சேலம் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண் தவறி விழுந்த நிலையில் பாதுகாப்பு படை வீரர் அவரை காப்பாற்றியுள்ளார். சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து கரூர் செல்லும் பயணிகள் ரயில் நேற்று மாலை முதலாவது நடைமேடையில் இருந்து கிளம்பியது. ரயில் புறப்பட்ட சமயத்தில் ராசிபுரத்தை சேர்ந்த பெண் ஒருவர் வேகமாக வந்து ரயிலில் ஏற முயற்சி செய்தார். அப்போது அவரின் கால் இடறி ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே உள்ள சிறிய இடைவெளியில் சிக்க இருந்தது. […]
