வேப்பனப்பள்ளி அருகே 4 யானைகள் விவசாய நிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள வேப்பனப்பள்ளி அருகே இருக்கும் தளிக்கோட்டூர் வனப்பகுதியில் 4 யானைகள் முகாமிட்டிருக்கின்றது. இந்த யானைகள் வனப்பகுதியை ஒட்டி உள்ள விவசாய நிலங்களில் நேற்று முன்தினம் புகுந்து நாசம் செய்துள்ளது. இதனால் கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். வனத்துறையினர் பட்டாசுகள் வெடித்து 4 யானைகளையும் வனப்பகுதிக்குள் விரட்ட முயற்சித்தனர். ஆனால் யானைகள் சிகரமாகனப்பள்ளி வனப்பகுதிக்குள் சென்று பதுங்கி விட்டன. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் […]
