தனிமைப்படுத்தப்பட்டவர் தப்பி ஓடியதால் அவரை துரத்தித்பிடித்த போலீசார் கை கால்களைக் கட்டி மருத்துவ ஊழியர்களிடம் ஒப்படைத்துள்ளனர். கேரளாவில் பந்ததுட்டான் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது முககவசத்தை கழுத்தில் மாட்டிக்கொண்டு ஒருவர் வந்து இருக்கின்றார். அப்போது அவரை விசாரணை செய்த போலீசாரை எதிர்த்துப் பேசிய அவர் தனக்கு கொரோனோ இல்லை என சவுதியில் கொடுத்த பரிசோதனை சான்றிதழ் வீட்டில் உள்ளது எனவும் இதனால் நான் முககவசம் அணிய வேண்டிய அவசியமில்லை என்றும் போலீஸ் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். […]
