Categories
உலக செய்திகள்

இடிந்து விழுந்த கூரை…. பள்ளியில் நடந்த விபரீதம்…. தீவிரப்பணியில் தீயணைப்பு குழுவினர்….!!

பள்ளிக் கூரை இடிந்து விழுந்ததில் குழந்தைகள் மற்றும் ஊழியர்கள் படுகாயமடைந்துள்ளனர். பிரித்தானியா தலைநகரான லண்டனில் Dulwich என்ற பகுதியில் துர்லோ பார்க் சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் இருக்கும் Rosemead Preparatory என்ற பள்ளியில் விபத்து ஒன்று நடந்துள்ளது. இது குறித்து லண்டன் தீயணைப்பு குழுவினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் “பள்ளியில் உள்ள இரண்டாவது மாடியின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் 20 பேர் வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சிவகாசி அருகே பயங்கரம்….. “பட்டாசுகள் வெடித்து தரைமட்டமான கட்டடம்”… 2 பேர் படுகாயம்… 3 பேரின் நிலை?

சிவகாசி அருகே குழாய் கம்பெனியில் பட்டாசுகள் வெடித்து கட்டிடம் தரைமட்டம் ஆனதில்  இருவர் படுகாயமடைந்துள்ளனர்.  விருதுநகர் மாவட்டம் சிவகாசி மேற்கு நேருஜி நகரில் இருக்கும் குழாய் கம்பேனியில் சட்ட விரோதமாக பதுக்கிய பேன்சி ரக பட்டாசுகள் வெடித்து 2 மாடி கட்டிடம் தரைமட்டம் ஆனது. இது குறித்து தகவலறிந்து வருவாய் துறை, காவல்துறை, தீயணைப்பு துறையினர் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்தனர்.. இதையடுத்து கம்பெனியில் பணிபுரிந்த மனோஜ்குமார், வேல்முருகன் ஆகிய இருவரை தீயணைப்பு துறையினர் படுகாயங்களுடன் மீட்டு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: விபத்து இழப்பீடு வழங்குவதில் பாரபட்சம்…. நீதிபதி வேதனை…!!!

விபத்து இழப்பீடு வழங்குவதில் பாரபட்சம் இருப்பதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார். இரு வேறு விபத்துக்களில் மரம் விழுந்து பலியான முதியவர் மற்றும் ஆசிரியர் குடும்பத்தினர் சார்பில் இழப்பீடு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி எம். எஸ். சுப்பிரமணியம் இழப்பீடு வழங்குவது தொடர்பாக 8 வாரங்களில் விதிகளை வகுக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டார். இழப்பீடுகளில் சிலருக்கு ஒரு கோடி வரையும், சிலருக்கு ஒரு […]

Categories
மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ்…. செங்கத்தில் பரபரப்பு….!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம் பகுதியில் இருந்து இரண்டு நோயாளிகளை ஏற்றிக் கொண்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இன்று அதிகாலை 108 ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது செங்கம் அருகிலுள்ள தானகவுண்டன்புதூர் அருகில் சென்று கொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் சாலையோரம் இருந்த ஓடையில் இறங்கியது. இந்த விபத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. அதன்பிறகு பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு ஓடை தண்ணீரில் சிக்கிய ஆம்புலன்ஸ் வாகனத்தை மீட்டனர். இந்த […]

Categories
உலக செய்திகள்

“நடுவானில் பறந்தபோது இயந்திரக்கோளாறு!”.. கடலில் விழுந்த விமானம்.. வெளியான பரபரப்பு வீடியோ..!!

ஆஸ்திரேலியாவில் நடுவானில் பறந்த போது, விமானத்தின் என்ஜினில் பழுது ஏற்பட்டு கடலுக்குள் விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆஸ்திரேலியாவில் இருக்கும் perth என்னும் நகரத்தின் கடலில் தான் விமானம் விழுந்திருக்கிறது. சிறிய வகை விமானத்தில் இரண்டு நபர்கள் பயணித்துள்ளனர். அப்போது, விமானம் நடு வானத்தில் பறந்து கொண்டிருந்த சமயத்தில், என்ஜினில் பழுது ஏற்பட்டிருக்கிறது. எனவே, விமானி, உடனடியாக விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்திருக்கிறார். அதன்பின்பு விமானம், விமானியின் கட்டுப்பாட்டை இழந்துவிட்டது. அதனையடுத்து, விமானம் கடலில் விழுந்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அறுந்து கிடந்த மின்கம்பி…. வேன் கிளீனருக்கு ஏற்பட்ட நிலை…. பொள்ளாச்சி அருகே சோகம்….!!

பொள்ளாச்சி அருகே வேன் கிளீனர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பொள்ளாச்சி அருகே உள்ள வாழைக்கொம்பு  நாகூரை சேர்ந்தவர் குழந்தைவேல் (வயது47) . இவர் ஒரு தனியார் பள்ளியில் வேன் கிளீனராக வேலை செய்து வருகிறார். இவர் பள்ளிக்கு அருகில் உள்ள தோட்டத்தில் நடந்து கொண்டிருந்தபோது மின்கம்பி அறுந்து கிடந்துள்ளது. அதை அவர் கவனிக்காமல் மிதித்ததால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து அவரின் உடலை மீட்டு […]

Categories
தேசிய செய்திகள்

‘பூஜையை முடிச்சுட்டு தான் வந்தாங்க’…. ஒன்பது பேர் பலியான சோகம்…. தீவிர விசாரணையில் போலீசார்….!!

கனரக வாகனம் ஆட்டோ ரிக்ஷா மீது மோதியதில் ஒன்பது பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அசாம்- திரிபுரா எல்லையை ஒட்டியுள்ள கரீம்கஞ்ச் மாவட்டத்தில் பதர்கண்டி என்ற தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை கனரக வாகனம் ஒன்று வேகமாக வந்துள்ளது. இதனை அடுத்து அந்த கனரக வாகனமானது எதிரே வந்த ஆட்டோ ரிக்ஷாவின் மீது மோதியுள்ளது. இக்கோர விபத்தில் ஆட்டோ ரிக்ஷாவில் பயணம் செய்த 3 சிறுவர்கள் உட்பட மொத்தம் ஒன்பது பேர் பரிதாபமாக […]

Categories
தேசிய செய்திகள்

மின்னல் வேகத்தில் வந்த சொகுசு கார்…. தூக்கி எறியப்பட்ட சிறுவன்…. நெஞ்சை பதபதைக்கும் சம்பவம்….!!!

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை சாலையில் வேகமாக சென்ற ஆடி கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் அங்கு சென்ற இருசக்கர வாகனங்கள் மீது மோதியது. இதையடுத்து சாலையோரத்தில் உள்ள கடை ஒன்றுக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 16 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளான். மேலும் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர்.இதை அறிந்து உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அந்த காவல்துறையினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் படுகாயம் அடைந்தவர்களில் […]

Categories
உலக செய்திகள்

வெடித்து சிதறிய லாரி…. 100-க்கும் மேற்பட்டோருக்கு நடந்த விபரீதம்…. பிரபல நாட்டில் சோகம்….!!

பெட்ரோல் லாரி வெடித்த விபத்தில் உயிரிழந்த 100-க்கும் மேற்பட்டோர் சடலங்கள் ஒரே இடத்தில் அருகருகே புதைக்கப்பட்டது. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோன் தலைநகர் ஃப்ரீடௌனின் புகர்ப் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு சென்று கொண்டிருந்த பெட்ரோல் லாரி மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதனையடுத்து லாரியில் இருந்து கசிந்த பெட்ரோலை சேகரிப்பதற்காக அந்தப் பகுதியில் உள்ள பெரும்பாலானவர்கள் அங்கு கூடினர். அப்போது திடீரென்று லாரி தீப்பிடித்து வெடித்து சிதறியது. இதனால் சம்பவத்தில் 100-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்ற தொழிலாளி…. வழியில் நடந்த சோகம்…. போலீஸ் விசாரணை….!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள முகந்தனூர் காலனி தெருவில் கூலி தொழிலாளி விஜய் வசித்து வந்தார். இவர் தனது நண்பர் தீபக் என்பவருடன் கங்களாஞ்சேரியில் இருந்து வீட்டிற்கு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது  பொம்மாநத்தம் என்ற இடத்தில் சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் விஜய் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதில் தீபக் காயங்களுடன் திருவாரூர் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

வாகனம் மோதி விபத்து…. தொழிலாளிக்கு நேர்ந்த துயரம்…. தர்மபுரியில் சோகம்….!!

மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள குரும்பட்டி கிராமத்தில் தொழிலாளி முருகன் வசித்து வந்தார். இவர் மோட்டார் சைக்கிளில் புறவடை தேசிய நெடுஞ்சாலை பிரிவு ரோடு பகுதியில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அவ்வழியாக வந்த ஒரு வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதனால் தூக்கி வீசப்பட்ட முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர் மோதி விபத்து…. 2 பேருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

ஜீப்-மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் 2 வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள இருட்டிபாளையத்தில் சதீஷ் என்பவர் வசித்து வந்தார். இவர் குத்தியாலத்தூர் ஊராட்சியில் தற்காலிக பணியாளராக வேலை பார்த்து வந்தார். இவருடைய நண்பரான கணபதிபாளையத்தை சேர்ந்த பழனிச்சாமி கூலித் தொழிலாளியாக இருந்தார். இவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் இருட்டிபாளையத்திற்கு சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் ஜீவா நகர் அருகில் ஒரு வளைவில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே […]

Categories
உலக செய்திகள்

“நைஜீரியாவில் பயங்கரம்!”.. அதிவேகமாக வந்த டேங்கர் லாரி ஆட்டோக்கள் மீதி மோதி கொடூர விபத்து.. 6 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு..!!

நைஜீரியாவில் சாலையோரத்தில் நின்ற ஆட்டோக்கள் மீது டேங்கர் லாரி ஒன்று மோதியதில் விபத்து ஏற்பட்டு 6 பேர் பலியாகியுள்ளனர். நைஜீரிய நாட்டில் சாலைகள் மோசமாக இருப்பது மற்றும் அதிவேகமாக செல்லும் வாகனங்கள் போன்றவற்றால் விபத்துக்கள் அதிகமாக ஏற்படுகிறது. இந்நிலையில், நைஜீரியாவின் எனுகு நகரத்தில் இருக்கும் ஒரு சந்தைப் பகுதியில் நின்ற சில ஆட்டோக்களில் பயணிகள் ஏறிக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் தண்ணீரை ஏற்றி வந்த டேங்கர் லாரி அதிவேகத்தில் வந்து சாலையோரத்தில் நின்ற ஆட்டோக்கள் மீது தாறுமாறாக […]

Categories
சற்றுமுன் நீலகிரி மாவட்ட செய்திகள்

JUST IN: பள்ளத்தில் கவிழ்ந்து கார் விபத்து…. 3 பேர் பலி…. பெரும் சோகம்…!!!

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கொடைக்கானல் மலைச் சாலையில் கார் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அடுக்கம்  பகுதியில் பள்ளத்தில் உருண்டு விழுந்தது வழக்கறிஞரின் குடும்பத்தினர் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தீபாவளியை கொண்டாட சென்றபோது…. வழியில் ஏற்பட்ட விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

இருசக்கர வாகனம் கட்டுபாட்டை இழந்து மின் வேன் மீது மோதியதில் தந்தை மற்றும் மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை அடுத்துள்ள அனுமந்தன்பட்டியில் மணி என்பவர் வசித்து வந்துள்ளார். திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் இவருக்கு கவுசல்யா என்ற மனைவியும், விபூஷன் என்ற 3 வயது மகனும் உள்ளனர். இந்நிலையில் மணி மனைவி மற்றும் மகனுடன் திருப்பூரில் வசித்து வந்த நிலையில் தீபாவளியை கொண்டாடுவதற்காக சொந்த ஊருக்கு இருசக்கர வாகனத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள்

கார் மோதி விபத்து…. 7 வயது சிறுவனுக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

கோவை மாவட்டம் கருத்தம்பட்டி அருகிலுள்ள முதலிபாளையத்தில் சிவகுமார்(37) என்பவர் வசித்து வந்தார். இவர் அந்த  பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ரம்யா என்ற மனைவி(30) மற்றும் பிரணவ்(7), சாய்(2) ஆகிய இரு மகன்கள் உள்ளனர். இவர்கள் நான்கு பேரும் தீபாவளி பண்டிகைக்காக குன்னத்தூர் பகுதியில் உள்ள ரம்யாவின் தாய் வீட்டிற்கு பைக்கில் சென்றார். அப்போது சேலம்-கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் கணியூர் டோல் கேட் அருகில் சென்று கொண்டிருக்கும் போது சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கார் மோதி விபத்து…. 2 பேருக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள நவப்பட்டி கிராமத்தில் ஆனந்தன் என்பவர் வசித்து வந்தார். இவர் லாரி டிரைவராக இருந்தார். இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த கவின்குமார், சிவா ஆகிய 2 பேர் நண்பர்களாக இருந்தனர். இவர்கள் 3 பேரும் சேர்ந்து  மேட்டூரிலிருந்து புதூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே மேட்டூரை சேர்ந்த சதாம் உசேன் பவானியில் இருந்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வாகனத்தில் சென்ற முதியவர்… வழியில் ஏற்பட்ட விபரீதம்… கார் டிரைவர் கைது…!!

இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்திற்குள்ளானதில் முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ் மங்கலத்தை அடுத்துள்ள ஏ.ஆர் மங்கலம் கிராமத்தில் சந்தியாகு என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் இருசக்கர வாகனத்தில் ஆர்.எஸ்.மங்கலம் விலக்கு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பகுதி வழியாக வந்த கார் எதிர்பாராதவிதமாக இரு சக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் சந்தியாகு பலத்த காயம் அடைந்துள்ளார். இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் உடனடியாக முதியவரை மீட்டு ராமநாதபுரம் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

வாகனம் மோதி விபத்து…. முதியவருக்கு நேர்ந்த துயரம்…. திருவாரூரில் சோகம்….!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள பண்டாரவாடை பகுதியில் முதியவர் ராமையன் வசித்து வந்தார். இவர் கூலித் தொழிலாளியாக இருந்தார். இந்நிலையில் பேரளம்- காரைக்கால் சாலையில் முதியவர் நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் முதியவர் மீது மோதியது. இதனால் படுகாயமடைந்த முதியவர் ராமையன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராமையனின் சடலத்தை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர் மோதி விபத்து…. டிரைவருக்கு நேர்ந்த சோகம்…. போலீஸ் விசாரணை….!!

சரக்கு ஆட்டோ- கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் டிரைவர்கள் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள திங்களூர் சுப்பையான்பாளையத்தில் ஜெகன்குமார் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு சுப்புலட்சுமி என்ற மனைவி இருக்கின்றார். இந்த தம்பதியினருக்கு சிவசபரி என்ற மகனும், சுஜயா ஸ்ரீ என்ற மகளும் இருக்கின்றனர். இவர்களில் ஜெகன்குமார் வாடகை கார் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் ஜெகன்குமார் தனது நண்பர்களான வேலுமணி, தமிழ்ச்செல்வன், சுரேஷ் ஆகியோருடன் கோபியில் […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

ஒற்றை டயரில் பைக்கில் சாகசம்…. சில நிமிடங்களில் நடந்த கொடூரம்…. அதிரவைக்கும் காட்சி…!!!

இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் பிரபலமாக வேண்டும் என்ற ஆசையில், செய்யும் ஒரு சில செயல்களினால் பேராபத்தை சந்தித்து வருகின்றனர். இதனால் உயிரை கூட இழந்து வருகின்றனர். அந்தவகையில் இளைஞர் ஒருவர் மிக ஆபத்தான முறையில் சாலையில் பைக்கில் சாகசம் செய்ய முயன்று விபத்தில் முடிந்த வீடியோவானது இணைய சமூகவலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் அந்த நபர் மோட்டார் சைக்கிள் சாகசம் செய்கிறார். அப்போது முன் டயரை தூக்கி பைக்கை ஓட்டிச்செல்லும் போது முன்னே சென்றுகொண்டிருந்த […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

நடந்து சென்ற முதியவர்…. வழியில் நடந்த விபரீதம்…. தர்மபுரியில் சோகம்….!!

மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள அம்பாலப்பட்டியில் முதியவர் முத்துசாமி வசித்து வந்தார். இவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது அதே பகுதியைச் சேர்ந்த இந்தியன் (எ) மாக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அந்த மோட்டார்சைக்கிள் திடீரென முதியவர் மீது மோதியது. இதனால் படுகாயமடைந்த முதியவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி புதியவர் முத்துசாமி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விபத்திற்கு பிறகு நடக்க தொடங்கிய யாஷிகா…. அவரே வெளியிட்ட வீடியோ பதிவு….!!!

யாஷிகா ஆனந்த் கைப்பிடி உதவியுடன் நடக்கும் வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் யாஷிகா ஆனந்த் பிரபல நடிகைகளில் ஒருவர் ஆவார். கடந்த ஜூலை மாதம் தனது தோழிகளுடன் நடிகை யாஷிகா சென்ற கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாஷிகாவின் தோழியான பவானி செட்டி சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இதனையடுத்து, யாஷிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு இடுப்பு மற்றும் கால் பகுதியில் எலும்புகள் உடைந்தன. இதற்காக இவர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், கைப்பிடி […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீரில் மினி பேருந்து விபத்து… 11 பேர் பரிதாப பலி… நிவாரணம் அறிவித்த பிரதமர் மோடி !!

காஷ்மீரில் மினி பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்து நேரிட்ட விபத்தில் 11 பேர் உயிரிழந்த நிலையில், அவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி நிவாரண உதவிகளை அறிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரில் தாத்ரி நகரிலிருந்து தோடா நோக்கி  கிளம்பிய மினி பேருந்து சுய்கௌரி என்ற  இடத்தில் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அருகில் உள்ள பள்ளத்தில் விழுந்து உருண்டு ஓடியதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர். இந்தக் கோர விபத்தில் பேருந்து படுமோசமாக சிதைந்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

திடீரென ஏற்பட்ட விபத்து…. அரசு அதிகாரிகள் தீவிர விசாரணை…. பிரபல நாட்டில் நடந்த சம்பவம்….!!

இந்தோனேசியாவில் சரக்குகளை ஏற்றி சென்ற விமானம் தரையில் விழுந்தது தொடர்பாக அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்தோனேசியாவில் பப்புவா என்னும் மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்திலிருந்து விமானம் ஒன்று சரக்குகளை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளது. அவ்வாறு சரக்குகளை ஏற்றிக் கொண்டு சென்ற அந்த விமானம் கொஞ்ச நேரத்திலேயே தரையில் விழுந்துள்ளது. ஆகையினால் சரக்குகளை ஏற்றிக்கொண்டு சென்ற அந்த விமானத்தின் விமான பயணி விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விபத்து தொடர்பாக இந்தோனேசிய அதிகாரிகள் தீவிர விசாரணை […]

Categories
தேசிய செய்திகள்

காப்பாத்துங்க காப்பாத்துங்க… விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றாமல் வீடியோ எடுத்த மக்கள்… என்ன உலகம்டா இது…!!!

விபத்தில் சிக்கிய தாய் மற்றும் மகனை காப்பாற்றாமல் பொதுமக்கள் வீடியோ எடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவர்கள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். தமிழ்நாடு தர்மபுரி பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவரின் மனைவி ஸ்ரீதேவி. இவர்களுக்கு தீக்‌ஷித்  என்ற ஒரு வயது குழந்தை உள்ளது. இவர்கள் பெங்களூர் கே ஆர் புரம் பகுதியில் வசித்து வருகின்றனர். அங்கு சிவகுமார் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை சிவகுமார் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் தர்மபுரி […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மருத்துவமனைக்கு சென்ற வாலிபர்…. வழியில் நடந்த துயரம்…. தர்மபுரியில் சோகம்….!!

மோட்டார்சைக்கிளில் நிலைதடுமாறி கீழே விழுந்த வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நவலை கிராமத்தில் செந்தமிழ் என்பவர் வசித்து வந்தார். இவர் மொரப்பூரில் உள்ள மருத்துவமனைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது நவலை ஏரிக்கரை அருகில் செந்தமிழ் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதனால் படுகாயமடைந்த செந்தமிழை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செந்தமிழ் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை […]

Categories
தேசிய செய்திகள்

அதிவேகமாக வந்த டேங்கர் லாரி… சுக்குநூறாக நொறுங்கிய வாகனங்கள்… 5 பேர் பலி…!!!

அதிவேகமாக வந்த டேங்கர் லாரி அடுத்தடுத்த வாகனங்களின் மீது மோதிய காரணத்தினால் சம்பவ இடத்திலேயே 5 பேர் உடல் நசுங்கி பலியாகி உள்ளனர். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து ரசாயன பொருட்களை ஏற்றிக்கொண்டு மராட்டிய மாநிலம் புனே  நோக்கி ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. புனேயின் நவாலி என்ற பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி அதிவேகமாக சென்றதில் அடுத்தடுத்த வாகனங்களின் மீது மோதியது. இதில் கிட்டதட்ட பத்து முதல் பதினைந்து வாகனங்களின் மீது […]

Categories
இந்திய சினிமா சினிமா

படப்பிடிப்பில் பயங்கரம்…. துப்பாக்கிச்சூடு நடத்திய நடிகர்…. ஒளிப்பதிவாளர் உயிரிழப்பு….!!

படப்பிடிப்பின்போது நடந்த விபத்தினால் பெண் ஒளிப்பதிவாளர் உயிரிழந்தார் ஹாலிவுட் திரையுலகில் ஜோயல் சோசோ இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ரஸ்ட்’.  இந்த படத்தின் படப்பிடிப்பு மெக்சிகோவில் நடைபெற்று வந்த நிலையில், நடிகர் அலெக் பால்ட்வின் நடிக்கும் ஆக்சன் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது, சண்டைக்காட்சியில் பயன்படுத்தப்படும் துப்பாக்கியால் நடிகர் சுட்டதில் ஒளிப்பதிவாளர் ஹலினா ஹட்சின்ஸ் உயிரிழந்தார். மேலும், இயக்குனர் ஜோயல் சோசாவும் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். எதிர்பாராமல் நடந்த விபத்தினால் இந்த படத்தின் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்ற ஆசிரியர்…. பாலத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சோகம்….!!!!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே, மதுரை- தூத்துக்குடி 4 வழிச்சாலையில் குண்டாறு பாலத்தின் மீது இருசக்கர வாகனத்தில் சென்ற அரசுப் பள்ளி ஆசிரியை பாலத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். விருதுநகர் மாவட்டம் பாலாஜி நகரை சேர்ந்தவர், தாமோதரன் மனைவி விஜயமாலினி. இவர் அருப்புக்கோட்டை அருகே சொக்கம்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார். இதையடுத்து விஜயமாலினி தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் விருதுநகரிலிருந்து சொக்கம்பட்டி பள்ளிக்கு சென்று கொண்டிருக்கும் போது மதுரை -தூத்துக்குடி 4 […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வெவ்வேறு இடத்தில் நடந்த விபத்து… மூதாட்டி உள்பட 2 பேர் பலி… போலீஸ் விசாரணை…!!

வெவ்வேறு இடங்களில் நடந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அடுத்துள்ள கம்பங்குடி பகுதியில் செல்லம்மாள் என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இவர் சம்பவத்தன்று மதுரை-தொண்டி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பகுதி வழியாக வந்த வாகனம் எதிர்பாராத விதமாக செல்லம்மாள் மீதி மோதியுள்ளது. இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து திருவாடனை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல் […]

Categories
தேசிய செய்திகள்

திடீரென வெடித்த டயர்… பாலத்தில் இருந்து விழுந்து நொருங்கிய பேருந்து… ஒருவர் பலி…!!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாலத்தில் இருந்து பேருந்து கீழே விழுந்த விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் அருகே பாலத்தில் இருந்து பேருந்து ஒன்று கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். நொய்டாவில் இருந்து காசியாபாத்க்கு ஒரு பேருந்து 8 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்து பாடியா போத் என்ற இடத்தில் மேம்பாலத்தில் வரும்பொழுது பேருந்தின் டயர் திடீரென வெடித்தது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பாலத்தில் இருந்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

நடந்து சென்றுகொண்டிருந்த நபர்… வழியில் ஏற்பட்ட விபரீதம்… போலீஸ் விசாரணை…!!

சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தவர் மீது இருசக்கர வாகனம் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அரியலூர் மாவட்டம் கொல்லாபுரம் கிராமத்தில் முத்துகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் சாலையோரத்தில் நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அப்பகுதி வழியாக சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக முத்துகுமார் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் முத்துகுமார் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற அரியலூர் காவல்துறையினர் உயிரிழந்தவரின் உடலை மீட்டு […]

Categories
உலக செய்திகள்

தண்டவாளத்தில் படுத்திருந்த புலம்பெயர்ந்த மக்கள்.. ரயிலில் அடிபட்டு மூவர் பலி.. பிரான்சில் துயர சம்பவம்..!!

பிரான்சில் புலம் பெயர்ந்த மக்கள் தண்டவாளத்தில் படுத்திருந்தபோது ரயிலில் அடிபட்டு 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பிரான்ஸில் உள்ள Saint-Jean-de-Luz என்ற பகுதிக்கு அருகில் இருக்கும் தண்டவாளத்தில் புலம்பெயர்ந்தோர் நான்கு பேர் படுத்திருந்துள்ளனர். அப்போது, அதிகாலை சுமார் 5 மணியளவில் Bordeaux-க்கு சென்று கொண்டிருந்த ரயில், அவர்கள் மேல் ஏறிச்சென்றது. இதில் மூவர், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மீதமுள்ள ஒருவர், படுகாயங்களுடன் உயிர் பிழைத்துள்ளார். இதனை காவல்துறையினரின் செய்தி தொடர்பாளர் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

வேன் மீது லாரி மோதி 25 பேர் படுகாயம்…. 3 பேர் கவலைக்கிடம்… திருச்சி அருகே கோர விபத்து….!!!!

திருச்சி மாவட்டம் முக்கோம்பு அருகே சாலையில் சென்று கொண்டிருந்த வேன் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் வேன் கவிழ்ந்தது. இதில் 25 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்து உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் அனைவரும் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.அவர்களில் மூன்று பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

திடீரென வெடித்த தார் பாய்லர்…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தொழிலாளி உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டத்திலுள்ள பஞ்சு காளிப்பட்டி அண்ணாநகர் பகுதியில் கூலித்தொழிலாளி பூபதி வசித்து வந்தார். இவருக்கு மணிமேகலை என்ற மனைவியும், 3 பெண் குழந்தைகளும் இருக்கின்றனர். வாழப்பாடி அருகில் உள்ள முத்தம்பட்டி மைக்ரோ ஸ்டேஷன் பேருந்து நிறுத்தம் அருகில் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தினர் பிளாட் அமைத்துள்ளனர். அங்கு தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தார் சாலை போடும் பணியில் பூபதி மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

சுவர் இடிந்து விழுந்த விபத்தில்… ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பலி… சோக சம்பவம்…!!!

தெலுங்கானா மாநிலத்தில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியாகிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் ஜோகுலம்பா கத்வால் மாவட்டத்தில் உள்ள கோத்தபள்ளி என்ற கிராமத்தில் கனமழை காரணமாக சுவர் இடிந்து விழுந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 3 குழந்தைகள் ஆவார்கள். இருவர் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். அவர்களுக்கு மருத்துவமனையில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இருசக்கரவாகனம்-லாரி மோதல்… உதவியாளருக்கு ஏற்பட்ட விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் ஆரம்ப சுகாதார நிலைய உதவியாளர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள வடகரையாத்தூரில் விஸ்வநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொல்லிமலையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று வழக்கம்போல வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து நாமக்கல் வள்ளிபுரம் நல்லாயி அம்மன் கோவில் அருகே சென்று கொண்டிருத்த போது முன்னாள் சென்றுகொண்டிருந்த வாகனத்தை முந்தி செல்ல […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

நண்பருடன் சென்ற வாலிபர்… வழியில் ஏற்பட்ட விபரீதம்… உறவினர்கள் சாலை மறியல்..!!

இருசக்கர வாகனம் மீது டிப்பர் லாரி மோதியதில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் உப்புகோட்டையை அடுத்துள்ள மாணிக்காபுரத்தில் அஜ்மல்கான் என்ற இளைஞன் வசித்து வந்துள்ளார். இவர் உப்புகோட்டையை சேர்த்த தனது நண்பரான ஸ்ரீதருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது சடையால்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருத்த போது எதிரே வந்து கொண்டிருத்த டிப்பர் லாரி எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் […]

Categories
உலக செய்திகள்

சாலையில் மகனுடன் நடந்து சென்ற தாய்.. வாகனத்தில் மோதி கொல்ல முயன்ற நபர் பலி.. பரபரப்பு சம்பவம்..!!

பிரிட்டனில் சாலையில் மகனுடன் சென்று கொண்டிருந்த, பெண்ணை கத்தியால் குத்தி விட்டு தப்பிக்க முயற்சித்த நபர் சிறிது நேரத்தில் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இங்கிலாந்தில் இருக்கும் Egremont நகரின் Woodend பகுதியில் நேற்று மதியம் 2:30 மணிக்கு, 40 வயதுடைய பெண் ஒருவர், தன் மகனுடன் நடந்து சென்றிருக்கிறார். அப்போது சிகப்பு நிறத்திலான Kia Rio வாகனம் ஒன்று, அதிவேகத்தில் வந்து அவர்கள் மீது மோதியிருக்கிறது. இதில், காயமடைந்த இருவரும் கீழே விழுந்த சமயத்தில், வாகனத்திலிருந்து […]

Categories
மாநில செய்திகள்

கண்டெய்னர் லாரி விபத்துகள்…. தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

உயர்நீதிமன்றம் கண்டெய்னர் லாரி விபத்துகளைப் பற்றி ஒவ்வொரு மாதமும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. சாலைகளில் கண்டைனர் லாரிகளால் ஏற்படும் விபத்துகளை தடுப்பதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து ஒவ்வொரு மாதமும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் கண்டெய்னர் லாரிகளில் அனுமதிக்கப்பட்டதை விட அதிகமான எடையை ஏற்றி செல்லுவதால் ஏற்படும் விபத்துகளை தடுப்பதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை […]

Categories
உலக செய்திகள்

தென்சீனக்கடலில் விபத்துக்குள்ளான கப்பல்… 11 மாலுமிகள் பலத்த காயம்… வெளியான பரபரப்பு தகவல்..!!

அமெரிக்காவின் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று தென் சீனக்கடலில் பயணித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக பொருள் ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென் சீன கடல் பகுதியில் நீருக்கு அடியில் பயணம் செய்து கொண்டிருந்த அணு ஆயுதத் திறன் கொண்ட அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கி கப்பலான யூஎஸ்எஸ் கனெக்டிகட் நீர்மூழ்கி கப்பல் அடையாளம் தெரியாத பொருள் ஒன்றின் மீது மோதியுள்ளது. இந்த தகவலை அமெரிக்க அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். மேலும் அந்தக் கப்பல் விபத்தில் 11 […]

Categories
தேசிய செய்திகள்

லாரி மீது மோதிய பேருந்து…. 12 பேர் பலி… 32 பேர் படுகாயம்… உ.பி யில் பெரும் சோகம்…!!!

உத்திரபிரதேசத்தில் லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் 12 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் பரபங்கி என்ற மாவட்டத்தில் உள்ள பாபுரி கிராமத்தைச் சேர்ந்த தனியார் பேருந்து ஒன்று நேற்று டெல்லியில் பக்ரியாச் என்ற இடத்தில் இருந்து 60 பயணிகளை ஏற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்தது. அப்போது பாபுரி என்ற கிராமத்தின் அருகே உள்ள நெடுஞ்சாலையில் வரும்பொழுது சாலையில் நின்றிருந்த மாடுகள் மீது மோதாமல் இருப்பதற்காக ஓட்டுநர் பேருந்தை திருப்பியுள்ளார். அப்போது […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே! விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றினால் ரூ.5000…. அதிரடி அறிவிப்பு…!!!

சாலை விபத்துகளில் சிக்கி இருப்பவர்களை மீட்டு அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்பவர்களுக்கு ரூபாய் 5000 பரிசு வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒவ்வொரு வருடமும் உயிரை காப்பாற்றிய மிகவும் தகுதியான பத்து நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு தேசிய அளவில் விருது மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விபத்தில் சிக்கியவர்களுக்கு “கோல்டன் ஹவர்” […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

வேன் மோதி விபத்து…. தொழிலாளிக்கு நேர்ந்த துயரம்…. தர்மபுரியில் சோகம்….!!

மொபட் மீது வேன் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள புதுநாகமரை பகுதியில் கூலித்தொழிலாளி சுப்பிரமணி வசித்து வந்தார். இவருக்கு வீரம்மாள் என்ற மனைவியும், 2 மகள்களும், 3 மகன்களும் இருக்கின்றனர். இதில் வீரம்மாள் தற்போது 5 மாத கர்ப்பிணியாக இருக்கின்றார். கடந்த மாதம் 12-ஆம் தேதி சுப்பிரமணி மொபட்டில் ஏரியூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த வேன் சுப்பிரமணி மொபட் மீது மோதியது. இதனால் படுகாயமடைந்த […]

Categories
உலக செய்திகள்

என்ன காரணமாக இருக்கும்….? தரையில் விழுந்த விமானம்…. 2 பேர் பலியான சோகம்….!!

விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.. பிரான்ஸ் நாட்டில் உள்ள தென்கிழக்கு பகுதியில் டிரேம் நகர் அமைந்துள்ளது. இந்த நகரில் இருந்து ஒற்றை இன்ஜின் உடைய சிறிய வகை விமானம் ஒன்று புறப்பட்டு உள்ளது. குறிப்பாக விமானம் புறப்பட்டு வானில் பறந்து கொண்டிருந்த சில மணி நேரத்திலேயே திடீரென தரையில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளதாக […]

Categories
உலக செய்திகள்

வானில் பறந்து கொண்டிருந்த ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டர்… எதிர்பாராமல் நடந்த விபரீதம்… பிரபல நாட்டில் கோர சம்பவம்..!!

நேற்று அபுதாபியில் வானில் பறந்து கொண்டிருந்த ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டர் ஒன்று திடீரென தரையில் விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒரு மருத்துவர் உட்பட நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். காவல்துறையினரின் மருத்துவ உதவிக்காக ஐக்கிய அரபு அமீரகத்தில் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ்கள் பயன்பாட்டில் உள்ளது. மேலும் இந்த மருத்துவ ஹெலிகாப்டர்கள் மூலம் காவல்துறையினருக்கு உதவிகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதோடு மட்டுமில்லாமல் இந்த ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ்கள் மருத்துவ காரணங்களுக்காகவும் காவல்துறையினரை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அழைத்து செல்லவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த […]

Categories
உலக செய்திகள்

விபத்தில் உயிருக்கு போராடிய இளைஞர்… தக்க சமயத்தில் உதவிய ஆப்பிள் வாட்ச்… வெளியான சுவாரஸ்ய தகவல்..!!

சிங்கப்பூரில் சாலை விபத்தில் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்த இளைஞருக்கு அவருடைய ஆப்பிள் வாட்ச் தக்க சமயத்தில் உதவிய சம்பவம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சனிக்கிழமை அன்று சிங்கப்பூரை சேர்ந்த முகம்மது பிட்ரி (24) எனும் இளைஞர் வெறிச்சோடிய சாலை ஒன்றில் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக வேன் ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் மயக்கமானதாக கூறப்படுகிறது. மேலும் அந்த இளைஞர் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4-ஐ அவருடைய கையில் அணிந்துள்ளார். இந்த […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சரக்கு ஆட்டோ-மொபட் மோதல்… தந்தை மகளுக்கு ஏற்பட்ட விபரீதம்… வாலிபர் கைது…!!

சரக்கு ஆட்டோ- மொபட் மோதலில் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் சரக்கு ஆட்டோ டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டியை அடுத்துள்ள சுங்ககாரம்பட்டி அருகே உள்ள வெங்கமேடு பகுதியில் துரைசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவர் தான மகள் தங்கம்மாளை அழைத்துக்கொண்டு வேலகவுண்டம்பட்டிக்கு மொபட்டில் சென்றுள்ளனர். இந்நிலையில் வேலன்கவுண்டம்பட்டி அருகே சென்றுகொண்டிருந்த போது எதிரே வந்த சரக்கு ஆட்டோ எதிர்பாராத விதமாக மொபட் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் மொபட்டில் பின்னால் அமர்ந்திருந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வேகமாக வந்த மினி லாரி…. தூக்கி வீசப்பட்ட இருசக்கர வாகனம்…. பள்ளி மாணவி உயிரிழப்பு….!!!!

நெய்வேலி அடுத்த தெற்கு வெள்ளூர் கிராமத்தில் சாலையை கடக்க முயன்ற இரு சக்கர வாகனத்தின் மீது மினி லாரி மோதியதால் பள்ளி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். என்எல்சி சொசைட்டி தொழிலாளி வேல்முருகன் என்பவர் தனது மகளுடன் இருசக்கர வாகனத்தில் சென்று உள்ளார். அப்போது சாலையை கடக்க முயன்ற நிலையில் வேகமாக வந்த மினி லாரி அவர்களின் வாகனம் மீது மோதி கவிழ்ந்தது. அந்தக் கோர விபத்தில் பலத்த காயமடைந்த மாணவி, சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக […]

Categories

Tech |