ஈரானில் ஜெட் விமானம் ஒன்று புறப்படும்போது வெளியேறக்கூடிய அமைப்பு திடீரென்று இயங்கியதில் விமானிகள் இருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானில் Khuzestan பகுதியில் இருக்கும் Dezful என்ற விமானப்படைத்தளத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று F-5 என்ற இரண்டு இருக்கைகள் உடைய ஜெட் விமானம் புறப்படுவதற்கு தயார் நிலையில் இருந்திருக்கிறது. அப்போது திடீரென்று, எதிர்பாராத விதமாக விமானத்தின் வெளியேறக்கூடிய அமைப்பு இயங்கியதால், Hossein Nami மற்றும் Kianoush Basti என்ற விமானிகள் இருவர் பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் […]
