பிரேசிலில் விமான பணிப்பெண் விமானத்தில் மின் கசிவு ஏற்பட்டதால் வெடித்துச் சிதற வாய்ப்பிருப்பதாகக் கூறியவுடன் அனைத்து பயணிகளும் அவசர வழி மூலம் இறங்கியிருக்கிறார்கள். பிரேசில் நாட்டில் இருக்கும் Cuiabá என்னும் நகரின் சர்வதேச விமான நிலையமான Marechal Rondon-லிருந்து, The Azul Brazilian Airlines நிறுவனத்திற்குரிய விமானத்தில், 132 பயணிகள் நேற்று முன்தினம் அதிகாலையில் Sao Paolo-விற்கு பயணித்திருக்கிறார்கள். இந்நிலையில் விமானம் புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில், விமான பணிப்பெண், “விமானம் வெடித்து சிதறப் போகிறது, அனைவரும் […]
