Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மாவட்ட விளையாட்டு அரங்கம் ஏன் மூடப்பட்டது ..?

விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கம் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி மூடப்பட்டதால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். விருதுநகர் மாவட்ட ஆட்சியர்வளாகம் அருகே மாவட்ட விளையாட்டு அரங்கம் அமைந்துள்ளது. இந்த விளையாட்டு அரங்கில் உள்ள மைதானத்தில் நடைப்பயிற்சிக்கும், விளையாடுவதற்கும் ஏராளமானோர் வருவது வழக்கம். ஐந்து மாதகால கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் கடந்த 7-ம் தேதி விளையாட்டு மைதானம் திறக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை 5 மணிக்கு திறக்க வேண்டிய விளையாட்டு அரங்கம் திறக்காமல் மூடப்பட்டிருந்தது. இதுகுறித்து கேட்டபோது நேற்று பெய்த […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

அருப்புக்கோட்டையில் பாரதிய ஜனதா கட்சி கொடிக்கம்பம் சேதம் ….!!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை புலியம் பட்டியில் பிரதமரின் பிறந்தநாளன்று நிறுவப்பட்ட பாரதிய ஜனதா கட்சியின் கொடி கம்பத்தை சேதப்படுத்திய மர்ம நபர்களை கைது செய்யக் கோரி அந்த கட்சியினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். பிரதமரின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு அருப்புக்கோட்டை புளியம்பட்டி வெள்ளையாபுரம் தெருவில் கடந்த செப்டம்பர் 15-ஆம் தேதி நகர பாரதிய ஜனதா கட்சி சார்பில் புதியதாக கொடிக்கம்பம் அமைக்கப்பட்டு அதில் பாரதி ஜனதா கட்சியின் கொடி ஏற்றி வைக்கப்பட்டது. இந்த கொடிக்கம்பத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பால்வியாபாரி வெட்டிக்கொலை 8 பேர் கைது ஆயுதங்கள் பறிமுதல் …!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பால் வியாபாரி வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிவகாசி ராணி அண்ணா காலனி சேர்ந்தவர் பால் வியாபாரி முனியசாமி இவரது சகோதரர் சோலையப்பன் வளர்த்துவரும் பன்றிகளை யாரோ அடிக்கடி திருடிச் சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து முனியசாமி மேற்கொண்ட விசாரணையில் பன்றிகளை திருடியது துலுக்கப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிலர் என்பது தெரியவந்துள்ளது. இதை தட்டிக்கேட்ட போது ஏற்பட்ட தகராறில் முனியசாமியை கடந்த 21-ஆம் நாள் மர்ம நபர்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிரிப்பு யோகா பயிற்சி …..!!

விருதுநகரில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட உள்ளவர்களுக்கு மன அழுத்தத்தை போக்கும் வகையில் சிரிப்பு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டத்தில் வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. விருதுநகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வைரஸ் வார்டில் சிகிச்சை பெற்று வருபவர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் சிரிப்பு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மன […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வாகனத்திற்கு தீ வைத்த மர்ம நபர்கள் …..!!

விருதுநகரில் மார்க்சஸ் கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளரின் இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்தது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாத்திமா நகரை சேர்ந்த முருகன் என்பவர் மார்க்சஸ் கம்யூனிஸ்ட் நகர செயலாளராக உள்ளார். வழக்கம்போல் வீட்டிற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த முருகனின் இருசக்கர வாகனத்தில் அதிகாலையில் மர்ம நபர்கள் சிலர் தீ வைத்துவிட்டு தப்பி சென்றனர். சத்தம் கேட்டு வெளியே வந்த அவர் வாகனம் எரிந்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து  தீ அணைக்கப்பட்டது. […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மனைவியை பிரிந்து துடித்த கணவன்… விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை…!!

மனைவி பிரிந்த துக்கத்தால் கணவன் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தாணிப்பாறை ராம்நகரில் உள்ள மலைவாழ் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் சந்தனம் (30). இவர் சென்னையில் பணியாற்றிய போது பிரியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். திருமணம் நடந்து 10 வருடங்கள் ஆகிய நிலையில், கணவன் மனைவி இருவருக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடு காரணமாக பிரியா கணவருடன் சேர்ந்து வாழாமல் சென்னையில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சுகாதாரத்துறை ஊழியர்களை அலைக்கழித்த கொரோனா நோயாளிகள்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கொரோனா  தொற்று  உறுதியாகிய நோயாளிகள் சிகிச்சைக்கு செல்ல மறுத்து சுகாதாரத்துறை ஊழியர்களை அலைக்கழித்ததுடன் வாக்குவாதத்திலும்  ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அருப்புக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட குல்லூர் சந்தை பகுதியில் உள்ள அகதிகள் முகாமில் தொள்ளாயிரத்திற்கும்  மேற்பட்ட அகதிகள்  உள்ளனர். அவர்களுக்கு கடந்த 2 நாட்களுக்கு சிறப்பு பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது  அதில் 16 பேருக்கு கொரோனா தொற்று  இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களில் நான்கு பேர் மட்டுமே சிகிச்சைக்கு ஒத்துழைத்து  மருத்துவமனைக்கு சென்றனர். மீதமுள்ளவர்கள் […]

Categories

Tech |