லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட பயணிகள் விமானத்தில் லேசர் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து கடந்த திங்கட்கிழமை அன்று பயணிகள் விமானமான விர்ஜின் அட்லாண்டிக், டெல் அவிவ் புறப்பட்டபோது லேசர் தாக்குதலுக்குள்ளானது. இதனால் ஒரு விமானிக்கு கண்ணில் பார்வை பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து விமானம் புறப்பட்டு சென்ற சுமார் 20 நிமிடங்களில் பிரான்ஸ் தலைநகர் பாரீசை நெருங்கும் சமயத்தில் கட்டுப்பாட்டு அறைக்கு விமான குழுவினரால் அவசர சமிக்கை அனுப்பப்பட்டுள்ளது. […]
