நடிகர் விமல் கொடுத்த புகாரின்படி சினிமா தயாரிப்பாளர்கள் சிங்கார வேலன், தினேஷ், கோபி போன்றோர் மீதான மோசடி வழக்கை கடந்த சில மாதங்களுக்கு முன்பு விருகம்பாக்கம் காவல்துறையினர் பதிவு செய்தனர். இவ்வழக்கை ரத்துசெய்யக் கோரி கோபி தொடர்ந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் அரசு தரப்பில் ஆஜரான குற்றவியல் வக்கீல் கோகுல கிருஷ்ணன், வழக்கை ரத்துசெய்யக்கூடாது என வாதிட்டார். அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் ஆர்.வெங்கடேஷ், மனுதாரருக்கு எதிரான புகாரில் குற்றச்சாட்டுக்கு […]
