உலக அளவில் அனைவரையும் வியக்க வைக்கும் புரியாத புதிராக உள்ள கிராமம் இது. அந்த கிராமத்தில் எங்கு திரும்பினாலும் மக்கள் அனைவரும் கண்களுக்கு இரண்டு இரண்டாகவே தெரிகின்றனர். ஏனென்றால் அது இரட்டையர்கள் அதிகம் வசிக்கும் கிராமம். கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள கொடினி என்ற கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட இரட்டையர்கள் வசித்து வருகின்றனர். கிட்டத்தட்ட 20 ஆயிரம் பேர் வசித்து வரும் அந்த கிராமத்தில் இத்தனை இரட்டையர்கள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் வியப்புடன் காரணத்தை கண்டறிந்து வருகிறார்கள். […]
