வியாபாரி வீட்டில் தங்க நகையை திருடிச் சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சுத்தமல்லி பகுதியில் தங்கபாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் தேங்காய் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு ஜமுனாராணி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் இவரது வீட்டின் பீரோவில் வைத்திருந்த 5 பவுன் தங்க சங்கிலி திடீரென காணாமல் போனது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த தங்கப்பாண்டி சுத்தமல்லி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு […]
