Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் கோர விபத்து….. உடல் நசுங்கி பலி…!!!!

மதுரை அருகே நடந்த பயங்கர விபத்தில் 2 பேர் உடல் நசுங்கி பரிதாபமாகஉயிரிழந்தனர். கடலூர் நெல்லிக்குப்பத்தில் இருந்து குற்றாலம் நோக்கி சென்ற சுற்றுலா வாகனம், மதுரை உத்தங்குடி அருகே திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென சாலையோரம் நின்று கொண்டிருந்த தண்ணீர் லாரி மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 2 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.10க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய லாரி…. ராட்சத பள்ளத்தில் பாய்ந்து விபத்து…. பரபரப்பு சம்பவம்…!!

கட்டுப்பாட்டை இழந்த லாரி பள்ளத்தில் பாய்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் இருந்து பெங்களூரு நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை மோகன்ராஜ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி மேம்பாலம் அமைப்பதற்காக தோண்டப்பட்ட 18 அடி ஆழமுள்ள பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மோகன்ராஜ் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மலைப்பகுதியில் திடீரென தீப்பிடித்த கார்…. அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பிய 4 பேர்…. பெரும் பரபரப்பு….!!!!!!!!!

கர்நாடக மாநிலம் மைசூருவை சேர்ந்த  முகமது கபில் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று  மைசூரில் இருந்து கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருடன் அவரது உறவினர்கள் மூன்று பேர் பயணம் மேற்கொண்டனர். ஈரோடு மாவட்டம் தாளவாடியை  அடுத்த திம்பம் மலைப்பாதையின் 19 ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே மதியம் 1.30 மணி அளவில் சென்ற  போது காரின் முன் பகுதியில் இருந்து திடீரென புகை வந்திருக்கின்றது. அதனால் அதிர்ச்சி அடைந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

லாரி மீது கார் மோதி கோர விபத்து…. நொடியில் பறிபோன 2 உயிர்…. பெரும் சோகம்….!!!!

நெல்லை பழையபேட்டையில் வசித்து வருபவர் கட்டிட காண்டிராக்டர் பொன்னுத்துரை (80). இவருக்கு செல்லம்மாள் என்ற மனைவி இருந்தார். இந்த தம்பதியினருக்கு பொன்மலர்(40) மகள் இருக்கிறார். இவரது கணவர் சண்முகநாதன் ஆவார். இந்த நிலையில் பொன்மலருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் சிகிச்சைக்காக அவரை கோவைக்கு ஆம்புலன்சில் அழைத்துச் சென்றனர். இந்த வாகனத்தை தொடர்ந்து செல்லம்மாள் காரில் சென்றிருக்கிறார். அந்த காரை நெல்லையை சேர்ந்த டிரைவர் ராஜா (38) என்பவர் ஓட்டினார். இந்த கார் நேற்று மாலை 5:45 மணிக்கு […]

Categories
உலக செய்திகள்

பழக்கடையின் மீது மோதிய லாரி…. கோர விபத்து…. 8 பேர் பலி…. பெரும் சோகம்…!!!!!!!!

பிலிப்பைன்ஸில்  சாலையோரம் இருந்த பழக்கடையின் மீது லாரி மோதி விபத்திற்கு உள்ளானதில்  8 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள படங்காஸ்  நசுகுபு நகரில் சென்று கொண்டிருந்த குப்பை லாரி திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. அப்போது அந்த லாரி சாலையோரம் இருந்த பழக்கடையின் மீது மோதி விபத்திற்கு உள்ளானது. அதன் பின் நிற்காமல் ஓடிய லாரி எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

டி என் பாளையம் அருகே கார்கள் மோதல்…. சிசிடிவியில் பதிவான காட்சி…. வைரலாகும் வீடியோ…..!!!!!!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த பாஸ்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்தை சேர்ந்த நான்கு பேருடன் காரில் பெங்களூருக்கு நேற்று காலை சென்று கொண்டிருந்தார். காரை பாஸ்கர் ஓட்டியுள்ளார். இதே போல் கோவை வேலாண்டி பாளையத்தை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். இவர் தனது உறவினர் ஒருவருடன் காரில் பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அத்தாணி சாலையில் டிஎன் பாளையத்தை அடுத்த காளையூர் அருகே சென்ற போது முன்னாள் சென்று […]

Categories
உலக செய்திகள்

2020 இல் நிகழ்ந்த கோர விபத்து…. அனாதைகளாக்கப்பட்ட 3 குழந்தைகள்…. நெஞ்சை உலுக்கும் சம்பவம்…..!!!!!!!

அமெரிக்காவின் கலிபோர்னிய மாகாணத்தில் வாகன விபத்தை ஏற்படுத்தி மூன்று குழந்தைகளை அனாதையாக்கிய யுவதிக்கு  ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் ஆனது கடந்து 2020 டிசம்பர் மாதம் கலிபோர்னியாவின் நியூ போர்ட் கரை பகுதியில் நடைபெற்றுள்ளது. இந்த வழக்கில் விசாரணை எதிர்கொண்ட 23 வயது கிரேஸ் கோல்மன் என்ற யுபதிக்கு நியூ போர்ட் கடற்கரை நீதிமன்றம் 21 வருடங்கள் முதல் ஆயுள் தண்டனை விதித்து சிறை தண்டனை விதித்திருக்கின்றது. நீதிபதி தீர்ப்பை அறிவிக்கையில் கிரேஸ் கோல்மன் கண்களில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர் மோதிய கார்….6 பேர் படுகாயம்…. தீவிர விசாரணையில் போலீசார்…..!!!!!!!

சேலத்தில் நேருக்கு நேர் மோதிய கார் விபத்தில் 6 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தை சேர்ந்த மாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன்களான  செல்வராகவன் (25) குமார் ராஜா (21). இவர்கள் மூன்று பேரும் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக காரில் சென்றனர். அங்கு அம்மனை  தரிசனம் செய்துவிட்டு மீண்டும் ஜலகண்டாபுரம் நோக்கி அவர்கள் மூன்று பேரும் திரும்பி சென்று கொண்டிருந்தனர் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மலைப்பகுதியில் திடீரென தீப்பிடித்த கார்…. அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பிய 4 பேர்…. பெரும் பரபரப்பு….!!!!!!!!!

கர்நாடக மாநிலம் மைசூருவை சேர்ந்த  முகமது கபில் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று  மைசூரில் இருந்து கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருடன் அவரது உறவினர்கள் மூன்று பேர் பயணம் மேற்கொண்டனர். ஈரோடு மாவட்டம் தாளவாடியை  அடுத்த திம்பம் மலைப்பாதையின் 19 ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே மதியம் 1.30 மணி அளவில் சென்ற  போது காரின் முன் பகுதியில் இருந்து திடீரென புகை வந்திருக்கின்றது. அதனால் அதிர்ச்சி அடைந்த […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அலங்கார வளைவு கட்டும் போது நேர்ந்த சோகம்…. 2 பெண்கள் உட்பட 7 பேர் படுகாயம்….. பெரும் பரபரப்பு….!!!!!!!!

அலங்கார வளைவு கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தில் 7 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் பவானி வர்ணபுரத்தில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவில் அருகே அமைந்துள்ள பகுதியில் புதிதாக வணிக வளாகம் கட்டப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு அந்தப் பகுதியில் காண்கிரெட்டால் ஆன அலங்கார வளைவு அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்காக பக்கவாட்டில் இரண்டு கான்கிரீட்  தூண்கள் கட்டப்பட்டிருக்கிறது. மேலும் அலங்கார வளைவு அமைப்பதற்காக இரண்டு தூண்களையும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விபத்தில் சிக்கிய கோமாளி பட நடிகை…. இணையத்தில் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம்…. செம வைரல்….!!!

விபத்தில் சிக்கிய பிரபல நடிகை தன்னுடைய புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் ஜெயம் ரவியுடன் நடித்த கோமாளி திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சம்யுக்தா ஹெக்டே. இவர் பப்பி, மன்மத லீலை உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது க்ரீம் என்ற கன்னட படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஆக்சன் காட்சிகளில் சம்யுக்தா ஹெக்டே நடித்துக் கொண்டிருந்தபோது திடீரென கால் தவறி கீழே விழுந்தார். இதனால் சம்யுக்தா ஹெக்டேவின் காலில் காயம் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

BREAKING: கோயில் தேர் கவிழ்ந்து விபத்து… மீண்டும் அதிர்ச்சி….!

புதுக்கோட்டை அருகே திருக்கோகர்ணத்தில் தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆடிப்பூரத்தை முன்னிட்டு கோகர்ணேஸ்வரர் கோயிலில் தேரோட்டம் நடைபெற்றது. 2 ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்டம் நடந்ததால் ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர். இந்நிலையில், வடத்தை வேகமாக இழுத்ததால் திடீரென தேர் சாய்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

பாட்டியை பார்க்க சென்ற வாலிபர்…. வழியிலேயே நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டாள் கோவில் சக்தி நகரில் கோபி சங்கர்(34) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது பாட்டியை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் புன்னம் சத்திரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் புதூர் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது அவ்வழியாக வேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த கோபி சங்கரை அக்கம் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கல்குவாரி விபத்தில் 2 பேர் பலி…… குவாரியை மூட உத்தரவு….. பெரும் பரபரப்பு….!!!!

பெரம்பலூர் மாவட்டம், கவுல்பாளையத்தில் அதிமுக நிர்வாகி ஒருவருக்கு சொந்தமான கல் குவாரியில் இன்று காலை வெடி வைத்து தகர்க்கப்பட்ட பாறைகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றும் பணி நடைபெற்றது. இதில் எதிர்பாராத விதமாக சற்று கீழே பணியில் இருந்த தொழிலாளர்கள் மீது பாறைகள் சரிந்து விழுந்தன. இந்த கோர விபத்தில் லாரி உரிமையாளரும், தொழிலாளியுமான சுப்பிரமணி (30), வினோத் ஆகியோர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உரிழந்தனர். தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லாததே விபத்துக்கு காரணம் என்று […]

Categories
உலக செய்திகள்

ராஜஸ்தானில் விழுந்த பயிற்சி போர் விமானம்….. 2 விமானிகள் பலி…. பெரும் பரபரப்பு சம்பவம்..!!!

இந்திய விமானப் படைக்கு சொந்த மிக் -21 ரக பயிற்சி போர் விமான ராஜஸ்தான் மாநில பர்மா அருகில் நேற்று இரவு 9.10 மணிக்கு விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த இரு விமானிகளும் உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து இரட்டை இருக்கை கொண்ட இந்த பயிற்சி போர் விமான விபத்து குறித்து விசாரணைக்கு இந்திய விமானப்படை உத்தரவிட்டுள்ளது. விமான விபத்தில் விமான படை வீரர்கள் இருவரை இழந்ததிருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது என்று […]

Categories
மாவட்ட செய்திகள்

“விபத்தில் அரசு பேருந்து கண்டக்டர் பலி”…. விபத்து ஏற்படுத்திய பேருந்து டிரைவர் கைது….!!!!!

அரசு பேருந்து கண்டக்டர் பஸ் மோதியதில் உயிரிழந்த நிலையில் போலீசார் விபத்து ஏற்படுத்திய பேருந்து டிரைவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சேமங்கலம் கிராமத்தை சேர்ந்த மணிவண்ணன் என்பவர் அரசு போக்குவரத்து கழகத்தில் பேருந்து கண்டக்டராக பணியாற்றி வந்த நிலையில் நேற்று மதியம் பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த பேருந்து மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் மணிவண்ணன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“பஸ் டிரைவருக்கு திடீரென தலைச்சுற்றல்”….. தடுப்புச்சுவர் மீது மோதி விபத்து…..!!!!

பஸ் டிரைவருக்கு திடீரென தலைசுற்றல் ஏற்பட்டடு தடுப்புச் சுவர் மீது மோதி பஸ்ஸை நிறுத்தியதால் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர்த்தபினார்கள். நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூரில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பால்மராலீஸ் பகுதிக்கு அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகின்ற நிலையில் நேற்று முன்தினம் காலையில் பால்மராலீஸ் பகுதியில் இருந்து புறப்பட்ட அரசு பேருந்து குன்னூரை நோக்கி வந்து கொண்டிருந்த பொழுது பஸ் டிரைவர் இளங்கோவிற்கு திடீரென தலைசுற்றல் ஏற்பட்டது. இதனால் அவர் சாலையோர தடுப்புச் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சாலையில் சென்று கொண்டிருந்த கார்…. திடீரென தீப்பிடித்து எறிந்தது….. பெரும் பரபரப்பு…..!!!!!!!!!

சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த சுரேந்தர் சிங் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று மதியம் தனது வீட்டில் இருந்து சிந்தாரிப்பேட்டைக்கு காரில் சென்று கொண்டிருந்தபோது தேனாம்பேட்டை அன்பகம் அருகே அண்ணா சாலையில் சென்ற போது காரின் முன் பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சுரேந்தர் சிங் உடனடியாக காரை சாலையிலேயே நிறுத்திவிட்டு கீழே இறங்கியுள்ளார். இது பற்றிய தகவல் அறிந்து வந்து தேனாம்பேட்டை தீயணைப்பு துறை  வீரர்கள் துரிதமாக செயல்பட்டு காரில் இருந்து […]

Categories
தேசிய செய்திகள்

டபுள் டக்கர் பேருந்துகள் மோதி கோர விபத்து…. 8 பேர் பலி…. 16 பேர் படுகாயம்….. பரபரப்பு சம்பவம்…..!!!!

உத்திரபிரதேசம் மாநிலம் பராபங்கி என்ற மாவட்டத்திற்கு அருகே பூர்வாஞ்சல் அதிவிரைவு சாலையில் இரண்டு டபுள் டக்கர் பேருந்துகள் மோதி இன்று காலை விபத்துக்குள்ளானது. அந்த கோர விபத்தில் எட்டு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 16 பேர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். நரேந்திரபூர் மதராசா கிராமத்திற்கு அருகே பிகாரின் சித்தமர்ஷிரில் இருந்து வந்த பேருந்து டெல்லியை சேர்ந்த பேருந்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களை அடையாளம் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பள்ளத்தில் சிக்கி ஒருபுறமாக சாய்ந்த லாரி…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

சாலையில் உள்ள பள்ளத்தில் சிக்கி லாரி விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோதையாறு அரசு ரப்பர் கழகத்திலிருந்து ரப்பர் மரத்தடிகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று கேரளா நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரி கோதமடங்கு பகுதியில் சென்ற போது எதிர்பாராதவிதமாக சாலையில் இருந்த பள்ளத்தில் இறங்கியது. மேலும் நிலைதடுமாறி லாரி ஒரு பக்கமாக சாய்ந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதனை அடுத்து அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் லாரியை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சரக்கு வேன் மீது மோதிய டிராக்டர்…. படுகாயமடைந்த 4 பேர்…. கோர விபத்து…!!

சரக்கு வேன் மீது டிராக்டர் மோதிய விபத்தில் 4 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீழக்குறிச்சியில் பாண்டிமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது சரக்கு வேணில் அதே பகுதியில் வசிக்கும் 4 பேருடன் மணப்பாறைக்கு சென்று விட்டு மீண்டும் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் புதுக்கோட்டை- விராலிமலை சாலை நவம்பட்டி அருகே சென்ற போது மூக்கையா என்பவர் ஓட்டி வந்த டிராக்டர் சரக்கு வேன் மீது பயங்கரமாக மோதியது. இந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஸ்கூட்டர் மீது மோட்டார்சைக்கிள் மோதல்…. பெண் பரிதாப பலி…. பெரும் சோகம்…..!!!!

கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி அருகில் வெள்ளச்சிவிளை பகுதியில் வசித்து வருபவர் செல்லத்துரை. இவரது மனைவி ஷைலஜா (42) நேற்று முன்தினம் தன் ஸ்கூட்டரில் வில்லுக்குறி சென்றுவிட்டு வீட்டிற்கு மீண்டும் புறப்பட்டார். இதையடுத்து ஷைலஜா வெள்ளச்சிவிளையை சென்றடைந்தபோது எதிரே மோட்டார்சைக்கிள் ஒன்று வந்தது. அந்த மோட்டார்சைக்கிளை தக்கலை பகுதியில் வசித்துவரும் செல்சோ என்பவர் ஓட்டிவந்துள்ளார். இந்நிலையில் ஸ்கூட்டர் மீது மோட்டார்சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதிவிட்டது. இதனால் விபத்தில் ஸ்கூட்டரிலிருந்து ஷைலஜா தூக்கிவீசப்பட்டார். இதில் ஷைலஜாவுடைய தலையில் பலத்தகாயம் ஏற்பட்டது. உடனடியாக […]

Categories
தேசிய செய்திகள்

டோல்கேட் ஊழியர் மீது மோதிய லாரி… பதைப்பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்…. மதுரையில் நடந்தது என்ன….?

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்கும் இடத்தில் பணியில் இருந்த ஊழியர் மீது லாரி மோதிய சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சி எல்லைக்குட்பட்ட கப்பலூர் சுங்கச்சாவடியில் காய்கறி லோடு  ஏற்றி வந்த சரக்கு லாரி ஃபாஸ்டேக் ஸ்கேன் செய்வதற்காக கட்டணம் வசூல் செய்யும் இடத்திற்கு வந்தது. அப்போது அதற்கு பின்னால் வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து முன்னாள் கட்டணம் வசூலிக்கும் இடத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

பரபரப்பு….! முன்னாள் முதலமைச்சர் பயணித்த படகு கவிழ்ந்து விபத்து….. மீட்ட மீனவர்கள்….!!!!

ஆந்திர முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்குவதற்காக கட்சியின் முக்கிய பிரமுகர்களுடன் சோம்பல்லி கிராமத்திற்கு சென்றார். கோதாவரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நிலையில் அதனை பொருட்படுத்தாமல், படகு மூலம் சென்றபோது, ​​எதிர்பாராதவிதமாக படகு தண்ணீரில் கவிழ்ந்தது. இதனால் படகில் இருந்த முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் தண்ணீரில் மூழ்கினர். இதில் சந்திரபாபு நாயுடுவும் நிலை தவறி நீரில் விழுந்தார். இதனை கவனித்த […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

லாரி மீது கார் மோதல்…. கோர விபத்தில் டிரைவர் பலி…. 4 பேர் படுகாயம்…. திருச்சியில் பரபரப்பு….!!!

லாரி மீது கார் மோதிய விபத்தில் ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள அவனியாபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்வதற்காக பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 5 பேர் காரில் சென்றுள்ளனர். இந்த காரை நிஹால் அகமது என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இவர்கள் மருத்துவ பரிசோதனை முடிவடைந்த பிறகு காரில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். இந்த கார் திருச்சி மாவட்டம் செவந்தாம்பட்டி அருகே வந்தபோது முன்னால் சென்று […]

Categories
அரசியல்

“மகிழ்ச்சி கடலில் எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள்”…. கோவை பிரபஞ்ச ஜோதிடர் சொன்ன தகவல்….!!!!!!!!!

கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதனை தடுக்கும் விதமாக திருச்சி சாலை மேம்பாட்டம் கட்டப்பட்டு சமூகத்தில் திறக்கப்பட்டது. இதில் அடுத்தடுத்து விபத்துக்கள் நடைபெறுவது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுவரை நடந்த மூன்று விபத்துகளில் மூன்று பேர் பலியாகி இருக்கின்றனர். நேற்றைய தினம் நான்காவது விபத்து நடைபெற்றுள்ளது. இதன் காரணமாக திகில் பாலமாக திருச்சி சாலை மேம்பாலம் மாறி இருக்கிறது. மேலும் இதில் செல்வதற்கே பொதுமக்கள் அஞ்சப்படும் நிலை உருவாகி […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்…. கோர விபத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பலி…. காஞ்சிபுரத்தில் பரபரப்பு….!!!

இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் சப்-இன்ஸ்பெக்டர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஓரிக்கை வேளிங்கப்பட்டறை தெருவில் முருகன்(59)  என்பவர் வசித்து வருகிறார். இவர் சுங்குவார்சத்திரம் காவல்நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக வேலைப்பார்த்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் வழக்கம் போல் பணிக்காக இருசக்கர வாகனத்தில் சுங்குவார்சத்திரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இவர் சின்னயன்சத்திரம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு லாரி திடீரென இருசக்கர வாகனத்தின் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பேக்கரி கடைக்குள் புகுந்த கார்…. 4 பேர் காயம்…. தீவிர விசாரணையில் போலீசார்…!!!!!!!!

சாலையோரம் இருந்த பேக்கரி கடைக்குள் கார் புகுந்ததில் நான்கு பேர் காயமடைந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் அருகே உள்ள அடுக்கு மலை என்னும் கிராமத்தை சேர்ந்த மணி மகன் மணிபாரதி என்பவர் வசித்து வருகிறார். இவர் திருக்கோவிலூர் அருகே மழவந்தாங்கல்  கிராமம் விழுப்புரம் திருவண்ணாமலை சாலை கூட்டு ரோட்டில் பேக்கரி கடை ஒன்றை  நடத்தி வருகின்றார். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் பேக்கரியில் மணிபாரதி அவரது மனைவி பூமல்லி  போன்றோர் இருந்தனர். அப்போது […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. துடிதுடித்து இறந்த விவசாயி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் பகுதியில் விவசாயம் நீலமேகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சொந்த வேலை காரணமாக மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் ஆதிச்சனூர் அருகே சென்ற போது அவ்வழியாக வேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த நீலமேகத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“பர்கூர் அருகே லாரி மீது கார் மோதி விபத்து”…. 8 பேருக்கு காயம்….!!!!!

பர்கூர் அருகே லாரி மீது கார் மோதியதில் எட்டு பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள். ஆந்திர மாநிலத்தில் உள்ள கடப்பா பகுதியை சேர்ந்த சுஜாதா, அருணா குமாரி, சுகாஷ், பிரசாந்தி, சின்வி, ஷெப்பன் மற்றும் டிரைவர் மகேஷ் உள்ளிட்ட 8 பேரும் சுற்றுலாவிற்காக ஊட்டிக்கு புறப்பட்டு உள்ளனர். அப்பொழுது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சின்ன பருகூர் அருகே வந்த பொழுது முன்னாள் சென்ற லாரி மீது கார் மோதியது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பகீர்!….அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து…. 17 பேர் காயம்…. பயங்கர சம்பவம்….!!!

திருவண்ணாமலை மாவட்ட ஆரணி அருகில் அபதாங்கள் கூட்ரோடு அருகில் ஆரணியில் இருந்து சென்னை நோக்கி அரசு பேருந்து சென்றுகொண்டு இருந்தது.  அப்போது சென்னையிலிருந்து போளூர் நோக்கி வந்த  அரசு பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில்  5 பெண்கள், 7 ஆண்கள், 3 சிறுவர்கள் மற்றும் அரசு பேருந்து ஓட்டுனர் ராஜேந்திரன், பாஸ்கர் மற்றும் நடத்துனர்கள் ஆனந்தன், ரஞ்சித் உள்ளிட்ட 17 பேர் கடுகாயமடைந்துள்ளனர். இதனையடுத்து படுகாயம் அடைந்தவர்களை போலீசார் மீட்டு ஆரணி அரசு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

பெரும் அதிர்ச்சி…..! பேருந்து கவிழ்ந்து பெரும் விபத்து….. 5 பயணிகளின் உடல்கள் மீட்பு….!!!

மத்தியப் பிரதேச மாநிலம் தார் மாவட்டம் கல்காட்டில் சுமார் 40 பயணிகளுடன் சென்ற பேருந்து நர்மதா ஆற்றில் கவிழ்ந்து விபத்துகுள்ளானது. தகவலின்படி, இந்தூரில் இருந்து மகாராஷ்டிரா நோக்கிச் சென்ற பயணிகள் பேருந்து கல்காட் சஞ்சய் சேது பாலத்திலிருந்து கவிழ்ந்தது. தற்போது 5 பயணிகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில், காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் உதவியுடன் தாம்னோட் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தம்னோட் போலீசார் மற்றும் கல்டகா போலீசார் சம்பவ இடத்திலேயே முற்றுகையிட்டு மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“குடிமங்கலம் அருகே வேன்- ஆட்டோ மோதியதில் 9 பேர் காயம்”…. வேன் டிரைவர் கைது….!!!!!

குடிமங்கலம் அருகே வேன் ஆட்டோ மோதியதில் 9 பேர் காயமடைந்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டியில் சேர்ந்த மாசாணம் என்பவர் ஒட்டன்சத்திரத்திலிருந்து காய்கறிகளை ஏற்றுக் கொண்டு கேரள மாநிலத்தில் உள்ள குருவாயூருக்கு செல்வதற்காக தாராபுரத்திலிருந்து பொள்ளாச்சி நோக்கி சரக்கு ஆட்டோவில் சென்று கொண்டு இருந்தார். அப்போது பொள்ளாச்சியில் இருந்து ராமேஸ்வரம் செல்வதற்காக வேன் ஒன்று 11 பேர்களை ஏற்றிக் கொண்டு ஓட்டமடம் சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னாள் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றதில் தாராபுரத்தில் இருந்து பொள்ளாச்சி […]

Categories
மாநில செய்திகள்

கன்னியாகுமரி டீக்கடை விபத்து….. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு….!!!!

கன்னியாகுமரி டீக்கடை விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ரூபாய் 50,000 நிவாரணமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “கன்னியாகுமரி மாவட்டம், பார்வதிபுரம் மேம்பாலத்தின் கீழ் அமைந்துள்ள ஷபிக் என்பவரின் டீக்கடையில் இன்று காலை சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த  விபத்தில் கடையில் வேலை பார்த்து வந்த மூசா, பிரவீன், சேகர் மற்றும் அங்கு தேநீர் அருந்த வந்த சுப்பையன், சுதா, சந்திரன், சுசீலா […]

Categories
உலக செய்திகள்

மெக்சிகோவில் ஹெலிகாப்டர் விபத்து…. கடற்படை வீரர்கள் 14 பேர் பலி…. பெரும் சோகம்….!!!!!!

மெக்சிகோ நாட்டில்  ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 14 கடற்படை வீரர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோ நட்டு கடற்படையின் தி பிளாக் ஹாக்ஹெலிகாப்டர், குவாடலஜாரா என்னும்போதே பொருள் கடத்தல் கும்பலின் தலைவரான ரபேல் கரோ குயின்டெரோவை கைது செய்து அழைத்து சென்ற மற்றொரு விமானத்திற்கு பாதுகாப்பிற்காக உடன் சென்றுள்ளது. அவர் சினலோவா என்னும்  வடக்கு மாநிலத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் கடற்கரை ஹெலிகாப்டர் திடீரென விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விபத்தில் அதில் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

லாரி மீது மோதிய கார்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்…. கோர விபத்து…!!

கண்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஜி.கார்னர் அருகே நேற்று காலை கண்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது.அதே நேரத்தில் அரியமங்கலத்தில் இருந்து திருச்சியை நோக்கி ஒரு கார் சென்றது. இந்நிலையில் எதிர்பாராதவிதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் கண்டெய்னர் லாரி மீது மோதியது. மேலும் லாரி சக்கரத்தில் சிக்கி கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார் ஓட்டுநர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வாகனத்திற்கு வழிவிட்ட லாரி…. பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்…!!

லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காயகரை பகுதியில் இருக்கும் கல்குவாரியில் இருந்து பாறைப்பொடி ஏற்றுக்கொண்டு டாரஸ் லாரி ஒன்று புறப்பட்டது. இந்த லாரி காயக்கரை இரட்டைகரை பாலம் அருகே சென்றபோது எதிரே வந்த வாகனத்திற்கு வழி விட்டது. அப்போது சாலையோரம் ஒதுங்கிய லாரி எதிர்பாராதவிதமாக பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லேசான காயத்துடன் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து வழக்கு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

குடித்துவிட்டு ஆட்டோ ஓட்டுநர் அட்டுழியம்…. பயங்கர விபத்தில் 3 பேர் படுகாயம்…. கோவையில் பரபரப்பு….!!!

பயங்கர விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள துடியலூர் பகுதியில் ஒரு ஆட்டோ வேகமாக சென்று கொண்டிருந்தது. இந்த ஆட்டோவை மோகன்ராஜ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அப்போது திடீரென அவ்வழியாக சென்ற மாணவி உட்பட 3 பேரின் மீது ஆட்டோ பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் அருகில் இருந்த சாக்கடைக்குள் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் டிரைவரும் தன்னுடைய ஆட்டோவுடன் சாக்கடைக்குள் விழுந்தார். இதைப் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“வீட்டிற்குள் புகுந்த கார்”…. சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்…. பெரும் பரபரப்பு….!!!!!!!!!

சேத்தியாத்தோப்பு அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் வீட்டிற்குள் புகுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மயிலாடுதுறை கீழ மூவர் கரை பகுதியைச் சேர்ந்த கோபி (42) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தங்கை அருள் மொழியுடன் திருவண்ணாமலையில்  இருந்து மயிலாடுதுறைக்கு காரில் சென்று கொண்டிருந்தார். இந்த நிலையில் இவர்களது கார் நேற்று காலை கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகே வளையமாதேவி பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“கும்முடிபூண்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது மோதிய வாகனம்”…. தனியார் தொழிற்சாலை ஊழியர் உயிரிழப்பு….!!!!!

கும்பிடிபூண்டி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தனியார் தொழிற்சாலை ஊழியர் உயிரிழந்துள்ளார். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கும்மிடிபூண்டி அடுத்திருக்கும் கோட்டக்கரையில் உள்ள நேதாஜி நகரை சேர்ந்தவர் ஏழுமலை(45). இவருக்கு தரணி என்ற மனைவியும் இரண்டு மகள்களும் இருக்கின்றனர். இவர் கும்மிடிபூண்டியில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த நிலையில் சென்ற ஒன்பதாம் தேதி சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பொழுது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“சுவாமிமலை அருகே இரண்டு பேருந்துகள் மோதல்”…. 20 பேருக்கு காயம்…!!!!!

சுவாமிமலை அருகே இரண்டு பேருந்துகள் மோதியதில் 20 பேர் காயமடைந்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து நேற்று காலை தனியார் பேருந்து ஒன்று கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்த பொழுது இந்த பேருந்தின் பின் மற்றொரு தனியார் பேருந்து சென்றது. அப்போது சுவாமி மலையை அடுத்துள்ள சுந்தர பெருமாள் கோவில் பேருந்து நிறுத்தத்தில் முதலில் சென்ற பேருந்து பயணிகளை ஏற்றுவதற்காக நின்று கொண்டிருந்த பொழுது பின்னால் வந்த தனியார் பேருந்து கட்டுப்பாட்டில் இழந்து முன்னால் நின்று பேருந்தின் மீது மோதியதில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தந்தையை கார் ஏற்றி கொல்ல முயன்ற நபர்…. குழந்தை உயிரிழப்பு…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

திண்டுக்கல் மாவட்ட ரெட்டியார்சத்திரம் அருகிலுள்ள சில்வார்பட்டியில் பொன்னுசாமி(34) என்பவர் வசித்து வருகிறார்.. அவருடைய ஒன்றரை வயது குழந்தை சாதனா. கடந்த 10 ஆம் தேதி காலை பொன்னுசாமி தனது குழந்தையை மோட்டார் சைக்கிளில் அழைத்துக் கொண்டு கடைக்குச் சென்றார். அதன் பிறகு அவர் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தபோது அதை ஊரைச் சேர்ந்த விவசாய ராஜேந்திரன்(45) என்பவர் ஒட்டி வந்த கார் எதிர்பாராத விதமாக பொன்னுச்சாமியின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வேன்-மோட்டார் சைக்கிள் மோதல்…. இன்ஜினியர் உள்பட 2 பேர் பலி…. குமரியில் கோர விபத்து…!!

வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் இன்ஜினியர் உள்பட 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குன்னங்காடு பகுதியில் மகாலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இன்ஜினியரான ரமேஷ்(28) என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனது நண்பரான சுபாஷ்(32) என்பவருடன் பிளாஸ்டிக் கேனில் குடிநீர் வினியோகம் செய்யும் தொழில் செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இருவரும் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் இரணியல் மேலத்தெரு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கார் மீது மோதி வேன்…. படுகாயமடைந்த 8 பேர்…. விருதுநகரில் பரபரப்பு…!!

கார் மீது வேன் மோதிய விபத்தில் 8 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தேசிகாபுரம் விலக்கு பகுதியில் தனியார் மில் மேன் சென்று கொண்டிருந்தது. இந்த வேன் சாலையில் திரும்ப முயன்ற போது ராஜபாளையம் நோக்கி சென்ற கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார் ஓட்டுநர் தாரிக், அவரது நண்பர் ஹக்கீம், மினி வேனில் பயணித்த வள்ளி, சித்தம்மாள், மணிகண்டன், கணபதியம்மாள், தேசியம்மாள், பேச்சியம்மாள் ஆகிய 8 பேரும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய மோட்டார் சைக்கிள்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வாரியூர் கிராமத்தில் விவசாயியான தங்கராஜ்(65) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று காலை தங்கராஜ் மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணன் புதூர் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அவர் சாலையில் திரும்ப முயன்ற போது பின்னால் வேகமாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் தங்கராஜின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த தங்கராஜை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய லாரி…. 5 பேருக்கு காயம்…. போலீஸ் விசாரணை….!!

கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடிய விபத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதி டிரைவர் உள்பட 5 பேர் காயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் ஒசகோட்டாவில் இருந்து லாரி ஒன்று இரும்பு காயில் ரோல் பாரம் ஏற்றிக்கொண்டு தர்மபுரி மாவட்டத்திலுள்ள கணை தொப்பூர் கணவாய் வழியாக பெருந்துறைக்கு சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள உத்தனப்பள்ளி பகுதியில் வசிக்கும் சிவராஜ் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் தொப்பூர் கணவாய் இரட்டை பாலம் அருகில் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“வாய்மேடு அருகே சென்று கொண்டிருந்த சரக்கு ஆட்டோ”…. கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் பாய்ந்ததில் டிரைவர் உயிரிழப்பு….!!!!!

வாய்மேடு அருகே சரக்கு ஆட்டோ ஆற்றில் பாய்ந்ததில் டிரைவர் உயிரிழந்தார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வாய்மேடு அடுத்த மருதூர் ஆண்டியப்பன் காட்டுப்பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார்(40) என்பவர் சொந்தமாக சரக்கு ஆட்டோ ஒட்டி வந்த நிலையில் நேற்று காலை தனது சரக்கு ஆட்டோவில் சிமெண்ட் மூட்டைகளை ஏற்றுக் கொண்டு தகட்டூர் கடை தெருவில் இருந்து தென்னடாறுக்கு சென்று கொண்டிருந்த பொழுது பஞ்ச நதிக்குளம் மேற்கில் சென்ற போது ஆட்டோ அவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக சென்று முள்ளியாற்றில் பாய்ந்ததில் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: 5 பேர் உயிரிழப்பு…. 10 பேர் கவலைக்கிடம்…. சென்னையில் சோகம்…..!!!!

சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தொடுப்பேடு அருகே அரசு பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதி மிகப் பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணம் செய்த ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சென்னை கோயம்பேட்டில் இருந்து இன்று அதிகாலை புறப்பட்ட அரசு பேருந்து சிதம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பெயரில் 20 க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர். இந்நிலையில் காலை 8 மணி அளவில் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தலைகீழாக கவிழ்ந்த கார்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 4 பேர்…. பரபரப்பு சம்பவம்…!!

கட்டுப்பாட்டை இழந்த கார் தலைகீழாக கவிழ்ந்த விபத்தில் 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிவானந்தபுரத்தில் ராமராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரவணன்(58) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சரவணன் தனது மனைவி, உறவினர் பெண் மற்றும் அவரது மகள் ஆகியோருடன் ஊட்டிக்கு காரில் சுற்றுலா சென்றுள்ளார். இவர்கள் ஊட்டியில் உள்ள அனைத்து இடங்களையும் சுற்றி பார்த்துவிட்டு கோத்தகிரி வழியாக கோவைக்கு காரில் புறப்பட்டனர். அப்போது லேசான மழை பெய்தது. இந்நிலையில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சாலையோரம் கவிழ்ந்த சரக்கு வேன்…. காயமடைந்த 30 பேர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வேன் கவிழ்ந்த விபத்தில் 30 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நாயக்கனூரில் வசிக்கும் 40 பேர் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சரக்கு வேனில் வெள்ளைகுட்டை நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்த வேனை மணி என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் மாரக்கான் ஏரி அருகே சென்று கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 30-க்கும் மேற்பட்டோர் […]

Categories

Tech |