திண்டுக்கல் மாவட்டம் பழனியில் 1 மணி நேரம் பெய்த கனமழையால் கடைகளுக்குள் தண்ணீர் புகுந்தது. கடந்த சில தினங்களாக பழனியில் கடும் வெயில் நிலவி வருகிறது. இதனால் பழனி முருகன் கோவிலுக்கு வரும் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கொளுத்தும் வெயிலால் அவதி அடைந்து வந்தனர். இதன்காரணமாக தர்பூசணி, இளநீர் ஆகிய விற்பனை கடைகள் சாலையோரங்களில் புற்றீசல் போல முளைத்துள்ளன. அந்தக் கடைகளுக்கு சென்று மக்கள் தாகம் தணித்து வந்தனர். இந்த நிலையில் பழனி மற்றும் அதன் சுற்றுவட்டார […]
