமுடைந்த இளைஞர் தற்கொலை முயற்சி..!!

நிலப்பிரச்னை காரணமாக போலீஸ் ஸ்டேஷன் சென்ற இளைஞரை போலீசார் தாக்கியதால் மனமுடைந்த அவர் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சித்தனேந்தல் பகுதியில் நிலப் பிரச்ச்னை காரணமாக சகோதரர்களான சுப்பிரமணியன் மற்றும் கிருஷ்ணன் ஆகியோருடன் முருகன் என்பவரும் அ. முக்குளம் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றார். அங்கு பேச்சுவார்த்தையின் போது முருகனை காவல்துறையினர் அடித்ததாக சொல்லப்படுகிறது. இதனால் மனவேதனையடைந்த முருகன் வீட்டிலிருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதையடுத்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

உறவினர் வீட்டுக்கு வந்த சிறுமி… கடத்திச் சென்ற சிறுவன்… மடக்கிப்பிடித்த போலீஸ்…!!

திருப்புவனம் அருகே சிறுமியை கடத்திய சிறுவனை காவல்துறையினர் கைது செய்த செய்தனர். விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா பகுதியில் வசித்து வருகின்றார் 13 வயது சிறுமி ஒருவர்.. இந்த சிறுமி சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே இருக்கும் கடம்பகுடி கிராமத்திலுள்ள சொந்தக்காரர் வீட்டுக்கு வந்திருந்தார். இந்தநிலையில் அந்தசிறுமி திடீரென காணாமல் போனாள்.. இதையறிந்த சிறுமியின் தந்தை பழையனூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.. புகாரின் அடிப்படையில், விசாரணை நடத்தியதில் அதே கிராமத்தைச் சேர்ந்த 18 வயதுடைய சிறுவன் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வறுமையால் திருடனாக மாறிய 15 வயது சிறுவன்..!!

கொரோனாவால் நீடித்து வரும் ஊரடங்கால், வறுமையின் காரணமாக 15 வயது சிறுவன் திருடனாக மாறிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள வெங்கடாசலபுரம் கிராமத்தில் வசித்து வரும்  சண்முகவேல் என்பவர் மேள கலைஞராவார்.. தற்போது உடல்நிலை சரியில்லாததன் காரணமாக அவரால் வேலைக்குச் செல்லமுடியவில்லை. இதன் காரணமாக சண்முகவேலின் மனைவி மட்டும் தீப்பெட்டி தொழிற்சாலைக்கு சென்று தன்னுடைய மகன் மற்றும் கணவரை காப்பாற்றி வருகிறார். தற்போது நீடித்து வரும் கொரோனா ஊரடங்கால் தீப்பெட்டி தொழிற்சாலையும் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“100 சவரன் நகை”… இரவு நேரத்தில் கொள்ளை… ஒருவர் கைது… மற்றொருவருக்கு வலைவீச்சு…!!

தொடர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வன்னியம்பட்டி பகுதியில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இரவில் ஆளில்லாத பூட்டிய 3 வீடுகளில் தொடர் திருட்டு சம்பவம் நடந்துள்ளது. இதில் 100 சவரனுக்கு மேற்பட்ட தங்க நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்த கொள்ளைச் சம்பவம் குறித்து வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை வலைவீசி தேடி வந்தனர். இந்தநிலையில் செங்கோட்டை பகுதியை சேர்ந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

விலங்குகளை துன்புறுத்திய வாலிபருக்கு 70,000 ரூபாய் அபராதம்

சதுரகிரி மலைக்குள் அத்துமீறி நுழைந்து வன விலங்குகளை துன்புறுத்திய வாலிபருக்கு வனத்துறையினர் 70,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் மலைப் பகுதியில் ஏராளமான வன விலங்குகள் உள்ளன. இந்தநிலையில் மலைக்குள் வன விலங்குகளை  வேட்டையாடுவதாக சாப்டூர் வனச்சரக அலுவலர் சீனிவாசனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது தலைமையில் வனத்துறையினர்கள் அப்பகுதிக்குள் ரோந்து பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, அணைக்கரைபட்டியைச் சேர்ந்த பாக்யராஜ் என்ற வாலிபர் டிராக்டர் மூலம் மணல் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சைக்கிள் மீது பால் வேன் மோதி விபத்து… தொழிலாளி உயிரிழப்பு..!!

நூற்பாலையில் வேலைபார்த்து வரும் தொழிலாளி விபத்தில் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள என்.பி.கே. புதுப்பட்டியை சேர்ந்தவர் கந்தசாமி இவருக்கு வயது41.. இவர் மதுரை ரோட்டிலுள்ள தனியார் நூற்பாலையில் வேலைபார்த்து வந்தார். நேற்றிரவு பணி முடிந்து சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். மம்சாபுரம் விலக்கு அருகே  சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக பால் ஏற்றி வந்த வேன் திடீரென அவர்மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கந்தசாமி அதே இடத்தில் […]

Categories
மாநில செய்திகள்

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். விருதுநகர் அருகே கோவில்பட்டியில் ராஜ்குமார் என்பவருக்கு சொந்தமான ஏஞ்சல் என்ற பட்டாசு ஆலை செயல்படுகிறது. கொரோனா ஊரடங்கில் பட்டாசு ஆலைகள் மூடப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் 50% ஊழியர்களுடன் ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் மொத்தம் 15 அறைகள் உள்ளது. இன்று 25 ஊழியர்களுடன் இயங்கி வந்தது. அப்போது வெடி மருந்து கலக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்த போது […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வெளியூரில் இருந்து போன் செய்த கணவர்… எடுக்காத மனைவி! அறையில் மாமனார் கண்ட அதிர்ச்சி!

வெளியூரிலிருந்து தொலைபேசியில் தொடர்பு கொண்ட கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி தகவல்… விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டைக்கு அருகாமையில் இருக்கும் புளியம்பட்டி கிராமத்தை சேர்ந்த மதிராணி என்பவர் ரெட்டியபட்டி வேளாண் அலுவலகத்தில் உதவி அலுவலராக பணிபுரிந்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த அருண்குமார் என்பவருடன் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. அருண் குமார் என்பவர் ஆந்திர மாநிலத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். எனவே மதிராணி புளியம்பட்டியில் வசித்து வந்தார். சம்பவத்தன்று ஆந்திராவிலிருந்து அருண்குமார் தனது மனைவிக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்துள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கொரோனா காலத்தில் திருட்டு….! அரசு பள்ளிக்கு வந்த சோதனை…!!

 ஊரடங்கு நேரத்தை பயன்படுத்தி அரசு பள்ளியில் கைவரிசை காட்டிய திருடர்கள்…! விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே P.புதுப்பட்டி என்ற ஊரில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டுவருகிறது. இதில் சுமார் 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். ஊரடங்கு  காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால் பள்ளி வளாகம் அனைத்தும் மூடப்பட்டு வெறிச்சோடி காணப்படுகிறது. ஊரில் இருந்து சற்று ஒதுக்குப்புறமாக காட்டுப் பகுதியில் அமைந்திருக்கும் இந்த பள்ளியில் இருந்த பொருட்களை கொள்ளையடிக்க ஒரு கும்பல் அதற்காக திட்டத்தை தீட்டி இருக்கிறது. சில […]

Categories
மாநில செய்திகள்

மதுரை, விருதுநகர், கோவை, நீலகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!

அடுத்த 48 மணி நேரத்திற்கு மதுரை, விருதுநகர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. இதனால் அடுத்த 48 மணி நேரத்தில் மதுரை, விருதுநகர், தேனி, நெல்லை, தூத்துக்குடி, கோவை, நீலகிரி, சேலம், ராமநாதபுரம், குமரி ஆகிய 10 மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விருதுநகர்

முற்றிய குடி போதை….! ”தங்கையை அடித்துக் கொன்ற அண்ணன்” விருதுநகரில் சோகம் …!!

மதுவை அருந்தி விட்டு தமிழகத்தின் பல பகுதிகளில் குற்ற சம்பவம் அரங்கேறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவின் தாக்கத்தின் காரணமாக நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இன்று ஊரடங்கின் 44 ஆவது நாள் நடைபெற்று வரும் நிலையில் 2 நாட்களுக்கு முன்னதாக தமிழக அரசு மதுக் கடைகளைத் திறக்கலாம் என்று உத்தரவு பிறப்பித்தது. ஊரடங்கில் சில தளர்வுகளை மத்தியஅரசு கொடுத்த நிலையில் தமிழக அரசு இந்த உத்தரவை பிறப்பித்தது. இதற்கு தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள், குறிப்பாக […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் தூத்துக்குடி, சிவகங்கை உள்ளிட்ட 5 மாவட்டங்களை கன மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!

தமிழகத்தில் தூத்துக்குடி, சிவகங்கை உள்ளிட்ட 5 மாவட்டங்களை கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. வெப்பசலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, சிவகங்கை புதுக்கோட்டையில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர். தஞ்சை, […]

Categories
அரசியல்

50 % ஊழியர்களுடன் பட்டாசு ஆலைகள் இயங்கலாம் -மாவட்ட ஆட்சியர் அனுமதி!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகள் ஏப்.20க்கு பிறகு 50% ஊழியர்களுடன் இயங்கலாம் என மாவட்ட ஆட்சியர் கண்ணன் அனுமதி வழங்கியுள்ளார்.  கொரோனா பாதிப்பின் காரணமாக இந்தியா முழுவதும் ஏப்ரல் 14 வரை அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு மே 3 வரை  நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏப்ரல் 20 முதல் எவையெல்லாம் இயங்கும் என  ஊரடங்கு நெறிமுறைகளை  மத்திய அரசு வெளியிட்டது. அதன்படி , கிராமப் பகுதிகள், சிறப்பு பொருளாதார மண்டலங்களில் உள்ள ஆலைகள் சமூக இடைவெளியுடன் இயங்கலாம் என் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஓன்று கூடிய மக்களை விரட்டியடித்த போலீஸ் – விருதுநகரில் பரபரப்பு …!!

அருப்புக்கோட்டையில் ஊரடங்கு உத்தரவை மீறி ஒன்றுகூடிய பொதுமக்களை போலீசார் விரட்டியடித்தனர். இந்தியாவில் வேகமாக வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 21 நாட்களுக்கு அமல்படுத்தப்படும் முழு ஊரடங்கை மக்கள் பின்பற்றும் படியும் , யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று பிரதமர் மோடி நேற்று நாட்டு மக்களை வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து மாநிலங்களிலுள்ள மாவட்ட எல்லைகள் மூடப்படுகின்றன. அத்தியாவசிய தேவைகளை தவிர ஏனைய அனைத்து முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்திலும் முழு […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விருதுநகர்

மாவட்ட செயலாளர் பதவி பறிப்பு – சாட்டையை சுழற்றிய OPS , EPS …!!

அதிமுகவின் விருதுநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்த ராஜேந்திர பாலாஜி நீக்கப்பட்டது அவரின் ஆதரவாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மோடி எங்கள் டாடி, சின்னம்மா கட்சியில் இணைந்தால் நான் வரவேற்பேன். கமலஹாசனின் நாக்கை அறுக்க வேண்டும். தமிழகத்திலும் மதக்கலவரம் ஏற்படும். இப்படி பாஜகவின் கருத்துக்களை முழுமையாக ஆதரித்து பேசி வருபவர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. இவரின் பல கருத்துக்கள் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது. அதிமுகவின் விருதுநகர் மாவட்ட செயலாளராக இருந்துகொண்டு தமிழக பால்வளத்துறை அமைச்சராக இருந்துவந்த ராஜேந்திர பாலாஜியின் விருதுநகர் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பட்டாசு ஆலை வெடி விபத்து- உயிரிழந்தோருக்கு ரூ.1 லட்சம்- முதல்வர் அறிவிப்பு!

விருதுநகர் மாவட்டம் சிப்பிபாறையில் அமைந்துள்ள ராஜம்மாள் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. அங்கு தொழிலாளர்கள் வழக்கம் போல பட்டாசு தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக வெடிவிபத்து நிகழ்ந்தது. இதில் நான்கு கட்டடங்கள் தரைமட்டமாகின. இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த 10க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டள்ளனர். தீயை கட்டுப்படுத்தும் பணியில் 4 தீயணைப்பு வாகனங்கள் தீவிரமாக ஈடுபட்டு கட்டுக்குள் கொண்டுவந்தது. கடும் வெயிலில் ஏற்பட்ட வெப்பத்தால் பட்டாசுகள் ஒன்றோடு ஒன்று […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

BREAKING: பட்டாசு ஆலை விபத்தில் 6 பேர் பலி.!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட  விபத்தில் 6 பேர் பரிதாபமாக பலியாயினர். சிப்பிபாறையில் அமைந்துள்ள ராஜம்மாள் பட்டாசு ஆலையில் பிற்பகலில் திடீர் விபத்து ஏற்பட்டது. பட்டாசு ஆலை ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த 10-க்கும் மேற்பட்டவர்கள்  சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீயை கட்டுப்படுத்தும் பணியில் 4 தீயணைப்பு வாகனங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்த விபத்தில் 6 அறைகள் தரைமட்டம் ஆனது. கடும் வெயிலில் ஏற்பட்ட வெப்பத்தால் பட்டாசுகள் ஒன்றோடு ஒன்று உராய்வு காரணமாக இந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பழிக்குப்பழியாக கொலை … இரண்டு பேர் கைது .. மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்..!!

அருப்புக்கோட்டை அருகே பழிக்குப்பழி வாலிபர் வெட்டிக் கொலை, இசசம்பவத்தில் தற்போது இரண்டுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த அக்னி ராமன், மூர்த்தி ஆகிய இரு குடும்பத்திற்கும் இடையே பல  காலமாக நிலத்தின் மீது சம்மந்தமாக தகராறு இருந்தது. இந்த நிலையில்,  அக்னி ராமனால் கடந்த 2016ம் ஆண்டு புது வருடமான அன்று கந்தவேலு என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அக்னி ராமன் கைது செய்யப்பட்டு சிறை சென்றார். பின்னர் ஒரு மாத […]

Categories
சற்றுமுன் மாவட்ட செய்திகள் விருதுநகர்

BREAKING : பட்டாசு ஆலையில் வெடிவிபத்து – ஒருவர் உயிரிழப்பு ….!!

சிவகாசியில் பட்டாசு ஆலையில் ஏற்ப்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் கணேசன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று சரவெடி தயாரிக்கும் பணி நடைபெற்றது. காலை முதல் தொழிலாளர்கள் வழக்கம்போல வேலையில் ஈடுபட்டிருந்தார்கள். அப்போது சரவெடிக்கு ரசாயன மருந்து கலவையை உள்ளே செலுத்தும் போது எதிர்பாராத விதமாக வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் குருசாமி என்ற தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் முனியாண்டி என்ற தொழிலாளி 80 சதவீத தீக்காயங்களுடன் தற்போது சிவகாசி […]

Categories
மாநில செய்திகள்

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 6ஆக உயர்வு!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள சின்னகாமன் பட்டி கிராமத்தில் ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சின்னகாமன்பட்டியில் பிரபாகரன் என்பவருக்கு சொந்தமான சூரியபிரபா பட்டாசு தொழிற்சாலை உள்ளது. இந்த பட்டாசு தொழிற்சாலையில் கடந்த 19ம் தேதி காலை வழக்கம்போல் பட்டாசு தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு வாகனத்தில் பட்டாசு ஏற்றும்போது உராய்வின் காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் பட்டாசு தொழிற்சாலையில் […]

Categories
மாநில செய்திகள்

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து… அறைகள் தரைமட்டம், 3 பேர் உயிரிழப்பு!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள சின்னகாமன் பட்டி கிராமத்தில் ஆலையில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் மூன்று உயிரிழந்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சின்னகாமன்பட்டியில் பிரபாகரன் என்பவருக்கு சொந்தமான சூரியபிரபா பட்டாசு தொழிற்சாலை உள்ளது. இந்த பட்டாசு தொழிற்சாலையில் காலை வழக்கம்போல் பட்டாசு தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு வாகனத்தில் பட்டாசு ஏற்றும்போது உராய்வின் காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் பட்டாசு தொழிற்சாலையில் உள்ள அனைத்து அறைகளிலும் தீ […]

Categories

Tech |