Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்…. கணவன்-மனைவி பலி…. கிருஷ்ணகிரியில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் கணவன் மனைவி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஐகுந்தம் பகுதியில் அன்பு(27) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு செமிதா(21) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 மாத ஆண் குழந்தை இருக்கிறது. நேற்று அன்பு தனது மனைவி மற்றும் குழந்தையுடன் சொந்த ஊருக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். இந்நிலையில் சாம்பல்பள்ளம் பகுதியில் இருக்கும் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“கல்லட்டி மலைப்பாதையில் தொடர்ந்து நடக்கும் விபத்துகள்”…. போலீசார் எச்சரிக்கை…!!!!!

விபத்துக்கள் தொடர்ந்து நடைபெறுவதால் தடையை மீறி கல்லட்டி மலைப்பாதையில் வெளி மாநில பதிவெண் கொண்ட வாகனங்களை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் இருந்து கல்லட்டி செல்லும் மலைப்பாதை வழியாக வெளியூர் மற்றும் வெளி மாநில பதிவெண் கொண்ட சுற்றுலா வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்ட நிலையில் சென்னையிலிருந்து 20க்கும் மேற்பட்டோர் சுற்றுலா வேனில் ஊட்டிக்கு வந்த பொழுது இவர்கள் ஊட்டியை சுற்றிவிட்டு மசினக்குடிக்கு  கல்லட்டி மலைப்பாதை […]

Categories
தேசிய செய்திகள்

திடீரென ஏற்பட்ட கார் விபத்து….. அனாதையான குழந்தை…. பெரும் சோகம்….!!!!!

கேரள மாநிலம் கொல்லம் அருகில் உள்ள புனலூர் பகுதியில் தினேஷ் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மனைவி அஞ்சு. இந்த தம்பதி தங்களது மூன்று மாத குழந்தையுடன் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது கொட்டாரக்கரை பகுதி நோக்கி சென்றுகொண்டிருந்த கார் தினேஷ் கிருஷ்ணனின் காரில் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் தினேஷ் கிருஷ்ணனும் மனைவி அஞ்சுவும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவரின் 3 மாத குழந்தை காயத்துடன் உயிர் தப்பியது. மற்றொரு காரில் இருந்தவர்கள் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மொபட் மீது கார் மோதல்…. கோர விபத்தில் 2 பேர் பலி…. தென்காசியில் பெரும் சோகம்….!!!

மொபட் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள புளியங்குடியில் விவசாயியான அன்பு செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 1 மகள், மகன் ஆகியோர் இருக்கின்றனர். இவருக்கு சொந்தமான வயல் புளியங்குடியில் இருக்கிறது. இவருடைய வயலில் கலாராணி என்பவர் வேலைப்பார்த்து வந்துள்ளார். இவருடைய கணவர் வெளிநாட்டில் வேலைப்பார்த்து வருகிறார். இவர்களுக்கு விஷால் மற்றும் சந்தன பாண்டி என்ற 2 […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்- தனியார் பேருந்து மோதல்…. துடிதுடித்து இறந்த வாலிபர்கள்…. கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அரியாங்குப்பம் பகுதியில் பிரபு(23) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தனியார் எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பிரபு தனது நண்பரான நவீன்குமார்(22) என்பவருடன் சேலம் மாவட்டத்தில் உள்ள முத்துமலை முருகன் கோவிலுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இவர்கள் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“கல்லட்டி மலைப்பாதையில் வேன் கவிழ்ந்து பெண் பலி”… அனுமதி இன்றி செயல்பட்டு வந்த விடுதி…. 2 பேர் கைது…!!!!!

அனுமதி இன்றி செயல்பட்டு வந்த விடுதி உரிமையாளர் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் இருந்து கல்லட்டி செல்லும் மலைப்பாதை வழியாக வெளியூர் மற்றும் வெளி மாநில பதிவெண் கொண்ட சுற்றுலா வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்ட நிலையில் சென்னையிலிருந்து 20க்கும் மேற்பட்டோர் சுற்றுலா வேனில் ஊட்டிக்கு வந்த பொழுது இவர்கள் ஊட்டியை சுற்றிவிட்டு மசினக்குடிக்கு  கல்லட்டி மலைப்பாதை வழியாக சென்ற பொழுது 13வது கொண்டை ஊசி வளைவு அருகே வேன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விஷாலுக்கு படப்பிடிப்பில் விபத்து…. திடீரென மருத்துவமனையில் அனுமதி….!!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். தற்போது  வினோத்குமார் இயக்கத்தில் விஷால் நடிக்கும் லத்தி திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் 100 ரவுடிகள் சேர்ந்து விஷாலை தாக்கும் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது அவருக்கு நிஜமாகவே காலில் பலத்த அடிபட்டது. இதை அடுத்து அவர் கீழே விழுந்து துடிதுடித்தார்.அவரால் மீண்டும் எழுந்து நிற்க முடியாத நிலையில் உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.தற்போது அவர் நலமுடன் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்ற தொழிலாளி…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் சுமை தூக்கும் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காமலாபுரத்தில் ராஜ்(45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெங்காய மண்டியில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். மேலும் வெங்காய மூட்டைகளை கடைகளுக்கு கொண்டு போடுவதற்கு ராஜ் ஆட்டோ ஒன்று வைத்திருந்தார். இந்நிலையில் ராஜ் இரவு நேரத்தில் வேலை முடிந்து ஆட்டோவில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இவர் திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலையில் ஊத்துப்பட்டி பிரிவு […]

Categories
உலக செய்திகள்

கனடா: தாறுமாறாக ஓடிய வாகனம்…. நொடியில் பறிபோன உயிர்….. பெரும் சோகம்…..!!!!

கனடாவில் வாகன விபத்தில் இளம்பெண் ஒருவர் பரிதாபமாக இறந்துள்ளார். Ottawaவில் தான் இச்சம்பவம் அரேங்கேறியுள்ளது. இருநாட்களுக்கு முன் all-terrain வாகனத்தில் இளம்பெண் சென்ற நிலையில் வாகனமானது கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக சென்றது. ஒருக்கட்டத்தில் வேகமாக மரத்தின் மீது மோதியதில் அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவத்தில் மற்றொரு பெண்ணிற்கு காயம் ஏற்பட்டதாக தெரியவந்து உள்ளது. இதில் காயமடைந்தவருக்கு எந்தவொரு ஆபத்தும் இல்லை என கூறப்பட்டுள்ளது. இதையடுத்து விபத்துக்கான காரணம் மற்றும் சூழ்நிலையை கண்டறிய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. கோர விபத்தில் பரிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்ட விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலை பேருந்து நிலைய பகுதியில் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் மூன்று மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தில் ஒரு வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் வந்த கவின் என்பவர் படுகாயம் அடைந்தார். இதனை பார்த்த பொதுமக்கள் கவினை மீட்டு தக்கலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இறந்தவரின் பெயர், விவரங்கள் தெரியவில்லை. […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“மருத்துவமனையில் இருக்கும் தந்தையை பார்க்க வந்த மகள்”…. உயிர் போன பரிதாபம்….!!!!!!!!

தர்மபுரி பி ஆர் சீனிவாச ராவ்  தெருவில் ரகு என்பவர் நகைக்கடை ஒன்றை வைத்து இருக்கிறார். இவரது மனைவி மீனா (27). இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இதற்கு இடையே ரகுவின் பெரியப்பா கடந்த சில தினங்களுக்கு முன்பாக இறந்துள்ளார். அவரது இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக சொந்த ஊரான பொன்னாகரத்தை அடுத்த வண்ணாத்திப்பட்டிக்கு ரகு குடும்பத்துடன் சென்றிருந்தார். இந்த நிலையில் மீனாவின் தந்தையான தர்மபுரி நகராட்சி வருவாய் ஆய்வாளர் மாதயன்  உடல் நலம் பாதிக்கப்பட்டு  தர்மபுரியில் […]

Categories
தேசிய செய்திகள்

FLSH NEWS: திடீர் விபத்து…. ‘அய்யோ’ பதறிய பிரபலம்… உடனே செய்த காரியம் VIDEO….!!!!!

கேரளாவில் ஏற்பட்ட சாலை விபத்து ஒன்றில் ராகுல் காந்தி செய்த காரியம் பாராட்டுகளை பெற்றுள்ளது.தன்னுடைய நாடாளுமன்ற தொகுதியான வயநாட்டில் பல்வேறு நிகழ்ச்சியை முடித்துவிட்டு நீலாம்பூருக்கு சென்று கொண்டிருந்த ராகுல் காந்தி, சாலை விபத்து ஒன்றை பார்த்து உள்ளார். இதனைப் பார்த்ததும் பதறிப் போய் காரை விட்டு இறங்கிய அவர்,அவருடன் வந்த ஆம்புலன்ஸில் விபத்தில் காயப்பட்டவரை ஏற்றி உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அவர் செய்த இந்த நிகழ்ச்சி சம்பவம் வீடியோவாக வைரல் ஆகி வருகிறது.

Categories
மாநில செய்திகள்

“சாலையில் சென்று கொண்டிருந்த ஷேர் ஆட்டோ”… திடீர் தீ விபத்து… பெரும் பரபரப்பு….!!!!!!!!!

பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை பகுதியில் தனியார் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனை ஊழியர்களை அழைத்து சென்ற ஷேர் ஆட்டோ வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலை நசரத்பேட்டை அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென தீப்பிடித்து எரிந்தது. இது குறித்து தீயணைப்பு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதற்குள் அந்த வழியாக வந்த போக்குவரத்து போலீஸ்காரர் சுதாகர் என்பவர் அந்த வழியாக சென்ற தண்ணீர் வாகனத்தை நிறுத்தி அதில் இருந்து தண்ணீரை ஊற்றி ஆட்டோவில் ஏறிந்து கொண்டிருந்த தீயை […]

Categories
தேசிய செய்திகள்

“குடிநீர் திட்டப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம்”…. விபத்திற்குள்ளான பள்ளி வாகனம்…!!!!!!!

திருத்தணி நகராட்சியில் குடிநீர் பற்றாக்குறையை போக்கும் விதமாக ரூபாய் 109 கோடியே 68 லட்சம் செலவில் பாலாறு ஆற்றின் திருப்பாற்கடல் கூட்டு குடிநீர் திட்டம் மூலம்  செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது நகராட்சியில் குழாய்கள் அமைப்பதற்கு பள்ளங்கள் தோன்றும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நேற்று காலை நகராட்சிக்குட்பட்ட காந்தி ரோடு பகுதியில் உள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே மாணவ மாணவிகளை ஏற்று வந்த தனியார் பள்ளி பஸ் எதிரே வந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தாத்தா வீட்டிற்கு சென்ற வழக்கறிஞர்…. வழியிலேயே நடந்த விபரீதம்…. விழுப்புரத்தில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வழக்கறிஞர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வி.சாத்தனூர் கிராமத்தில் வழக்கறிஞரான பிரகதீஸ்வர் என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பிரகதீஸ்வர் விக்கிரவாண்டியில் இருக்கும் தனது தாத்தா வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் விக்கிரவாண்டி தெற்கு புறவழிச் சாலையை கடக்கும் முயன்ற போது அவ்வழியாக வேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பிரகதீஸ்வர் சம்பவ […]

Categories
உலக செய்திகள்

ஓ.என்.ஜி.சி. ஹெலிகாப்டர் கடலில் திடீரென விழுந்து விபத்து…. 4 பேர் பலி…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் மும்பை கடல் பகுதியில் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்து வருகிறது. இதற்காக ஆழ்கடல் பகுதியில் எண்ணெய் வயல்கள் மற்றும் துரப்பன நிலையங்களை அமைத்து உள்ளது. இந்த இடங்களுக்கு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை அழைத்துச் செல்லும் பணியில் ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்படுகின்றன. அதன்படி இன்று எண்ணெய் துரப்பண நிலையத்திற்கு இன்று ஊழியர்களை ஒரு ஹெலிகாப்டர் அழைத்துச் சென்றது. இதில் 2 பைலட்கள், 7 ஊழியர்கள் இருந்தனர். இந்நிலையில் அந்த ஹெலிகாப்டர் எண்ணெய் துரப்பன […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டு சிறையில் தீ விபத்து….. 49 கைதிகள் பலி…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

கொலம்பியா நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள துலுவா நகரில் பெரிய சிறைச்சாலை அமைந்துள்ளது. இந்த சிறையில் உள்ள கைதிகள் நேற்று முன்தினம் திடீரென கலவரத்தில் ஈடுபட்டனர். அப்போது சிறையில் தீப்பற்றி மளமளவென கொழுந்து விட்டு எரிந்து, கண்ணிமைக்கும் நேரத்தில் சிறை முழுவதும் பரவியது. இதில் தீயின் கோரப்பிடியில் சிக்கி 49 கைதிகள் உடல் கருகி பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மோட்டார் சைக்கிள்- வேன் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் மெக்கானிக் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பெரிய அகரம் பகுதியில் வசந்த ராஜா(36) என்பவர் வசித்து வந்துள்ளார். கம்ப்யூட்டர் மெக்கானிக்கான வசந்தராஜா மோட்டார்சைக்கிளில் புதுச்சேரிக்கு சென்று கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள் வாங்கியுள்ளார். பின்னர் வசந்த ராஜா மீண்டும் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் தீவனூர் மெயின் ரோட்டில் சென்றபோது எதிரே வேகமாக வந்த வேன் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

சற்றுமுன் ஹெலிகாப்டர் விபத்து….. 4 பேர் உயிரிழப்பு….. அதிர்ச்சி சம்பவம்….!!!!

ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் மும்பை அருகே கடலில் விழுந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒன்பது பேருடன் பறந்த ஹெலிகாப்டர் 60 நாட்டிகல் தொலைவில் ஓஎன்ஜிசி நிறுவனம் எண்ணெய் கிணறு அருகிலேயே விழுந்து விபத்துக்குள்ளானது. கடற்படை கடலோர காவல் படை உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட மீட்பு பணியில் 5 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories
உலக செய்திகள்

தடம் புரண்ட ஆம்டிரக் ரயில்…. 3 பேர் பரிதாப பலி…. பிரபல நாட்டில் சோகம்….!!!!

அமெரிக்க நாட்டின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலிருந்து சிகாகோ நோக்கி ஆம்டிரக் ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அதன் வழியே லாரி ஒன்று வந்துள்ளது. அந்த லாரி மிசவுரி நகரிலுள்ள மென்டன் என்ற பகுதியில் வந்தபொது ரயில்வே கிராசிங்கை கடந்துள்ளது. அப்பகுதியில் விளக்குகள் உள்ளிட்ட எச்சரிக்கை அம்சங்கள் எதுவுமில்லை. இந்த நிலையில் லாரி ரயில்வே கிராசிங்கை கடந்தபோது, அதன் மீது ஆம்டிரக் ரயில் மோதி விபத்திற்குள்ளானது. இந்த கோர விபத்தில் ரயிலில் மொத்தம் உள்ள 8 பெட்டிகளில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. 2 வாலிபர்கள் பலி…. நெல்லையில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திருக்குறுங்குடி பகுதியில் அஸ்வின்(18) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான ஜோயல்(18) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் நெல்லை நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் ரெட்டியார்பட்டி நான்கு வழி சாலையில் சென்றபோது ராஜ்குமார் என்பவர் ஓட்டி வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அஸ்வின் மற்றும் ஜோயல் ஆகிய 2 […]

Categories
சற்றுமுன் திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஆட்டோ கவிந்து LKG மாணவன் பலி – நெல்லையில் பெரும் சோகம் …!!

ஆண் – பெண் குழந்தைகள் என 6பேர் ஆட்டோவில் காலை பள்ளிக்கு சென்று இருக்கிறார்கள். இந்த பள்ளி  வசவபுரத்தில் தூத்துக்குடி மாவட்ட எல்லையில் நெல்லை மாவட்டத்தில் உள்ளது.நெல்லை மாவட்டம் வசவபுரம் – செய்துங்கநல்லூர் சாலையில்  இந்த ஆட்டோ வந்தபோது….  சாலையில் ஏற்கனவே சாலை விரிவாக்க பணி யாக பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பகுதியில் ஆட்டோ வரும்பொழுது ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளாக இருக்கிறது. எதிர்பாராத விதமாக ஆட்டோ விபத்துக்குள்ளானதில் ஆட்டோவின் அடியில் எல்கேஜி படித்து வரக்கூடிய […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்ற தொழிலாளி…. திடீரென நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டியில் கூலித் தொழிலாளியான ரமேஷ்(55) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ரமேஷ் பணி முடிந்து வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த வாகனம் ரமேஷ் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ரமேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று ரமேஷின் உடலை மீட்டு அரசு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

50 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 5 பேர்…. கோர விபத்து…!!

கட்டுப்பாட்டை இழந்த கார் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவரான விக்ரம் என்பவர் தனது நண்பர்கள் நான்கு பேருடன் காரில் ஊட்டிக்கு சுற்றுலா சென்றுள்ளார். இவர்கள் சுற்றுலா தலங்களை பார்த்து ரசித்துவிட்டு இரவில் மீண்டும் ஊருக்கு சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் கோத்தகிரி- மேட்டுப்பாளையம் சாலையில் தட்டபள்ளம் அருகே சென்ற போது விக்ரம் குறுகிய வளைவில் காரை திருப்ப முயற்சி செய்துள்ளார். அப்போது கட்டுப்பாட்டை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

40 அடிப் பள்ளத்தில்…. அரசுப்பேருந்து கவிழ்ந்து விபத்து…. பெரும் அதிர்ச்சி….!!!!

கன்னியாகுமரி மாவட்டம் தாழ்குடியில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்த அரசு பேருந்து கவிழ்ந்து 35 பேர் காயமடைந்துள்ளனர். புத்தேரி சாலையில் உள்ள சுமார் 40 அடி பள்ளத்தில் அரசுப்பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.விபத்தில் காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனை மற்றும் தனியாார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Categories
காஞ்சிபுரம் சேலம் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய கண்டெய்னர் லாரி…. உடல் நசுங்கி பலியான விவசாயிகள்…. கோர விபத்து…!!

கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் இரண்டு விவசாயிகள் உடல் நசுங்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள கருமந்துறை ஊராட்சியில் இருக்கும் அருணா என்ற மலை கிராமத்தில் ராமசாமி(63), சின்னசாமி(53), சீனிவாசன்(30), சாமி(40) ஆகியோர் வசித்து வந்துள்ளனர் விவசாயிகளான இவர்கள் சரக்கு வேன் மூலம் தக்காளி லோடு ஏற்றிக்கொண்டு நேற்று முன்தினம் தலைவாசல் தினசரி மார்க்கெட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். இந்த வேனை இளங்கோ என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் மணிவிழுந்தான் பகுதியில் இருக்கும் தனியார் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கோவில்களிலும், மரத்தடியிலும் தங்கியிருந்த மூதாட்டி…. திடீரென நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள கோணம்பட்டி விலக்கு அருகில் கடந்த 6 மாதமாக மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டி அப்பகுதியில் இருக்கும் கோவில்களிலும், மரத்தடியிலும் தங்கி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் மூதாட்டி சிவகாசி-சாத்தூர் சாலையை கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதால் மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

பள்ளத்தை கவனிக்காத லாரி ஓட்டுநர்…. கோர விபத்தில் இறந்த விவசாயி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

லாரி மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்ற விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சீர்காழி முதல் காரைமேடு வரை புறவழிச்சாலை விரிவுபடுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இதற்காக பள்ளம் தோண்டப்பட்டு பாலம் அமைக்கும் பணி நடைபெறுகிறது. இந்நிலையில் பாதரக்குடி கிராமத்தை சேர்ந்த விவசாயி நடேசன் என்பவர் வீட்டில் இருந்து வயல்வெளிக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது பின்னால் வந்த லாரி சாலையில் பள்ளம் தோண்டப்பட்டிருப்பதை கவனிக்காமல் வந்துள்ளார். இதனால் லாரி பள்ளத்தில் இறங்கி […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

சைக்கிள் மீது மோதிய ஜீப்…. உதவி போலீஸ் சூப்பிரண்டு உள்பட 6 பேர் படுகாயம்…. விழுப்புரத்தில் பரபரப்பு…!!

சைக்கிள் மீது ஜீப் மோதிய விபத்தில் உதவி போலீஸ் சூப்பிரண்டு உள்பட 6 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வலவிடாந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த ரகுபதி(32) என்பவர் கடலூர் மாவட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டாக( பயிற்சி) இருக்கிறார். இவர் நேற்று மாலை குடும்பத்தினருடன் ஜீப்பில் திருவண்ணாமலைக்கு சென்றுள்ளார். இந்த ஜீப்பை போலீஸ்காரர் தமிழ்குமரன் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மணகுப்பம் கூட்டு ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது லோகேஷ் என்ற சிறுவன் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சாலையின் குறுக்கே வந்த குரங்கு…. பள்ளத்தில் கவிழ்ந்த ஆட்டோ… படுகாயமடைந்த 8 பேர்…!!

கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சென்னாலூரில் லோகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் லோகநாதன் உறவினர்களான பாக்கியலட்சுமி, சத்தியா, பிரியா, ராணி, புகழரசி, மரியம்மாள் ஆகியோருடன் ஆட்டோவில் செஞ்சிக்கு சென்றுவிட்டு மீண்டும் ஊருக்கு புறப்பட்டார் இந்த ஆட்டோவை முருகன் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒதியத்தூர் அருகே சென்றபோது குரங்கு ஒன்று சாலையின் குறுக்கே ஓடியது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“திடீரென தீப்பிடித்து எரிந்த மினி வேன்”…. 6 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்…. தீவிர விசாரணையில் போலீசார்…!!!!!!!!

பட்டாபிராம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது மினி வேன் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அரும்பாக்கம் எனும் பகுதியை சேர்ந்த பிரான்சிஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான மினி வேனை ஆவடியை அடுத்த கண்ணியம்மன் நகரைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் கடந்த மூன்று தினங்களாக வாடகைக்கு எடுத்து ஓட்டி வந்துள்ளார். நேற்று காலை விஜயகுமார் இரண்டு பெண்கள், 2 ஆண்கள், ஒரு கைக்குழந்தை என ஐந்து பேரை மினி வேனில் ஏற்றிக்கொண்டு […]

Categories
மாநில செய்திகள்

பட்டாசு ஆலை விபத்து… 3 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்தார் முதல்வர்.!!

கடலூர் எம்.புதூரில் சிறிய நாட்டு பட்டாசு தயாரிப்பு ஆலை செயல்பட்டு வந்தது. இங்கு ஏற்பட்ட திடீர் வெடிவிபத்தில் சிக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். வாணவேடிக்கை பட்டாசுகள் வெடித்துச் சிதறி 3 பேர் உயிரிழந்த நிலையில் 2 பேர் காயமடைந்துள்ளனர். விபத்தில் பட்டாசு ஆலையின் அறைகள் தரைமட்டமானது. இந்நிலையில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாகவும், உயிரிழந்த 3 பேரின் குடும்பத்துக்கு தலா 3 லட்ச ரூபாய் வழங்க […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

அதிவேகமாக வந்த வாகனம்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ஸ்கூட்டி மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அந்தூர் கிராமத்தில் அண்ணாதுரை(60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அண்ணாதுரை வேலைக்கு செல்வதற்காக குன்னம் நோக்கி நடந்து சென்றார். அப்போது ஆய்க்குடி கிராமத்தை சேர்ந்த உஷா என்பவர் ஓட்டி வந்த ஸ்கூட்டி முன்னால் சென்ற அண்ணாதுரை மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்த அண்ணாதுரை மற்றும் உஷா ஆகிய […]

Categories
மாநில செய்திகள்

“இறந்தும் 5 பேருக்கு வாழ்வளித்த கல்லூரி மாணவன்”….. கண்கலங்க வைக்கும் சம்பவம்….!!!

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் விபத்து ஒன்றில் சிக்கி மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மருத்துவர்கள் அவரின் உடல்களை உறுப்பு தானம் செய்ய பெற்றோரிடம் அனுமதி கேட்டுள்ளனர். இதற்கு அவரின் பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர். பின்னர், மதுரையிலிருந்து இளைஞரின் இருதயம் மற்றும் நுரையீரல் தனி விமானம் மூலம் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு இருவருக்கு பொருத்தப்பட்டது. மேலும் இளைஞரின் சிறுநீரகம், கல்லீரல் மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் 2 பேருக்குப் பொருத்தப்பட்டது.

Categories
உலகசெய்திகள்

“படப்பிடிப்பிற்கு சென்றபோது பரிதாபம்”… 2 நடிகர்கள் உயிரிழப்பு… பெரும் சோகம்…!!!!!!!

வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 2 நடிகர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் நெட்ப்ளிக்ஸ் ஒடிடி நிறுவனத்திற்கு உலகெங்கிலும் பல லட்சம் பயனாளர்கள்  இருக்கின்றனர். பயனாளர்கள் மாதம் அல்லது வருடக்கணக்கில் சந்தா தொகையை செலுத்தி நெட்பிக்ஸ் தளத்தை பயன்படுத்தி திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் போன்றவை பார்த்து வருகின்றனர். இதற்கிடையே நெட்பிளிக்ஸ் தளத்தில் ‘தி ஜோசன் ஒன்ஸ்’ என்ற  தொடர் ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த தொடரில் நடித்து பிரபலமானவர்கள் ரெமுண்டோ […]

Categories
தேசிய செய்திகள்

திடீரென இடிந்து விழுந்த மேற்கூரை…. 3 வயது குழந்தை உயிரிழப்பு…. 3 பேர் படுகாயம்…. பெரும் சோக சம்பவம்….!!!

டெல்லியில் உள்ள பஹர்கஞ்ச் என்ற பகுதியில் 4 மாடி கட்டிடம் உள்ளது. இதன் முதல் தளத்தில் ஒரு குடும்பம் மட்டுமே வசித்து வந்தது. தரை தளத்தில் பல கடைகள் உள்ளன. இந்நிலையில் நேற்று முதல் தளத்தில் இரண்டாவது தளத்தின் கூரை திடீரென இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 3 வயது குழந்தை உயிரிழந்துள்ளது. மேலும் 3 பேர் காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கான்கிரீட் கலவையுடன் சென்ற லாரி விபத்து…. 7 பேர் படுகாயம்…. தீவிர விசாரணையில் போலீசார்….!!!!!!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கான்கிரீட் கலவையுடன் சென்ற லாரி விபத்துக்குள்ளாகி 7 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜகடை அருகில் நத்தம் மலை கிராமம் அமைந்துள்ளது. இந்த பகுதியை சேர்ந்த மல்லப்பா  என்பவர் மலை மீது வீடு கட்டி வசித்து வருகின்றார். அவரது வீட்டிற்கு காங்கிரட் போடுவதற்காக கிருஷ்ணகிரி பெத்ததாளபள்ளி பகுதியிலிருந்து லாரியில் கான்கிரீட் கலவை கலக்கும் இயந்திரத்துடன் அதே பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் பூங்கொடி (23) இந்திராணி (45) ஜோதி […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மஞ்சூர் – கோவை சாலையில் விழுந்து கிடக்கும் கற்கள்…. விபத்து ஏற்படும் அபாயம்…. வாகன ஓட்டிகள் கோரிக்கை…!!!!!!!!!

நீலகிரி மாவட்டத்தில் இருந்து கோவைக்கு செல்லும் குன்னூர் பர்லியார் வழியாகவும் கோத்தகிரி வழியாகவும் மஞ்சூர் கெத்தை வழியாகவும் 3 வழித்தடங்கள் இருக்கின்றது. பருவமழை காலங்களில் குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் ஆங்காங்கே பாறைகள் உருண்டு விழுவதும் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுவது போன்ற பேரிடர்கள் ஏற்படுகின்றது. இதனால் வாகன போக்குவரத்து பாதிக்கப் படுகின்றது. அந்த நேரங்களில் கோத்தகிரி வழியாக போக்குவரத்து திருப்பி விடப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் கடுமையாக அவதியடைந்து வந்துள்ளனர். மேலும் பலத்த மழை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தந்தையை பார்க்க சென்ற ராணுவ வீரர்…. திடீரென நடந்த விபரீதம்…. 21 குண்டுகள் முழங்க நடைபெற்ற இறுதி சடங்கு….!!!!

விபத்தில் ராணுவ வீரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தொட்டணம்பட்டி கிராமத்தில் ராணுவ மையத்தில்  ஹவில்தாராக வேலை பார்க்கும்  சங்கிலிராயன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 8-ஆம் தேதி பாம்பு கடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தனது தந்தையை பார்த்துவிட்டு மணப்பாறை சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் சங்கிலிராயனின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த […]

Categories
மாநில செய்திகள்

தேசிய நெடுஞ்சாலையில் கோரவிபத்து…. உயிரிழந்த 2 காவலர்கள்…. ஆளுநர் இரங்கல்….!!!!

நாமக்கல் – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பழைய வட்டார போக்குவரத்து அலுவலகம் ஒன்று அமைந்துள்ளது. அந்தப் பகுதியில் தற்போது சாலை பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் காரணமாக போக்குவரத்து திருப்பி விடப்பட்டு மாற்றுப்பாதையில் வாகனங்கள் செல்ல வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இன்று அதிகாலை அந்த வழியாக அதிவேகமாக வந்த கார் ஒன்று சாலை பணிகளுக்காக வைக்கப்பட்டிருந்த பேரல் மீது மோதி விபத்துக்குள்ளானது. உடனே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சந்திரசேகர் […]

Categories
உலக செய்திகள்

மினிபஸ்-டிரக் மோதி கோர விபத்து…. 8 பேர் பலி…. பிரபல நாட்டில் பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

துர்சான்பே மாவட்டத்திலிருந்து திருமண நிகழ்வுக்காக பயணிகளை மினி பஸ் ஏற்றிக் கொண்டு சென்றது. அப்போது துருக்கியில் உள்ள பலிகேரியில் உள்ள சிட்டி சென்டரில் சென்று கொண்டிருந்த மினிபஸ் பால் ஏற்றி வந்த டிரக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதனையடுத்து ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு வீரர்கள் மற்றும் அவசரகால மீட்புக் குழுக்கள் விபத்து நடந்த இடத்திற்கு அனுப்ப பட்டத. இந்த விபத்து நடந்த சாலையில் தற்காலிகமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து பலிகேசரி கவர்னர் ஹசன் சில்டாக் கூறியது, கனமழை மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

விபத்தில் உயிரிழந்த 2 காவலர் குடும்பத்திற்கு…. தலா ரூ.25 லட்சம் நிதியுதவி…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு….!!!!

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் தேசிய நெடுஞ்சாலை அருகே நேற்று நள்ளிரவு கார் விபத்து ஏற்பட்டது இந்நிலையில் இன்று அதிகாலை அதிவேகமாக வந்த சுற்றுலா வேன் ஒன்று போலீசார் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சந்திரசேகர் மற்றும் காவலர் தேவராஜன் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து விபத்து குறித்து கேட்டறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்‌, இச்சம்பவத்தில்‌ உயிரிழந்த சிறப்பு காவல்‌ உதவி ஆய்வாளர்‌ சந்திரசேகர்‌, காவலர்‌ தேவராஜன்‌ ஆகியோரின்‌ குடும்பத்திற்கு தொலைபேசியில்‌ தொடர்பு கொண்டு […]

Categories
உலக செய்திகள்

துருக்கி: மினி பஸ் மீது டிரக் மோதல்…. நொடியில் பறிபோன 8 உயிர்…. பெரும் சோகம்….!!!!

துருக்கியின் வட மேற்கு மாகாணமான பலிகேசிரில் நேற்று மினி பஸ் மீது டிரக் மோதிய கோரவிபத்தில் 8 பேர் இறந்தனர். அத்துடன் 10 பேர் காயமடைந்தனர். துர்சன்பே மாவட்டத்திலிருந்து திருமண நிகழ்ச்சிக்கு பயணிகளை ஏற்றிச்சென்ற மினிபஸ், புறப்பட்ட சிறிதுநேரத்தில் சிட்டி சென்டரில் பால் ஏற்றிவந்த டிரக் மீது மோதி விபத்துக்குள்ளானது. அதனை தொடர்ந்து ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு வீரர்கள் மற்றும் அவசரகால மீட்பு குழுக்கள் விபத்து நேர்ந்த இடத்திற்கு அனுப்பப்பட்டது. இதனிடையில் விபத்து நடந்த சாலையில் தற்காலிகமாக போக்குவரத்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

குழந்தை மீது 2 முறை ஏறி இறங்கிய கார் சக்கரங்கள்… பதறவைக்கும் சிசிடிவி காட்சி…. நாமக்கல்லில் பரபரப்பு…!!

குழந்தை மீது கார் மோதியது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பட்டணம் நடுத்தெருவில் கூலி தொழிலாளியான கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 2 வயதுடைய தருண் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் தருண் வீட்டிற்கு அருகே விளையாடி கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த காரை நோக்கி தருண் ஓடி உள்ளான். அதனை கவனிக்காத ஓட்டுனர் காரை திருப்புவதற்காக பின்னோக்கி இயக்கியபோது தருண் மீது காரின் சக்கரங்கள் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

திருமண நிகழ்ச்சிக்கு சென்ற வாலிபர்…. வழியிலேயே நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதிய விபத்தில் வாலிபர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தென் சிறுவள்ளூர் கிராமத்தில் அசோக்(23) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மோட்டார் சைக்கிளில் மேலூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இவருடன் அதே கிராமத்தில் வசிக்கும் ஆர்த்திபன்(21), அரியேந்திரன்(23) ஆகியோரும் வந்தனர். இந்நிலையில் பெரியசிறுவத்தூர் சாலையில் சென்றபோது பின்னால் வேகமாக வந்த அரசு பேருந்து அசோக்கின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சாலையில் சென்றுகொண்டிருந்த கார்…. திடீரென நடந்த விபரீதம்…. தீயணைப்பு வீரர்களின் செயல்….!!!!

ஓடும் காரில்  ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டம் ஆபிரகாம் பண்டிதர் என்னும் நகரை சேர்ந்தவர் அசார். இவர்  சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவர்  தனது குடும்பத்தினருடன் நேற்று திருச்சிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது காரில் அவருடன் சேர்ந்து 5 பேர் பயணம் மேற்கொண்டனர். தஞ்சை மருத்துவ கல்லூரி சாலையில் கணபதி நகர் அருகே சென்ற போது காரின் முன் பகுதியில் இருந்து திடீரென அதிக அளவில் புகை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

முன்னால் சென்ற பேருந்து…. முந்திச் செல்ல முயன்று உயிரைவிட்ட இருவர்…. கோவையில் சோக சம்பவம்….!!!!

கோவை பீளமேடு சவுரிபாளையம் பிள்ளையார் கோவில் என்ற வீதியை சேர்ந்த செந்தில்குமார் மகன் மனோஜ் (19) என்பவர், சரவணம்பட்டியில் உள்ள தனியார் மாலில் வேலை செய்து வருகிறார். அவர் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த சிவலிங்கம் என்பவரின் மகள் ஆர்த்தி என்பவரை அழைத்து கொண்டு பேரூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது செல்வபுரம் தில்லை நகர் அருகே சென்று கொண்டிருந்தபோது முன்னாள் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அதனை இவர் இடது […]

Categories
உலக செய்திகள்

வேகமாக வந்த கார்… நொடியில் பறிபோன உயிர்…. ஜெர்மனியில் பெரும் சோகம்….!!!!

ஜெர்மனியின் ஹீன்ஸ் மாகாணத்தை சேர்ந்த பள்ளி மாணவ-மாணவிகள் சுற்றுலாபயணம் மேற்கொண்டனர். இதையடுத்து சுற்றுப் பயணம் சென்ற மாணவர்கள் நேற்று பெர்லின்நகரிலுள்ள சாலை ஒன்றில் நின்று கொண்டிருந்தனர். இந்நிலையில் அங்கு அதிவேகமாக வந்த கார் ஒன்று சாலை ஓரம் நின்று கொண்டிருந்த மாணவ-மாணவிகள் மீது வேகமாக மோதி விட்டது. இதனை தடுக்க முயன்ற ஆசிரியை மீதும் கார் மோதியது. இதனால் பள்ளி ஆசிரியை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அத்துடன் 9 பேர் பலத்த காயமடைந்தனர். இந்த விபத்தை […]

Categories
தேசிய செய்திகள்

பைக்கை இடித்து தள்ளிய கார்…. வெளியாகும் பரபரப்பு வீடியோ…. தீவிர விசாரணையில் போலீசார்….!!!!!!!!!!

டெல்லியில் பைக்கில் சென்றவரை காரில் வந்த நபர் இழுத்துச் செல்லும் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் சாலையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதால் பைக்கில் பின்னால் சென்றவரை காரில் சென்ற நபர் மோதி செல்லும் வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் கார் மோதியதில் பைக் சரிகின்றது. அதில் பயணித்த நபரும் கீழே விழுந்துள்ளார். இதனை அவருக்கு பின்னால் வந்த நண்பர் வீடியோவாக பதிவு செய்திருக்கின்றார். இதுபற்றி பாதிக்கப்பட்ட நபரான ரேயான் செய்தியாளர்களிடம் பேசும்போது, என்னுடைய […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

எதிர் எதிரே மோதிய கார்கள் …. படுகாயம் அடைந்த 2 பேர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

இரண்டு கார்கள் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள சுகுணாபுரம் பகுதியில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று தனது குடும்பத்துடன் நரசிம்மநாயக்கன்பாளையம் சாலையில் காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக செந்தில்குமார் என்பவர் ஓட்டி வந்த கார் நிலைதடுமாறி பழனிச்சாமியின் கார் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பழனிச்சாமி, அவரது மனைவி ஆகிய 2 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர […]

Categories

Tech |