சிரியாவில் வான் தாக்குதல் நடத்த அமெரிக்க ராணுவம் தயாரான நிலையில் ஜனாதிபதி ஜோ பைடன் திடீரென தாக்குதலை ரத்து செய்தார். சிரியாவில் பிப்ரவரி 26-ஆம் தேதி அமெரிக்க விமானப்படை தாக்குதல் நடைபெற்றது .அதில் முதல் தாக்குதல் முடிந்த 30 நிமிடத்தில் இரண்டாவது தாக்குதலை நிகழ்த்தும் நிலையில் ஜனாதிபதி ஜோ பைடன்தீடிரென அந்த தாக்குதலை நிறுத்துமாறு அறிவித்தார். ஏனெனில் இரண்டாவது தாக்குதல் நடத்துவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதியில் ஒரு பெண்மணியும் சில குழந்தைகளும் உள்ளதாக அதிகாரிகளின் தரப்பிலிருந்து ஜனாதிபதிக்கு தெரியபடுத்தினார். […]
