Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

புகையிலை விற்ற… 5 கடைகாரர்களை… காவல்துறையினர் கைது செய்தனர்…!!

விருதுநகர் மாவட்டத்தில் 5 பெட்டிக்கடைகளில் வைத்திருந்த புகையிலை பாக்கெட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர் டவுன் போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணசாமி மற்றும் செய்யது இப்ராகிம் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சட்ட விரோதமாக 5 பெட்டிகள் கடைகளில் இருந்து புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர். இந்நிலையில் சாத்தூர் காமராஜபுரம் 2-வது தெருவில் சத்தியமூர்த்தி என்பவர் வைத்திருந்த மல்லிகை கடையில் 36 புகையிலை பாக்கெட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து கோபாலபுரத்தில் சங்கரன் என்பவர் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கொரோனா பரவாமல் தடுக்க… தீயணைப்பு வாகனம் மூலம்… கிருமிநாசினி தெளிப்பு…!!

விருதுநகர் மாவட்டத்தில் தீயணைப்பு வாகனம் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு கபசுர குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு பேரூராட்சி பகுதி முழுவதிலும் கொரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்கு தீயணைப்பு வாகனங்கள் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து முத்தாலம்மன் திடலில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் சாலை உள்ளிட்ட முக்கிய இடங்கள் அனைத்திலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல் பொதுமக்களும் பேரூராட்சி சார்பில் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. இதனை வத்திராயிருப்பு பேரூராட்சி செயல் அலுவலர் கண்ணன் தொடங்கி வைத்துள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இருசக்கர வாகனத்தில் சென்ற தொழிலதிபர்… லாரி மோதியதில்… சம்பவ இடத்திலேயே பலி…!!

விருதுநகர் மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த தொழிலதிபர் மீது லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். விருதுநகர் மாவட்டம் என்.ஜி.ஓ காலனி அருகில் உள்ள காந்தி நகரில் முருகன்(60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகன் பிரபாகரன்(36). இவர்கள் சொந்தமாக தொழில் நிறுவனம் வைத்து நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மதுரை சாலையில் உள்ள இவர்களது தொழில் நிறுவனத்திற்கு முருகன் மற்றும் அவரது மகன் இருசக்கர வாகனத்தில் தனித்தனியாக சென்று கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதி வழியாக வந்த லாரி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தேவையின்றி வெளியில் வருபவர்களுக்கு… கொரோனா பரிசோதனை… சுகாதாரத்துறையினர் நடவடிக்கை…!!

விருதுநகர் மாவட்டத்தில் முகக்கவசம் அணியாமலும் தேவையின்றி வாகனங்களில் வருபவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் மைதானத்தில் தற்போது தற்காலிக காய்கறி சந்தை செயல்பட்டு வருகின்றது. அங்கு காய்கறி விற்பனை செய்து வரும் 46 கடை உரிமையாளர்களுக்கு கொரோனா பரிசோதை செய்யப்பட்ட பின்பே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முகக்கவசம் அணியாமல் பலர் காய்கறி வாங்க வருகின்றனர். இதனை கட்டுப்படுத்த துணை போலீஸ் சூப்பிரண்டு நமச்சிவாயம் தலைமையில் காவல்துறையினர் மற்றும் சுகாதாரத்துறை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

எவ்வித தடையின்றி… நள்ளிரவு வரை பேருந்துகள் இயக்கப்படும்… போக்குவரத்து அதிகாரி தகவல்…!!

விருதுநகர் மாவட்டத்தில் மக்களின் தேவைக்கேற்ப இன்று நள்ளிரவு வரை பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து அதிகாரி தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக நாளை முதல் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் அத்தியவசிய பொருட்களை வாங்குவதற்கு நேற்று மாலை முதல் இன்று நள்ளிரவு வரை பொது போக்குவரத்துக்கு அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து விருதுநகர் மாவட்டத்தில் நேற்று மொத்தமாக 35 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து இன்று மக்கள் கூட்டம் அதிகளவில் வருவதால் கூட்ட நெரிசல் ஏற்படக்கூடாது […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சட்டவிரோதமாக மது விற்பனை செய்த… 3 பேர் கைது… 344 மதுபாட்டில்கள் பறிமுதல்…!!

விருதுநகர் மாவட்டத்தில் அனுமதியின்றி மது விற்பனை செய்த 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த மது பாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அம்மாபட்டி காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆலம்பட்டி விலக்கு அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்த சாத்தூர் சேர்ந்த மாரிச்செல்வம்(22) மற்றும் பெரியகொல்லபட்டி சேர்ந்த மாரீஸ்வரன்(51) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இதனையடுத்து அவர்களிடமிருந்த 20,000 ரூபாயையும், 344 […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட… ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ… பொதுமக்களும் போட்டுக்கொள்ள அறிவுறுத்தல்…!!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ மான்ராஜ் நேற்று கொரோனா தடுப்பூசி போட்டுகொண்டுள்ளார். கொரோனா தொற்று 2ஆம் அலையை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி போட்டுக்கொள்வதே சிறந்த வழிமுறையாக இருந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் பல இடங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் மிகவும் வேகமாக நடந்து வருகிறது. இதனையடுத்து தடுப்பூசி போட்டுக் கொண்டால் மட்டுமே நோய் தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். இதனைத்தொடர்ந்து விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ மான்ராஜ் நேற்று அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இறைச்சி விலை உயர்ந்ததை தொடர்ந்து… மீன், கருவாடு விலையும் உயர்வு… அதிர்ச்சியில் அசைவ பிரியர்கள்..!!

விருதுநகர் மாவட்டத்தில் மீன் மற்றும் இறைச்சி விலை உயர்வை தொடர்ந்து பொதுமக்கள் கருவாடு வாங்குவதில் மிகுந்த ஆர்வம் காட்டி வந்த நிலையில் கருவாடு விளையும் சற்று உயர்ந்துள்ளது. கொரோனா 2ஆம் அலை பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடைபிடித்து வரும் நிலையில் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே மளிகை கடைகள், இறைச்சி மற்றும் காய்கறி கடைகளை திறக்க அரசு அனுமதித்துள்ளது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பொதுமக்கள் அனைவரும் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பழக்கடைகள் திறக்க அனுமதி இல்லை… விரக்தி அடைத்த உரிமையாளர்… செய்த செயலால் பரபரப்பு…!!

விருதுநகர் மாவட்டத்தில் போலீசாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் பழக்கடை உரிமையாளர் பழங்களை சாலையில் வீசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள மாடசாமி கோவில் தெருவில் ராஜேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆவரம்பட்டி விலக்கு பகுதியில் பழக்கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலையில் பழங்களை கடையில் இறக்கி கொண்டிருந்தபோது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குருநாதன் அப்பகுதியில் அனுமதியின்றி திறந்திருந்த டீக்கடைக்கு 200 ரூபாய் அபராதம் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மான்களை வேட்டையாடி… இறைச்சி விற்ற மர்ம நபர்கள்… ஒருவரை கைது செய்த வனத்துறையினர்…!!

விருதுநகர் மாவட்டத்தில் மான்களை வேட்டையாடி விற்பனை செய்த நபர்களில் ஒருவரை கைது செய்த வனத்துறையினர் தலைமறைவான 3 பேரை தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்து அதனை பயன்படுத்தி புள்ளி மான், மிலா உள்ளிட்ட வனவிலங்குகளை வேட்டையாடி அதன் இறைச்சிகளை விற்பனை செய்து வருவது வனத்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இந்நிலையில் ராஜபாளையத்தில் இருந்து செண்பகத்தோப்புக்கு செல்லும் சாலையில் அனதலை என்ற பகுதியில் வன காவலர்கள் மற்றும் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கணவனை பிரிந்து… தனியாக வசித்த மனைவி தற்கொலை… போலீசார் தீவிர விசாரணை…!!

விருதுநகர் மாவட்டம் கணவனை பிரிந்து தனியாக வசித்து வந்த மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சேத்தூர் அருகே உள்ள தெற்கு தேவதானம் மேற்கு வீதியில் கார்மேகம்(35) மற்றும் அவரது மனைவி ரோஸ்லின்(33) வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கிடையில் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கடந்த ஒரு மாதமாக இருவரும் தனித்தனியே வசித்து வந்துள்ளனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஆட்சியர் அலுவலகத்திற்கு செல்லும் போது… திடீரென தடுமாறிய இருசக்கர வாகனம்… விபத்தில் ஒருவர் உயிரிழப்பு…!!

விருதுநகர் மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது திடீரென நிலை தடுமாறி விபத்திற்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள செட்டிகுளம் பஞ்சாயத்தில் கருணாநிதி(40) என்பவர் செயலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் உடுப்புகுளத்தை சேர்ந்த தனுஷ்கோடி(62) என்பவருடன் நேற்று இரு சக்கர வாகனம் மூலம் ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து அவர்கள் இருவரும் மதுரை சாலையில் உள்ள மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது திடீரென இருசக்கர வாகனம் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளது. […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சட்டவிரோதமாக மது விற்ற… 2 பேர் கைது… மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார்…!!

விருதுநகர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் சட்டத்திற்கு புறம்பாக மது பாட்டில்கள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் சாத்தூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செய்யது இப்ராஹீம் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது சாத்தூர் கிருஷ்ணன் கோவில் அருகே மதுபாட்டிலை விற்ற போஸ் பாண்டியன்(52) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த 28 மது பாட்டிலை கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்து சாத்தூர் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நவீன இயந்திரத்தின் மூலம்… கிருமிநாசினி தெளிக்கும் பணி… ஊராட்சிமன்ற தலைவர் தொடங்கிவைத்துள்ளார்…!!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தீயணைப்பு வாகனத்தின் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள பந்தல்குடி ஊராட்சியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்றுள்ளது. இதனையடுத்து பந்தல்குடி அரசு மேல்நிலைப்பள்ளி, மெயின் பஜார் போன்ற 12 வார்டுகளிலும் தீயணைப்பு வாகனத்தின் நவீன இயந்திரத்தின் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பு பணியை ஊராட்சி மன்ற தலைவர் பாலாஜி பத்திரிநாத் தொடங்கி வைத்துள்ளார். அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர் சூரியகுமாரி, மண்டல […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

அடிக்கடி சண்டை வந்ததால்… மனைவி எடுத்த விபரீத முடிவு… தீவிர விசாரணையில் போலீசார்…!!

விருதுநகர் மாவட்டத்தில் குடும்ப தகராறு காரணமாக மனைவி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள நாரணாபுரம் அம்மன் நகரை சேர்ந்தவர் ஜெயசீலன். இவரது மகளான ராஜலட்சுமிக்கு அதே பகுதியை சேர்ந்த பாக்யராஜ் என்பவருடன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதியருக்கு தற்போது 2 1/2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் இடையில் அடிக்கடி குடும்ப […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தண்ணீர் குடிக்க சென்ற தூய்மை பணியாளர்… பரிதாபமாக உயிரிழப்பு… விசாரணை நடத்தி வரும் போலீசார்…!!

விருதுநகர் மாவட்டத்தில் பள்ளியில் வேலைபார்க்கும் தூய்மை பணியாளர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் இனாம்ரெட்டியபட்டியில் உள்ள அருந்ததியர் காலனியில் குருசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று பள்ளியில் சென்று வேலை பார்த்துக் கொண்டிருந்த குருசாமி அங்குள்ள சின்டெக்ஸ் தொட்டியில் தண்ணீர் குடித்துக்கொண்டிருந்தபோது திடீரென தவறி தொட்டிற்கு உள்ளே விழுந்துள்ளார். இதனையடுத்து அவருக்கு தலையில் பலத்த […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

அனுமதியின்றி மது விற்பனை… ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார்… 12 மது பாட்டில்கள் பறிமுதல்…!!

விருதுநகர் மாவட்டத்தில் அனுமதியின்றி மது பாட்டில்களை விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் முத்துராமலிங்கம் நகர் பகுதியில் அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்பனை செய்வதாக சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் அவர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின்படி முத்துலிங்கம் நகர் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் ஆறுமுகசாமி(46) என்பவர் தனது வீட்டின் பின் பகுதியில் மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரிடம் நடத்திய […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஒரேநாளில் 337 பேருக்கு தொற்று பாதிப்பு… அதிகரிக்கும் கொரோனா 2ஆம் அலை… முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்…!!

விருதுநகர் மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனா தொற்று பதித்தவர்கள் எண்ணிக்கை 337 ஆக உயர்ந்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் 2ஆம் அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாவட்டத்தில் மொத்தமாக தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 21,250 ஆக இருந்துள்ளது. இதனையடுத்து நேற்று ஒரே நாளில் 337 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே நோய் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 21,587 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்த கொடிய நோய்க்கு 249 […]

Categories
கொரோனா மாவட்ட செய்திகள் விருதுநகர்

அதிகரிக்கும் கொரோனாவின் 2ஆம் அலை… ஒரே நாளில் 237 பேருக்கு பாதிப்பு… கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்…!!

விருதுநகர் மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனா தொற்று பதித்தவர்கள் எண்ணிக்கை 237 ஆக உயர்ந்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் 2ஆம் அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாவட்டத்தில் மொத்தமாக தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 21,033 ஆக இருந்துள்ளது. இதனையடுத்து நேற்று ஒரே நாளில் 237 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே நோய் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 21,270 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்த கொடிய நோய்க்கு 248 […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மேற்குவங்கத்தில் பாஜக ஆதரவாளர்கள் கொல்லப்பட்டதற்கு… மாவட்ட பாஜக தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில்… ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொண்டர்கள்…!!

விருதுநகர் மாவட்டத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை எதிர்த்து பாஜக நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எதிராக பாஜக மாவட்ட தலைவரான ராதாகிருஷ்ணன் தலைமையில் பாஜக தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பாஜக ஆதரவாளர்கள் கொலை செய்யப்பட்டதற்கும் தக்க தண்டனை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் விருதுநகர் மாவட்ட செயலாளர் சந்திரன், விவசாய அணி மாவட்ட பொது செயலாளர் ஸ்ரீ காந்த், […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்பனை… ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார்… கைது செய்யப்பட்ட 4 பேரிடம் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் அனுமதியின்றி மது விற்பனை செய்த 4 பேரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது வெவ்வேறு இடங்களில் மது விற்பனை செய்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அதன்படி செங்கமலப்பட்டி பகுதியில் சிவகாசி கிழக்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது காரனேசன் காலனியை சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவர் அனுமதியின்றி மது விற்றதால் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த 8 […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தொழிலாளர்களின் கூலி குறைக்கப்படும் நிலை… மூலப்பொருட்களின் விலை உயர்வு… தீப்பெட்டி உரிமையாளர்கள்கடும் அவதி…!!

தீப்பெட்டி மூலப்பொருட்களின் விலை உயர்வால் தீப்பெட்டி ஆலைகளின் உரிமையாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஒன்றியம், ஏழாயிரம்பண்ணை, கீழ செல்லையாபுரம், கணஞ்சாம்பட்டி, சிவ சங்கு பட்டி, இ.எல்.ரெட்டியார்பட்டி, ஊத்துப்பட்டி, செவல்பட்டி ஆகிய சுற்றுவட்டாரத்தில் பல தீப்பெட்டி தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றது. இந்நிலையில் கடந்த ஆண்டு கையினால் தயாரிக்கப்படும் தீப்பெட்டிகளுக்கு 5%  மற்றும் இயந்திரத்தால் தயாரிக்கப்படும் தீப்பெட்டிகளுக்கு 12% ஜிஸ்டி வரி இருந்துள்ளது. ஆனால் தற்போது கையினால் தயாரிக்கப்படும் தீப்பெட்டிகளுக்கும் 12% ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

விசாரணைக்கு அழைத்து வந்த இருவருக்கு கொரோனா… சுகாதாரத்துறையினர் தலைமையில்… காவல்நிலையம் முழுவதிலும் தெளிக்கப்பட்ட கிருமிநாசினி…

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காவல்நிலையத்தில் விசாரணை கைதிகள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் காவல்நிலையம் முழுவதிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள டவுன் போலீஸ் நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெவ்வேறு குற்றங்களை சார்ந்த இரு விசாரணை கைதிகளை போலீசார் அழைத்து வந்து மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் விசாரணை முடிந்தபின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அவர்கள் இருவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து அவர்கள் இருவருக்கும் நோய் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து இருவரையும் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

திருச்சுழி சட்டமன்ற தொகுதி… 60,000 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி… நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள்…

திருச்சுழி சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட தங்கம் தென்னரசு வெற்றி பெற்றுள்ளார். விருதுநகர் மாவட்டம் திருச்சுழி சட்டமன்ற தொகுதியில் கடந்த ஏப்ரல் 6 தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றுள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 2,20,720 வாக்காளர்கள் உள்ளனர். மேலும் இங்கு 77.44% வாக்குகள் பதிவாகியுள்ளது. இதனையடுத்து சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை நேற்று நடைபெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து திமுக சார்பில் போட்டியிட்ட தங்கம் தென்னரசு 102,225 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்துள்ளார். மேலும் AIMMK சார்பில் போட்டியிட்ட ராஜசேகர் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதி… நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள்… மாபெரும் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்…!!

அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட எஸ்.எஸ் .ஆர் ராமச்சந்திரன் வெற்றி பெற்றுள்ளார். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் கடந்த ஏப்ரல் 6 தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றுள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 2,22,980 வாக்காளர்கள் உள்ளனர். மேலும் இங்கு 75.58% வாக்குகள் பதிவாகியுள்ளது. இதனையடுத்து சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை நேற்று நடைபெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து திமுக சார்பில் போட்டியிட்ட எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் 91,040 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்துள்ளார். மேலும் அதிமுக சார்பில் போட்டியிட்ட வைகை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சிவகாசி சட்டமன்ற தொகுதி… நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள்… 17,000 வாக்குகள் கூடுதலாக பெற்று தேசிய காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி…!!

சிவகாசி சட்டமன்ற தொகுதியில் இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அசோகன் வெற்றி பெற்றுள்ளார். விருதுநகர் மாவட்டம் சிவகாசி சட்டமன்ற தொகுதியில் கடந்த ஏப்ரல் 6 தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றுள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 2,60,941 வாக்காளர்கள் உள்ளனர். மேலும் இங்கு 70% வாக்குகள் பதிவாகியுள்ளது. இதனையடுத்து சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை நேற்று நடைபெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அசோகன் 78,947 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்துள்ளார். மேலும் அதிமுக சார்பில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சாத்தூர் சட்டமன்ற தொகுதி… நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள்… 11000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மதிமுக வேட்பாளர்…!!

சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் மதிமுக சார்பில் போட்டியிட்ட ரகுராமன் வெற்றி பெற்றுள்ளார். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் கடந்த ஏப்ரல் 6 தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றுள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 2,51,502 வாக்காளர்கள் உள்ளனர். மேலும் இங்கு 75.16% வாக்குகள் பதிவாகியுள்ளது. இதனையடுத்து சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை நேற்று நடைபெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து மதிமுக சார்பில் போட்டியிட்ட ரகுராமன் 74,174 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்துள்ளார். மேலும் அதிமுக சார்பில் போட்டியிட்ட ரவிசந்திரன் 62,995 வாக்குகள் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஸ்ரீ வில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதி… நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள்… வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர்…

ஸ்ரீ வில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட மான்ராஜ் வெற்றி பெற்றுள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீ வில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியில் கடந்த ஏப்ரல் 6 தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றுள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 2,49,580 வாக்காளர்கள் உள்ளனர். மேலும் இங்கு 73.03% வாக்குகள் பதிவாகியுள்ளது. இதனையடுத்து சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை நேற்று நடைபெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து அதிமுக சார்பில் போட்டியிட்ட மான்ராஜ் தலா 70,475 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்துள்ளார். இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல்… ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி… வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்…!!

ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட தங்கபாண்டியன் வெற்றி பெற்றுள்ளார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதியில் கடந்த ஏப்ரல் 6 தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றுள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 2,38,701 வாக்காளர்கள் உள்ளனர். மேலும் இங்கு 73.86% வாக்குகள் பதிவாகியுள்ளது. இதனையடுத்து சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை நேற்று நடைபெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து  திமுக சார்பில் போட்டியிட்ட சௌ.தங்கபாண்டியன் தலா 74,158 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக சார்பில் போட்டியிட்ட ராஜேந்திர பாலாஜி தலா 70,260 வாக்குகள் பெற்றுள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மாதவராவ் திடீர் மறைவால் குடும்பத்தினர் – காங்கிரசார் அதிர்ச்சி…!!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 63. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் போட்டியிட்டவர் மாதவராவ். நுரையீரல் தொற்று காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்ட இவர் மதுரை தனியார் மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவரது உயிர் பிரிந்தது. மறைந்த மாதவராவ்தேர்தல் பரப்புரையின் போதே உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனால் […]

Categories
அரசியல் மாவட்ட செய்திகள் விருதுநகர்

ராஜபாளையம் சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ராஜபாளையம் விவசாயத்தையும் பஞ்சு ஆலை மற்றும் நூற்பாலைகளில் சார்ந்துள்ள நகரம். ராஜபாளையத்தின் வீரம் மிகுந்த நாய்கள் உலகம் முழுவதும் புகழ் பெற்றவைமட்டுமின்றி இந்திய ராணுவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ராஜபாளையம் சாம்பல் நிற அணில்கள் அதிக அளவில் காணப்படும் பகுதி ஆகும். ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒருமுறையும், காங்கிரஸ் கட்சியும் சுயேச்சை வேட்பாளர்களும் தல 2முறையும் வெற்றி பெற்றுள்ளனர். அதிமுக வேட்பாளர்கள் 5 முறையும், திமுக 3 […]

Categories
அரசியல் மாவட்ட செய்திகள் விருதுநகர்

அருப்புக்கோட்டை சட்ட மன்ற தொகுதி: மக்களின் கோரிக்கைகள் எதிர்பார்ப்புகள் என்ன ?

அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியின் பிரதான தொழிலாக கைத்தறி நெசவு அமைந்துள்ளது. மனம் வீசும் மல்லிகை பூக்கள் அதிகளவில் விளைவிக்கப்படுகிறது. கம்பு, சோளம், உளுந்து போன்ற சிறுதானிய வகைகள் சாகுபடியும் அதிகம். அருப்புக்கோட்டை தொகுதியில் 6 முறை அதிமுகவும், 5முறை திமுகவும் வெற்றி பெற்றுள்ளன. 1971ஆம் ஆண்டு தேர்தலில் ஒரு முறை மட்டும் பாவர்ட் பிளாக் கட்சி வெற்றி பெற்றுள்ளது. 1977 ஆம் ஆண்டு அருப்புக்கோட்டை தொகுதியில் வெற்றிபெற்ற எம்ஜிஆர் முதலமைச்சரானார். பெண் வாக்காளர்கள் மிகுதியாக உள்ள இந்த […]

Categories
அரசியல் மாவட்ட செய்திகள் விருதுநகர்

திருச்சுழி சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

2006 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுசீரமைப்பு ம்போது உருவான தொகுதி திருச்சுழி ஆகும். விவசாயம் முக்கிய தொழிலாக இருந்தாலும் மழையை மட்டுமே நம்பி உள்ள தொகுதி. புகழ்பெற்ற பூமிநாதர் கோவில் உள்ள திருச்சுழியில் தான் ரமணமகரிஷி பிறந்தார். அருப்புக்கோட்டை தொகுதியில் இணைந்திருந்த திருச்சுழி மறுசீரமைப்பின் போது புதிய தொகுதி ஆக உருவெடுத்தது. தொகுதி உருவான பிறகு நடைபெற்ற இரு தேர்களிலும் திமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு வெற்றி பெற்றுள்ளார். விருதுநகர் மாவட்டத்திலேயே […]

Categories
அரசியல் மாவட்ட செய்திகள் விருதுநகர்

சிவகாசி சட்ட மன்ற தொகுதி: மக்களின் கோரிக்கைகள் எதிர்பார்ப்புகள் என்ன ?

சிவகாசி என்றாலே பட்டாசும், அச்சுக் கலையும் தான் அனைவருக்கும் நினைவு வரும்.வடக்கே காசி தெற்கே தென்காசி நடுவே சிவகாசி என சொல்வது வழக்கம். மேலும் எண்ணற்ற சிறு குறு தொழில்கள் உள்ளதால் குட்டி ஜப்பான் என புகழ் பெற்றது சிவகாசி. சிவகாசி சட்டமன்ற தொகுதி அதிமுக 5 முறையும் வெற்றி பெற்றுள்ளது. திமுக, காங்கிரஸ்,தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகள் தலா 2முறையும், சுதந்திரா கட்சி, ஜனதா கட்சி, மதிமுக தலா 1 முறையும் வெற்றி பெற்றுள்ளன. 2011 […]

Categories
அரசியல் மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஸ்ரீ வில்லிபுத்தூர் சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகளும் குறைகளும் ?

விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியானது மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இங்கு உள்ள ஆண்டாள் கோவில் மிகவும் பிரபலமானதாகும். இங்குள்ள 192 அடி உயர கோபுரமே தமிழக அரசின் சின்னமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. தித்திக்கும் இனிப்பு சுவை கொண்ட பால்கோவாவும் ஸ்ரீவில்லிபுத்தூரில் தனி சிறப்பாகும். கடந்த ஆண்டு பால்கோவாவுக்கான புவிசார் குறியீடு ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வழங்கப்பட்டது. மெட்ராஸ் மாகாணத்தின் முதலமைச்சராக பதவி வகித்த பி.எஸ். குமாரசாமி ராஜா வென்ற தொகுதி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகும். திமுக, காங்கிரஸ் கட்சிகள் […]

Categories
அரசியல் மாவட்ட செய்திகள் விருதுநகர்

சாத்தூர் சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

விருதுநகர் மாவட்டத்தின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள சாத்தூர் தீப்பெட்டி தொழிலை அடிப்படையாகக் கொண்ட நகரமாகும். சாத்தூரில் விளையும் வெள்ளரிக்காயும் அங்கு தயாரிக்கப்படும் காரசேவும் அதன் ருசிக்காகவே புகழ் பெற்றவையாகும். இங்குள்ள பெருமாள் கோவில் 500 ஆண்டுகள் பழமையானது ஆகும். இந்த தொகுதியில் இரு முறை போட்டியிட்டு வென்று காமராஜர் அப்போது முதலமைச்சராக பதவியேற்றார். சாத்தூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி 3முறையும், சுதந்திரா மற்றும் பார்வர்டு பிளாக் கட்சி தலா 1முறையும் வெற்றி பெற்றுள்ளன. அதிமுக 6 முறையும், […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டிங்களா….? சட்டவிரோதமாக மது விற்பனை…. ரோந்துப்பணியில் சிக்கிய வாலிபர்….!!

சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இருக்கன்குடி பகுதியில் பூமிராஜன் என்னும் வாலிபர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் அருகே ஆற்றுப்பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் இருக்கன்குடி பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக இருக்கன்குடி காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் அளிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் இருக்கன்குடி காவல்துறை துணை ஆய்வாளர் சந்தனமாரிமுத்து தலைமையிலான காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மருந்து தப்பா கொடுத்துருக்காங்க… கவனக்குறைவால் பறிபோன சிறுமியின் உயிர்… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!!

தவறான மருந்து அளித்து உயிரிழந்த சிறுமியின் தாயாருக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தமிழ் செல்வி என்பவர் வாழ்ந்து வந்துள்ளார். இவருக்கு சங்கீதா  என்ற 8 வயது மகள் இருந்தார். தமிழ்செல்வி கடந்த 2014 ஆம் ஆண்டு அவரது மகளுக்கு தொண்டையில்  பாதிப்பு ஏற்பட்டதால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அப்போது அறுவை சிகிச்சை நடந்து சிறிது […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“நான் அந்த பொண்ண காதலிக்கிறேன்” மறுப்பு தெரிவித்த தாய்…. ராணுவ வீரரின் விபரீத முடிவு….!!

காதலுக்கு தாய் எதிர்ப்பு தெரிவித்ததால் ராணுவ வீரர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒட்டபிடாரம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு சாந்தி என்ற மனைவியும், ஒரு மகளும், இரண்டு மகன்களும் உள்ளனர். சில வருடங்களுக்கு முன் முருகன் உடல்நலம் சரியில்லாமல் இறந்துவிட்டார். இதையடுத்து முருகனின் மனைவி சாந்தி குடும்பத்தை கவனித்து வந்துள்ளார். இவர்களது இளைய மகன் பாபு ராணுவ வீரராக பணியாற்றி வந்தார். இவர் விடுமுறை காரணமாக சில […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பட்டாசு ஆலை விபத்து… தந்தை-மகள் மரணம்… சோகத்தில் உறவினர்கள்..!!

பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தால் தந்தை-மகள் இருவரும் பலியான சம்பவம் உறவினர்களை சோகத்தை ஆழ்த்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காளையார்குறிச்சி பகுதியில் ரத்தினசாமி என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி சந்திரா. சந்திராவும் அவரது தந்தை பொன்னுசாமி என்பவரும் அதே பகுதியில் உள்ள பட்டாசு ஆலை ஒன்றில் வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் சென்ற வியாழன்கிழமை அன்று அந்த பட்டாசு ஆலையில் எதிர்பாராத விதமாக வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த விபத்தில் சந்திரா உட்பட மூன்று […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இதுக்கு போய் இப்படி பண்ணலாமா… பெண் எடுத்த விபரீத முடிவு… குழந்தைகளை தவிக்க விட்ட தாய்…!!

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருத்தங்கல் பகுதியில் நாகராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சென்ற 10 வருடங்களுக்கு முன் கார்த்திகைப்பட்டி பகுதியை சேர்ந்த ராமலட்சுமி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிகளுக்கு 2 பிள்ளைகள் இருகின்றனர். இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே சில மாதங்களாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து […]

Categories
மாவட்ட செய்திகள் விபத்து விருதுநகர்

கட்டுப்பாடில்லாமல் ஓடிய வாகனம்…! பின்னர் நடந்த அதிர்ச்சி… விருதுநகரில் சோகம் ..!!

கட்டுப்பாட்டை இழந்த வாகனம் மூதாட்டியின் மீது ஏறி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்தவர் சீனியம்மாள், இவரது கணவர் வீரப்பெருமாள் வயது 80. இவர்கள் சாத்தூர் பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வருகின்றனர். சீனியம்மாள் அவரது வீட்டின் வேலைகளை முடித்துவிட்டு தனது வீட்டின் முன்பு அமர்ந்து அவரது கணவருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியாக வந்த வாகனம் சீனியம்மாள் மீது மோதியது. அதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை அறிந்து அங்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நாளைக்கு களைகட்டும் ஜல்லிக்கட்டு…. 150 காளைகளை அடக்கப் போகும் வீரர்கள்…. தயார் நிலையில் வாடிவாசல்….!!

நாளை வத்திராயிருப்பு பகுதி அருகே நடைபெற உள்ள ஜல்லிக்கட்டிற்கு 150 காளைகள் மற்றும் 150 மாடுபிடி வீரர்கள் தயார் நிலையில் உள்ளன. விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள வ.புதுப்பட்டி பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி நாளை நடைபெற இருக்கிறது. இதற்காக வ.புதுப்பட்டி வாடிவாசலை அப்பகுதி மக்கள் மற்றும் விழா கமிட்டியினர் தயார் நிலையில் வைத்துள்ளனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்வதற்காக அப்பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 150 மாடுபிடி வீரர்கள் மற்றும் 150 காளைகள் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சட்டவிரோதமாக மது விற்பனை…. ரோந்து பணியில் போலீசார்…. 3 பேர் அதிரடி கைது….!!

சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் பகுதி காவல்துறை துணை ஆய்வாளர் சுந்தர்ராஜ் தலைமையிலான காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் ஒத்தையால் கிராமத்தில் வசித்து வரும் கருப்பசாமி என்பவர் அப்பகுதியில் உள்ள பேருந்து நிலையம் அருகே மதுபாட்டில்களை மறைத்து வைத்து விற்பனை செய்துள்ளார். அப்போது கருப்பசாமியை மடக்கி பிடித்த சாத்தூர் காவல்துறையினர் அவரை கைது செய்தனர். இதையடுத்து பெரியகொல்லபட்டி பகுதியில் வசித்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தடையை மீறி லாட்டரி விற்பனை…. காவல்துறைக்கு வந்த தகவல்…. மடக்கி பிடித்த போலீஸ்….!!

சத்திரம்பட்டி அருகே சட்டவிரோதமாக லாட்டரி சீட்டு விற்றுக் கொண்டிருந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சத்திரம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக கேரள மாநிலத்தின் லாட்டரி சீட்டை சிலர் விற்பனை செய்து வந்துள்ளனர். இதுகுறித்து கீழ ராஜகுலராமன் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இந்த ரகசிய தகவலையடுத்து சத்திரம்பட்டி பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டடனர். அப்போது அங்கு சட்டத்திற்கு புறம்பாக லாட்டரி சீட்டை ஒருவர் விற்றுக்கொண்டிருந்தார். அவரை போலீசார் மடக்கி பிடித்த ராஜகுலராமன் காவல்துறையினர் விசாரணை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பட்டாசு ஆலையில் விபத்து…. தீவிர சிகிச்சையில் தொழிலாளர்கள்…. அதிகரித்துவரும் பலி எண்ணிக்கை….!!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 20-ற்க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அச்சங்குளத்தில் பட்டாசு ஆலயம் ஒன்று இயங்கி வருகிறது. இதில் கடந்த வாரம் 12ஆம் தேதி எதிர்பாராதவிதமாக வெடி விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் 20 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வைஜெயந்தி மாலா […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சுவரை சீரமைக்க சென்றவர்… திடீரென வந்து தீண்டிய பாம்பு… முதியவருக்கு நடந்த சோகம்..!!

பாம்பு கடித்து முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கலைஞர் காலனியில் 52 வயதான ஆபிரகாம் என்னும் முதியவர் வசித்து வந்தார். இவர் பட்டாசு தொழிற்சாலையில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் அவர் தனது வீட்டின் பின்புறத்தில் உள்ள சுவரில் காணப்பட்ட ஓட்டையை அடைப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அந்த ஓட்டையில் இருந்து வந்த பாம்பு எதிர்பாராத விதமாக ஆபிரகாமை கடித்ததால் அவர் மயங்கி விழுந்து விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆபிரகாமின் குடும்பத்தினர் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

விருச்சாசனத்தில் 1.30 மணி நேரம் நின்று உலக சாதனை …!!

ராஜபாளையத்தில் பத்தாம் வகுப்பு மாணவர் 3 அடி உயரம் கொண்ட செங்கலில் விருச்சாசனத்தில் ஒன்றரை மணி நேரம் நின்றபடி உலக சாதனை செய்தார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் யோகா மூலம் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இந்து மேல்நிலைப்பள்ளி மாணவன் டால்பின்ராஜ் செங்கலை 3 அடி உயரத்திற்கு அடுக்கி அதன்மீது ஒற்றைக் காலில் நின்றபடி விருச்சாசனம் என்ற யோகாசனத்தை ஒன்றரை மணி நேரம் நின்று உலக சாதனை செய்தார். இதற்கு முன்பு இந்த சாதனையை சென்னையை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சாலை விபத்தில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர் உயிரிழப்பு …!!

விருதுநகர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் உயிரிழந்தார். விருதுநகர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ரவிபாண்டி என்பவர் வெச்சக்கரபட்டியில் உள்ள தன் மாமியார் வீட்டுக்கு சென்றார். அப்போது சாலையில் பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் ரவிபாண்டி மீது மோதியது. இதில் ரவிபாண்டி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். இதனையடுத்து பொதுமக்கள் ரவிபாண்டியை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயர் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பட்டா கத்தியுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய 7 பேர் கைது ….!!

விருதுநகரில் பட்டா கத்தியுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய கல்லூரி மாணவர்கள் 7 பேரை போலீசார் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டம் கத்தாளம்பட்டி தெருவைச் சேர்ந்த கல்லூரி மாணவர் சிவலிங்கம் தனது பிறந்தநாளை சக நண்பர்களுடன் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி கொண்டாடினார். பின்னர் அதனை வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரல் ஆன நிலையில். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் பொதுமக்களை அச்சுறுத்தும் […]

Categories

Tech |