விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் சேதமடைந்த நிலையில் திரும்பியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துருக்கியில் சரக்கு விமானமான TK-6220 என்ற விமானம் இஸ்தான்புல் அடார்ட்டக் விமான நிலையத்திலிருந்து கஜகஸ்தானில் Almaty என்ற நகரத்திற்கு சென்றுள்ளது. இதனை தொடர்ந்து விமானம் புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில் பறவைகள் கூட்டமாக மோதியதில் விமானம் சிக்கி சேதமடைந்துள்ளது. இதனைத்தொடர்ந்து விமானி உடனடியாக அடார்டக் விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு அவசரமாக விமானத்தை தரையிறக்க வேண்டும் என்று தகவல் தெரிவித்துள்ளார். […]
