கார் மோதி மின்கம்பம் சேதமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பி.எஸ்.கே. நகரில் கோபிகிருஷ்ணா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது காரில் ராஜபாளையம் நீதிமன்றம் வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது தீடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் காம்பவுண்ட் சுவர், மின்கம்பம் மற்றும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் மீது என அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மின்கம்பம் முற்றிலும் சேதமடைந்துள்ளது. இதனால் அந்த பகுதியில் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்து. இது குறித்து […]
