பண்டிகை கால விடுமுறையால் சென்னையில் இருந்து செல்லும் விமானங்களுக்கான கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. சபரிமலை சீசன், கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பள்ளி விடுமுறையை ஒட்டி விமான நிலையத்தில் பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகையை சொந்த ஊர்களில் பொதுமக்கள் கொண்டாட ஆண்டுதோறும் போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பேருந்துகள், தெற்கு ரயில்வே சார்பில் ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி, பொதுமக்கள் சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் […]
