Categories
தேசிய செய்திகள்

அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இளைஞர்…. கதிகலங்க வைக்கும் வீடியோ….!!!!

கர்நாடக மாநிலம் மங்களூருவில்  காலியாக இருக்கும் சாலை ஒன்றில் வரும் பேருந்து, ஒரு குறிபிட்ட இடத்தில் திரும்புவதற்காக நிற்கிறது. சாலையில் வாகனங்கள் வராத நிலையில் பேருந்தின் ஒட்டுநர் வாகனத்தை சாலையில் குறுக்காக கொண்டு வந்து திருப்புகிறார். அப்போது தொலைவில் இருந்து இரு சக்கர வாகனத்தில் மிக வேகமாக வரும் இளைஞர், பேருந்து சாலையின் குறுக்கே வருவதை கவனிக்கவில்லை.  நொடிப்பொழுதில் அவர் கவனிக்கும்போது அவருடைய இருசக்கர வாகனமும், பேருந்தும் அருகருகே சென்றுவிடுகின்றன. வேகத்தை இளைஞரால் கட்டுப்படுத்த முடியாததால் அதே […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING: விரைவு ரயில் கவிழ்ந்து கோர விபத்து…. சற்றுமுன் பரபரப்பு…!!!

மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி அடுத்த தோமோஹானி அருகே கவுகாத்தி – பிகேனிர் விரைவு ரயில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. விரைவு ரயிலில் சில பெட்டிகள் தடம் புரண்டதால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. ரயிலில் பயணித்த பயணிகளின் நிலை என்னவென்று தெரியவில்லை.சுமார் 6 பெட்டிகள் தடம்புரண்ட நிலையில் உயிரிழப்பு குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை. தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Categories
மாநில செய்திகள்

பொங்கலுக்கு ஊருக்கு சென்ற நபர்கள்….. வழியில் ஏற்பட்ட விபரீதம்…. பெரும் சோகம்….!!!

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த குமார் மற்றும் வெங்கடவரதன் என்ற இருவர்கள் சென்னையில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்காக தனது சொந்த ஊருக்கு காரில் வந்து கொண்டிருந்தனர். அப்போது சென்னை- திருச்சி நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம் பாடலூர் அருகில் இன்று காலை சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்ற டேங்கர் லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் முழுவதும் தீ பற்றி எரிந்து உள்ளது. இந்த விபத்தில் அவர்கள் 2 பேரும் உடல் கருகி […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே….! நொடிபொழுதில்… நொறுங்கிய விமானம்…. பயணிகளின் நிலைமை…? திடீரென ஏற்பட்ட கோர விபத்து…!!

பொலிவியாவில் தனியார் விமானம் ஒன்று எஞ்சின் கோளாறால் தரையிறங்கும் போது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. பொலிவியாவில் சி 402 வகையை சேர்ந்த சிறிய விமானம் ஒன்றில் திடீரென என்ஜின் கோளாறு ஏற்பட்டுள்ளது. ஆகையினால் பறந்து கொண்டிருந்த அந்த இலகுரக தனியார் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த விமானம் என்ஜின் கோளாறு காரணமாக கட்டுப்பாட்டை இழந்து சமவெளியில் விழுந்து நொறுங்கியுள்ளது. இருப்பினும் இந்த விமானத்தில் பயணம் செய்த 4 அதிகாரிகள் பயங்கர படுகாயங்களுடன் உயிருடன் தப்பியுள்ளார்கள்.

Categories
உலக செய்திகள்

கோர விபத்து: நொடி பொழுதில்…. உடல் நசுங்கிய பிஞ்சுக் குழந்தைகள்…. கண்கலங்க வைத்த சம்பவம்….!!

தென்னாப்பிரிக்காவிலுள்ள நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த 2 மினி பேருந்துகள் ஒன்றோடொன்று மோதிய கோர விபத்தில் சிக்கி குழந்தைகள் உட்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள். தென்னாபிரிக்காவிலுள்ள கெபெர்ஹா என்னும் நகரிலிருக்கும் நெடுஞ்சாலை ஒன்றில் பயணிகளை ஏற்றிக்கொண்டு மினி பஸ் ஒன்று சென்றுள்ளது. இந்நிலையில் இந்த மினி பேருந்து திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதனையடுத்து அந்த பேருந்து எதிரே வந்த மற்றொரு பஸ்சின் மீது அதி பயங்கரமாக மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் 2 பிஞ்சு குழந்தைகள் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சாலையை கடக்க முயற்சி…. விற்பனையாளருக்கு ஏற்பட்ட விபரீதம்…. கார் டிரைவர் கைது….!!

சாலையை கடக்க முயன்ற விற்பனையாளர் மீது கார் மோதி சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கூடலூர் லோயர்கேம்ப் அருகே உள்ள சுருளியாறு மின்நிலையம் சாலையில் செல்லத்துரை என்பவர் வசித்து வந்துள்ளார். தேனி அருகே உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வரும் இவருக்கு ராஜ செல்வி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று செல்லதுரை வழக்கம்போல டாஸ்மாக் கடைக்கு சென்று வேலையை முடித்துவிட்டு மீண்டும் பேருந்தில் […]

Categories
உலக செய்திகள்

கோர விபத்து: குஷியோ குஷியிலிருந்த பயணிகள்…. நொடி பொழுதில் நேர்ந்த சோகம்…. களமிறங்கிய மீட்புக்குழுவினர்கள்….!!

பிரேசிலிலுள்ள பிரபல ஏரியை ஒட்டியிருக்கும் மலையில் ஏற்பட்ட பிளவிலிருந்து பெரிய பாறை ஒன்று அங்கு சவாரி செய்த சுற்றுலா படகின் மீது விழுந்த விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள். பிரேசில் நாட்டில் உயரமான மலைகளுக்கிடையே மிகவும் பிரபலமான “பர்னாஸ் ஏரி” அமைந்துள்ளது. இந்த ஏரியில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து கொண்டிருக்கும்போது அதனை ஒட்டியிருக்கும் உயரமான மலையில் எதிர்பாராதவிதமாக பிளவு ஏற்பட்டுள்ளது. இந்தப் பிளவிலிருந்து உருண்ட மிகப்பெரிய பாறை ஒன்று ஏரியில் சுற்றுலா பயணிகள் […]

Categories
உலக செய்திகள்

“பனி மூட்டத்துல” ஒன்னுமே தெரியல…. திடீரென நடந்த சோகம்…. காவல்துறையினர் தீவிர விசாரணை….!!

எகிப்தில் பனி மூட்டத்தின் காரணமாக சாலையில் சென்று கொண்டிருந்த 2 பஸ்கள் ஒன்றோடொன்று மோதிய விபத்தில் சிக்கி 16 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள். வடகிழக்கு எகிப்தில் சினாய் என்னும் சர்வதேச நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த 2 பஸ்கள் பனிமூட்டம் காரணமாக ஒன்றோடொன்று மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் சிக்கி 16 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள். இது குறித்து கொடுக்கப்பட்ட தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 13 ஆம்புலன்ஸ்கள் விபத்தில் சிக்கிய […]

Categories
மாநில செய்திகள்

லாரி கவிழ்ந்து கோர விபத்து…. 1 மணி நேர போராட்டம்…. வாலிபரின் நிலைமை?…. பரபரப்பு சம்பவம்….!!!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் மதுபானம் ஏற்றி சென்ற சரக்கு லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் லாரியின் அடியில் வாலிபர் ஒருவர் சிக்கிக் கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரை சுமார் ஒரு மணி நேரம் போராடி மீட்டனர். இதனையடுத்து வாலிபர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும் இந்த விபத்தில் லாரியில் இருந்த மது பாட்டில்கள் சாலையில் சிதறியது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories
தேசிய செய்திகள்

ஓடும் ரயிலில் ஏற முயன்ற அதிகாரி…. பின்னர் ஏற்பட்ட விபரீதம்… பெரும் பரபரப்பு சம்பவம்….!

பீகார் மாநிலம் சாஹர்சா மாவட்டத்தில் அப்பாஸ் நாராயண் கான் என்பவர் வசித்துவருகிறார். இவர் கதிஹர் மாவட்டத்தில் சல்மாரி ரயில் நிலையத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அப்பாஸ் நாராயண் கான் நேற்று அதிகாலை கதிஹர் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற முயற்சி செய்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ரயில் நிலைய நடைமேடைக்கும் ரயில் பெட்டியில் ஏறுவதற்கும் இடையே அவரது கால் சிக்கிக்கொண்டது. இதனால் அவர் நிலைதடுமாறி ரயில் தண்டவாளத்தில் விழுந்தார். இதில் வேகமாக சென்ற எக்ஸ்பிரஸ் […]

Categories
தேசிய செய்திகள்

லாரி-கார் மோதி கோர விபத்து…. 4 பேர் பலி…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

பெங்களூருவில் நேற்று லாரி-கார் மோதி கொண்டு கோர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இரண்டு பெண்கள் உள்ளிட்ட 4 பேரும் உயிரிழந்துள்ளனர். லாரி ஓட்டுனர் வேகமாக வந்ததால் கவனக்குறைவின் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மேற்கு மண்டல காவல் துணை ஆணையர் குல்தீப் ஜெயின் கூறியது, பெங்களூரு பூர்வாங்கரா குடியிருப்பு அருகில் உள்ள நைஸ் சாலையில் வாகனங்கள் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 2 பெண்கள் மற்றும் 2 […]

Categories
மாநில செய்திகள்

“குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து”…. உண்மை காரணம் என்ன?…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

நீலகிரி மாவட்டம் குன்னூர் மலைப்பகுதியில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவருடைய மனைவி உள்ளிட்ட 14 பேர் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியது. இதில் பிபின் ராவத், அவருடைய மனைவி உட்பட 14 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதையடுத்து குன்னூரில் நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் 14 பேர் உயிரிழந்த நிலையில், மோசமான வானிலை காரணமாக விபத்து ஏற்பட்டதாக மன்வேந்திரா தலைமையிலான குழுவின் அறிக்கையில் தகவல் தெரிவித்தது. மேக கூட்டத்துக்குள் நுழைந்ததால் […]

Categories
தேசிய செய்திகள்

கோர விபத்து! பேருந்து- லாரி நேருக்கு நேர் மோதல்….. 16 பேர் பலி…. பதறவைக்கும் சம்பவம்!!!!

ஜார்கண்ட் மாநிலம் பாக்கூர் மாவட்டத்தில் நேற்று பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதியதால் பெரும் விபத்துக்குள்ளாகியது. இந்த சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்த விபத்தில் பேருந்து கடுமையாக சேதமடைந்துள்ளது. பேருந்தில் பயணம் செய்த 16 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 26 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதில் அதிர்ஷ்டவசமாக லாரியில் இருந்த சிலிண்டர்கள் எதுவும் வெடிக்கவில்லை. இதனால் […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே பைக்கில் சென்ற 3 பள்ளி மாணவர்கள்…. கொடூரம்…. பரபரப்பு சம்பவம்….!!!!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பைக்கில் அதிவேகமாக சென்ற 11-ஆம் வகுப்பு மாணவர்கள் 3 பேர் பலி. 16 வயதே ஆன பென்ஸ், ஸ்டெபின், முல்லப்பன் என்ற  மாணவர்கள் தலைக்கவசம் கூட அணியாமல் மிக வேகமாக பைக்கை ஓட்டி சென்றதால் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மரத்தில் வேகமாக மோதி விபத்துக்குள்ளாகியது. அந்த விபத்தில் பரிதாபமாக 3 மாணவர்களும் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையம் சோகத்தையும் ஏற்படுத்தியது. இதையடுத்து மாணவர்களின் உடல்களை […]

Categories
உலக செய்திகள்

புறப்பட்ட சில நிமிடங்களில்…. கீழே விழுந்து நொறுங்கிய விமானம்….. 2 விமானிகள் பலி….!!

இஸ்ரேலில் பயிற்சிக்காக சென்ற விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் நாட்டின் வடக்குப் பகுதியில் இருக்கும் ஹபா என்ற துறைமுக நகரத்திலிருந்து, நாட்டின் கடற்படைக்குரிய ஒரு ஹெலிகாப்டர் வழக்கமாக நடைபெறும் பயிற்சியை மேற்கொண்டது. அப்போது, ஹெலிகாப்டரில் இரண்டு விமானிகள், வான் கண்காணிப்பாளர் ஒருவர் பயணித்தனர். இந்நிலையில், விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கியது. இது தொடர்பில் தகவல் அறிந்த கடற்படை வீரர்கள், உடனடியாக சம்பவ இடத்திற்கு […]

Categories
தேசிய செய்திகள்

குன்னூர் விமான விபத்துக்கு காரணம் இதோ…. முப்படைகளின் விசாரணை அறிக்கை தாக்கல்….!!

குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து குறித்து முப்படைகளின் முழு விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குன்னூர் அருகே கடந்த டிசம்பர் 8-ஆம் தேதி விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகியது. இதில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ரனாவத் உட்பட 13 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து விமானப்படை அதிகாரி மானவேந்தரசிங் தலைமையிலான தனிப்படை தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் […]

Categories
உலக செய்திகள்

பரபரப்பு…! திடீரென கவிழ்ந்த பேருந்து…. பயணிகளுக்கு நேர்ந்த சோகம்…!!

நேபாளத்தில் திடீரென ஏற்பட்ட பேருந்து விபத்தில் சிக்கி 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள். நேபாளத்தில் பல்பா என்னும் மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் திடீரென பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த கோர விபத்தில் சிக்கி 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள். மேலும் 15 பேர் இந்த விபத்தினால் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Categories
மாநில செய்திகள்

தமிழக எல்லையில் கோர விபத்து…. புது மாப்பிள்ளை உயிரிழந்த சோகம்…. பரபரப்பு சம்பவம்….!!!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகில் தமிழக கர்நாடக எல்லையில் காரும், சரக்கு லாரியும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் காரை ஓட்டிச் சென்ற திருமணமாகி 3 மாதமே ஆன நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதாவது 3 நண்பர்களுடன் காரில் தேனியை சேர்ந்த ஜான் என்ற வழக்கறிஞர் மைசூர் நோக்கி சென்று கொண்டு இருந்தார். அப்போது சிக்கோலா அணை அருகே எதிரே வந்த சரக்கு லாரி மீது அதிவேகமாக சென்ற கார் மோதி விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

ஆட்டோ , இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி கோர விபத்து …. பரபரப்பு சம்பவம்….!!!!

கர்நாடகா மாநிலம் மங்களூர் சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோவும் இருசக்கர வாகனமும் எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது. மங்களூர் அருகே கிணிக்கோலியில் வாலிபர் ஒருவர் தனது வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பிவிட்டு சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக இரு சக்கர வாகன ஓட்டிகள் சாலையை கடக்க முயன்ற போது, அந்த வழியே வந்த ஆட்டோ வேகமாக அவர் மீது மோதியது. இரு வாகனங்களும் மோதிக்கொண்டதில் தூக்கி வீசப்பட்ட இருசக்கர வாகன ஓட்டி, பலத்த காயமடைந்தார். மேலும் விபத்தில் ஆட்டோவும் […]

Categories
உலக செய்திகள்

தடையை மீறிய பொதுமக்கள்…. சோகத்தில் முடிந்த புத்தாண்டு கொண்டாட்டம்…. ஜெர்மனியில் நேர்ந்த பரிதாபம்…!!

ஜெர்மன் நாட்டில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பட்டாசு வெடித்ததில் ஒரு இளைஞர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஜெர்மன் நாட்டில் கொரோனோ காரணமாக புத்தாண்டு கொண்டாட்டங்களில் பட்டாசு வெடிக்க கூடாது என்று தடை அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே பட்டாசு விற்பனையும் தடை செய்யப்பட்டது. ஆனால் சில மக்கள் சட்டவிரோதமாக பட்டாசுகளை கடைகளில் வாங்கி வெடித்திருக்கிறார்கள். இதில் நாடு முழுக்க பல விபத்துகள் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில், அந்நாட்டின் Bonn என்னும் நகருக்கு அருகில் இருக்கும் Hennef என்ற இடத்தில் நேற்று […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அடுத்தடுத்து நடந்த விபத்து…. வாகனங்களை அப்புறப்படுத்தும் பணி…. ஸ்தம்பித்த போக்குவரத்து…!!

அடுத்தடுத்த வாகனங்கள் விபத்தில் சிக்கியதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூரில் இருந்து கீழ் நாடுகாணி வரை இருக்கும் சாலை குண்டும், குழியுமாக காணப்படுவதால் அவ்வழியாக செல்லும் சரக்கு வாகனங்கள் விபத்தில் சிக்கி வருகிறது. இந்நிலையில் நாடுகாணி பகுதியில் வைத்து சரக்கு லாரி ஒன்று சாலையில் கவிழ்ந்துவிட்டது. மேலும் நாடுகாணி தாவரவியல் பூங்கா அருகில் இருக்கும் சாலையோர பள்ளத்தில் மற்றொரு லாரியும் கவிழ்ந்ததால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து கர்நாடகாவில் இருந்து காய்கறி மூட்டைகளை […]

Categories
மாநில செய்திகள்

வேன் கவிழ்ந்து கோர விபத்து…. உள்ளே இருந்தவர்களின் நிலைமை?…. அதிசய சம்பவம்….!!!!

தேனி மாவட்டத்திலுள்ள போடியிலிருந்து மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு பக்தர்கள் வேனில் சென்றனர். இதனையடுத்து பக்தர்கள் அங்கு சுவாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு தேனி பொம்மையகவுண்டன்பட்டி சாலைப் பிள்ளையார் கோவில் அருகில் வந்தபோது எதிர்பாராதவிதமாக சாலையின் மையத் தடுப்பு சுவரில் மோதி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் வேனில் பயணம் மேற்கொண்ட பக்தர்கள் அதற்குள் சிக்கிக் கொண்டு வெளியே வர முடியாமல் சத்தம் போட்டனர். அதன்பின் அப்பகுதியில் இருந்தவர்கள் ஓடி வந்து அவர்களை […]

Categories
மாநில செய்திகள்

ஈரோடு மாவட்டத்தில் கோரவிபத்து…..!! பிறந்த நாளே இறந்த நாளாக மாறிய சோகம்….!!

தங்கையின் பிறந்த நாளை கொண்டாடி விட்டு சித்தி மகனுடன் பைக்கில் வந்த அக்காள் தங்கை லாரி மோதி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள செங்கலப்பரை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் அதே பகுதியில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று இவருடைய இளைய மகளின் பிறந்தநாளை முன்னிட்டு லட்சுமி நகர் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் உணவு சாப்பிட்டுவிட்டு இவர்களுடைய சித்தி மகனுடன் பைக்கில் பின்னால் அமர்ந்து […]

Categories
உலக செய்திகள்

சிலி நாட்டில் பயங்கரம்….. மினிபேருந்தில் மோதிய லாரி….. 9 பேர் பலி…!!

சிலி நாட்டில் லாரி மற்றும் மினி பேருந்து மோதி பயங்கர விபத்து ஏற்பட்டு 9 நபர்கள் பலியாகியுள்ளனர். சிலி நாட்டில் இருக்கும் ஓஹிகின்ஸ் என்னும் மாகாணத்தில் நேற்று பேருந்து ஒன்றில் வேளாண்  ஊழியர்கள் மேற்கு பகுதியை நோக்கி பயணித்திருக்கிறார்கள். அந்த சமயத்தில் எதிரில் அதிவேகத்தில் வந்த ஒரு லாரி அந்த மினி பேருந்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில் அந்த பேருந்தில் இருந்த ஓட்டுனர் உட்பட 9 நபர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர். மேலும், இரண்டு நபர்கள் பலத்த […]

Categories
உலக செய்திகள்

“ஐயய்யோ!”…. திடீரென்று இடிந்து விழுந்த தங்கச்சுரங்கம்….. 38 பேர் பலியான சோகம்…..!!

சூடான் நாட்டில் தங்கச் சுரங்கம் ஒன்று இடிந்து விழுந்து 38 நபர்கள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சூடானின் தலைநகரான கார்டோம் நகருக்கு தெற்கு பகுதியில் சுமார் 700 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் ஃபுஜா என்னும் கிராமத்தில் அரசாங்கத்திற்குரிய தர்சயா தங்க சுரங்கம் இருக்கிறது. அச்சுரங்கம் தற்போது செயல்பாட்டில் இல்லை. இந்நிலையில், அங்கு பாதுகாப்பு பணியை மேற்கொண்டிருந்தவர்கள் சென்றபின் உள்ளூரில் இருக்கும் சுரங்க தொழிலாளர்கள் அங்கு சென்றிருக்கிறார்கள். அப்போது திடீரென்று சுரங்கம் இடிந்து விழுந்து […]

Categories
மாநில செய்திகள்

“நெஞ்சை பதற வைக்கும் கொடூர விபத்து”….!! 5 கிலோ மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்ட இளைஞர் உடல்….!!

திண்டுக்கல் அருகே பைக் லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் பைக்கில் சென்ற வாலிபர் 5 கிலோ மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மோர் பாடி பகுதியைச் சேர்ந்த குணசேகரன் என்ற இளைஞர் வேலைக்கு செல்வதற்காக நேற்று இரவு திண்டுக்கல் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்தார். அப்போது வேல்வார்கோட்டை பிரிவு அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக கண்டெய்னர் லாரி ஒன்றின் மீது மோதி உள்ளார். இந்நிலையில் லாரி நிற்காமல் […]

Categories
தேசிய செய்திகள்

வேகமாக சென்ற பேருந்து…. கோர விபத்தில் உயிரிழந்த 5 பேர்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

அரியானா மாநிலம் அம்பாலா-சண்டிகர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை டெல்லி நோக்கி தனியார் சொகுசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது மற்ற வாகனங்களை முந்தி செல்ல முயன்றபோது எதிர்பாராதவிதமாக சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த பேருந்து மீது மோதியது. இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 12 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் இரண்டு பேருந்தையும் கிரேன் மூலம் நெடுஞ்சாலையிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. இந்த […]

Categories
தேசிய செய்திகள்

வேகமாக மோதிக்கொண்ட பேருந்துகள்…. 5 பேர் பலி…. 8 பேர் படுகாயம்…. பரபரப்பு….!!!!

ஹரியானா மாநில ஹீலிங் டச் மருத்துவமனை அருகில் நிகழ்ந்த கோர விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி நோக்கி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது பின்னால் வந்த பேருந்து வேகமாக மோதியதில் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. அந்த கோர விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 8 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: சென்னையில் குடியிருப்பு இடிந்து விழுந்து விபத்து…. பரபரப்பு சம்பவம்….!!!?

சென்னை திருவொற்றியூர் கிராம தெருவில் அரிவாக்குளம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. அவரவர் வீடுகளில் இருந்து பொதுமக்கள் வெளியேறிய சற்று நேரத்தில் இடிந்து விழுந்ததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும் இரவு நேரத்தில் குடியிருப்பில் திடீரென விரிசல் ஏற்பட்டதாக அங்கு வசித்தவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Categories
தேசிய செய்திகள்

வெடித்து சிதறிய கொதிகலன்…. நொடியில் பறிபோன 6 உயிர்…. பெரும் சோகம்….!!!!

பீகார் மாநிலமான முசாபர்பூர் நகரில் தனியாருக்கு சொந்தமான நூடுல்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 100-க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த தொழிற்சாலையில் உள்ள கொதிகலன் ஒன்றில் திடீரென்று வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தின் காரணமாக 6 பேர் பரிதாபமாக இறந்துள்ளனர். மேலும் 6-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இதனையடுத்து காயம் அடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையில் சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் […]

Categories
உலக செய்திகள்

கோர விபத்து…. திடீரென கவிழ்ந்த படகு…. குழந்தைகள் உட்பட நடுக்கடலில் தத்தளித்த சோகம்…. தீவிரமாக நடைபெறும் பணி….!!

கிரீஸில் நடுக்கடலில் கவிழ்ந்த படகில் சென்ற அகதிகளில் 11 பேர் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்கள். கிரீஸில் அதிகளவு அகதிகளை ஏற்றிக்கொண்டு படகு ஒன்று சென்றுள்ளது. இந்நிலையில் இந்த படகு திடீரென நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் சிக்கி அதிலிருந்த அகதிகளை 11 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள். இருப்பினும் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த குழந்தைகள் உட்பட 90 அகதிகளை கடலோர அதிகாரிகள் உயிருடன் மீட்டுள்ளார்கள். மேலும் மீட்புக்குழுவினர்கள் கவிழ்ந்த படகிற்கடியில் எவரேனும் சிக்கி இருக்கிறார்களா என்று […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: சற்றுமுன் விமானம் விபத்து…. பெரும் பரபரப்பு….!!!

ராஜஸ்தானில் இந்திய விமானப் படையின் மிக்-21 போர் விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஜெய்சால்மரில் உள்ள இந்தியா பாகிஸ்தான் எல்லை அருகே உள்ள சுதாசிரி கிராமத்தில் இந்திய விமானப்படை விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. இதையடுத்து விபத்தில் மாயமான விமானத்தை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

Categories
உலக செய்திகள்

“கப்பல் கவிழ்ந்து விபத்து”….. 64 பேரின் நிலைமை?…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

கப்பல் கவிழ்ந்த விபத்தில் 64 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. மடகாஸ்கரின் வடகிழக்கு கடற்கரை அருகில் 130 பயணிகளுடன் ஒரு கப்பல் சென்று கொண்டிருந்தது. இதனையடுத்து கப்பல் புறப்பட்ட சிறிது நேரத்தில் திடீரென்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் கப்பலில் பயணம் மேற்கொண்ட 17 பேர் உயிரிழந்தனர். மேலும் 60 பேர் காணாமல் போய்விட்டார்கள் என்ற தகவல் வெளிவந்தது. இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி விபத்தில் 64 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

லாரி-இருசக்கர வாகனம் மோதல்…. மாணவருக்கு ஏற்பட்ட விபரீதம்…. டிரைவர் கைது….!!

இருசக்கர வாகனம் லாரி மீது மோதி மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் மேலவாணி பகுதியில் நவநீத கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகின்றார். இவரது மகன் தர்ஷன் தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தர்ஷன் சம்பவத்தன்று இருசக்கர வாகனத்தில் ராமநாதபுரத்திற்கு சென்று கொண்டு இருந்துள்ளார். அப்போது இருசக்கர வாகனம் திடீரென தடுமாறி முன்னால் சென்று கொண்டிருந்த லாரியின் மீது மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் தர்ஷன் சம்பவ […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

திடீரென பிரேக் போட்ட டிரைவர்…. நொடியில் பறிபோன உயிர்…. பெரும் சோக சம்பவம்….!!!!

டிராக்டர் மீது ஸ்கூட்டர் மோதிய விபத்தில் சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கதிர்நாயக்கனஅள்ளி கிராமத்தில் அருள்மொழி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 5 வயதில் கவிஸ்ரீ என்ற மகன் இருந்தார். இதில் அருள்மொழியின் சகோதரர் சிவகுமார் ஸ்கூட்டரில் சிறுமியை தர்மபுரிக்கு அழைத்து வந்தார். இதனையடுத்து வீட்டிற்கு அவர்கள் மீண்டும் சென்று கொண்டிருந்தனர். அப்போது தர்மபுரி-கிருஷ்ணகிரி சாலையில் நல்லாம்பட்டி பிரிவு ரோடு அருகே சென்றபோது முன்னால் சென்று கொண்டிருந்த டிராக்டர் டிரைவர் திடீரென்று […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

காரை உரசி சென்ற பேருந்து…. துரத்தி சென்ற மருத்துவர்…. நொடியில் நடந்த விபரீதம்…..!!!!

அரசு மருத்துவர் ஒருவர் தன்னுடைய காரில் நெல்லையில் இருந்து மதுரைக்கு வந்துள்ளார். அப்போது கப்பலூர் மதுரை சுற்று சாலையில் பரம்புப்பட்டி அருகே வந்த போது, அரசு பேருந்து ஒன்று மருத்துவரின் காரில் உரசி விட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மருத்துவர் பேருந்தை துரத்திச் சென்றுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் எதிர்ப்புறம் சென்ற அரசு பேருந்து மீது மோதியது. இதில் பேருந்துக்கு அடியில் கார் சென்ற நிலையில், கார்த்திகேயன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

நிலை தடுமாறிய மினி லாரி…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த கூலித்தொழிலாளி மீது மினி லாரி மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை அடுத்துள்ள கோவிந்தன்பட்டியில் உள்ள சர்ச் தெருவில் சூசை ஆரோக்கியம் என்ற சுருளி என்பவர் வசித்து வந்துள்ளார். கூலி தொழிலாளியான இவர் வழக்கம் போல வேலைக்கு செல்வதற்காக உத்தமபாளையம்-கோவிந்தன்பட்டி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது தேனியை நோக்கி சென்று கொண்டிருந்த மினி லாரி ஒன்று திடீரென நிலைதடுமாறி சூசை ஆரோக்கியம் மீது மோதியுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

மது போதையில் டிரக் ஓட்டுநர்…. 2 குழந்தைகள் மற்றும் தாய் பலி…. பெரும் பரபரப்பு சம்பவம்!!!!

கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் மது அருந்திவிட்டு டிரக் ஓட்டிய ஓட்டுனர், பைக் மீது மோதியதில் இரட்டை குழந்தைகள் மற்றும் அவர்களது தாய் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. நேற்று கர்நாடகாவில் ஹாசன் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் தன்னுடைய மனைவி மற்றும் இரட்டை குழந்தைகளுடன் சிவானந்தன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக எதிரில் வந்த ட்ரக் ஒன்று அவர்கள் மீது மோதியது. ட்ரக் மோதியதில் 4 பேரும் பைக்கிலிருந்து தூக்கி வீசப்பட்டனர். […]

Categories
உலக செய்திகள்

இது எப்படி நடந்துச்சு?…. “காதை பிளந்த அந்த சத்தம்”…. கேன்டீனில் நடந்த பயங்கர சம்பவம்….!!!!

உஸ்பெகிஸ்தானிலுள்ள கேண்டீன் ஒன்றில் திடீரென எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறிய விபத்தில் 10 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டின் அவசரகால அமைச்சகம் தெரிவித்துள்ளது. உஸ்பெகிஸ்தானில் அக்தர்யா என்னும் மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் செயல்பட்டு வந்த கேன்டீன் ஒன்றிலிருந்த 2 எரிவாயு சிலிண்டர்கள் திடீரென வெடித்து சிதறியுள்ளது. இந்த கோர விபத்தில் சிக்கி 10 பேர் படுகாயமடைந்துள்ளார்கள். அவ்வாறு படுகாயமடைந்த நபர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்கள். இந்த தகவலை அந்நாட்டின் அவசரகால அமைச்சகம் தெரிவித்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

“கடலில் விழுந்து நொறுங்கிய சுற்றுலா விமானம்!”…. குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழப்பு….!!

ஆஸ்திரேலியாவில் சிறிய வகை சுற்றுலா விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில் குழந்தைகள் உட்பட 4 நபர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர். ஆஸ்திரேலியாவில் இருக்கும் ரெட் கிளிஃப் நகரத்திற்கு அருகில்  சிறிய விமானத்தை, 69 வயதுடைய விமானி இயக்கியிருக்கிறார். அந்த விமானத்தில், சதுப்புநில காடுகளுக்கு குழந்தைகள் 2 பேர் உட்பட மூன்று நபர்கள் சுற்றுலா சென்றுள்ளனர். இந்நிலையில் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானியின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென்று விமானம் கடலில் விழுந்து நொறுங்கிவிட்டது. இந்த பயங்கர விபத்தில், விமானி […]

Categories
தேசிய செய்திகள்

லாரி மீது மோதிய கார்…. நொடியில் பறிபோன உயிர்கள்…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!!!

லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானாவின் ஐதராபாத்தை சேர்ந்த சில பேர் ஒரு காரில் கமாரெட்டி மாவட்டத்தை நோக்கி சென்று கொண்டிருந்தனர். இதனையடுத்து கார் ஜெகநாத்பள்ளி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது கார் அந்தவழியாக சென்று கொண்டிருந்த ஒரு லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதனால் கார் நொறுங்கியதுடன், அதில் இருந்தவர்கள் அனைவரும் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். இந்த விபத்தில் 2 குழந்தைகள், 2 […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“சுற்றுச்சுவரில் மோதிய பேருந்து”… பயணம் செய்த 50-க்கும் மேற்பட்டோர் நிலைமை?…. அதிசயமா இருக்கு….!!!

சுற்றுச்சுவரில் தனியார் பேருந்து மோதிய விபத்தில் 50 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து சிதம்பரம் நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை கடலூர் மாவட்டம் சிதம்பரம் சாத்தங்குடி கிராமத்தை சேர்ந்த ரகுராமன் என்பவர் ஓட்டி வந்தார். இந்நிலையில் சுவாமிமலை அருகேயுள்ள சுந்தரப்பெருமாள் கோவில் ரயில்வே கேட் எதிர்ப்புறம் உள்ள சமுதாய கூடத்தின் சுற்றுச்சுவரில் திடீரென அந்த பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. அப்போது பேருந்தில் பயணம் செய்த 50-க்கும் மேற்பட்ட […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…! திருமண நிகழ்ச்சிக்காக காத்திருந்த உறவுகள்…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. 8 பேர் பலியான சோகம்….!!!!

நேற்று பாகிஸ்தானில் பேருந்து ஒன்று திருமண கோஷ்டி கூட்டத்திற்குள் புகுந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று பாகிஸ்தானில் உள்ள மண்டி பஹாவுதீன் என்ற நகரில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்று கொண்டிருந்தது. அந்த நிகழ்ச்சியை முன்னிட்டு திருமண மண்டபத்துக்கு செல்ல மணமக்களின் உறவுக்காரர்கள் வாடகை வேன் ஒன்றை அமர்த்தியிருந்தனர். மேலும் வேனில் ஏறுவதற்காக வெவ்வேறு பகுதியில் இருந்து வந்த உறவுக்காரர்கள் நகரின் முக்கிய சாலையில் காத்துக்கொண்டிருந்தனர். ஆனால் வாகனங்கள் […]

Categories
உலக செய்திகள்

“மலேசியாவில் பயங்கரம்!”…. நெடுஞ்சாலையில் கோர விபத்து…. குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழப்பு….!!

மலேசியாவில் நேற்று இரவு நெடுஞ்சாலையில் சாலை விபத்து ஏற்பட்டு குழந்தைகள் உட்பட 10 நபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மலேசியாவில் இருக்கும் செலாங்கோர் மாகாணத்தில் நேற்று இரவு சுமார் 11:40 மணியளவில் நெடுஞ்சாலையில், மூன்று வாகனங்கள் மற்றும் லாரி, ஒன்றின் மீது ஒன்று மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் லாரிக்கு அடியில் வாகனங்கள் சிக்கிக்கொண்டது. இக்கோர விபத்தில் குழந்தைகள் 8 பேர் உட்பட 10 நபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஏழு பேருக்கு காயம் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்றுகொண்டிருந்த தொழிலாளி…. வழியில் ஏற்பட்ட விபரீதம்…. வாலிபர் மீது வழக்குபதிவு….!!

சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த கூலித்தொழிலாளி மீது இருசக்கர வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கொடுவிலார்பட்டி பகுதியில் உள்ள மேற்கு தெருவில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவர் வழக்கம்போல வேலையை முடித்துவிட்டு வயல்பட்டியில் இருந்து கொடுவிலார்பட்டிக்கு நடந்து சென்று கொண்டிருந்துள்ளர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள திருமண மண்டபம் அருகே சென்ற போது எதிரே வந்துகொண்டிருந்த இருசக்கர வாகனம் திடீரென நிலை தடுமாறி முருகன் மீது மோதியுள்ளது. இதில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST IN: பள்ளி கட்டிடம் இடிந்து விபத்து…. 3 பேர் மருத்துவமனையில் அனுமதி…!!!!

நெல்லையில் அரசு உதவி பெரும் தனியார் பள்ளியின் கழிவறை கட்டடம் இடிந்து விழுந்ததில் 2 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் தனியார் பள்ளி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது எட்டாம் வகுப்பு மாணவர்கள் சஞ்சய், விஸ்வரங்சன் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அங்குள்ள பள்ளி மாணவர்கள் இதனை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களோடு போலீஸார் பேச்சுவார்த்தையில்  ஈடுபட்டு […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய லாரி…. அதிஷ்டவசமாக உயிர் தப்பிய டிரைவர்…. ஸ்தம்பித்த போக்குவரத்து….!!!!

கன்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குஜராத்திலிருந்து பிஸ்கட் ஏற்றிக்கொண்டு ஒரு கன்டெய்னர் லாரி திருச்சிக்கு சென்றது. இந்த லாரியை பீகாரை சேர்ந்த குலாம் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இதனையடுத்து லாரி தர்மபுரி மாவட்டம் வழியாக வந்து கொண்டிருந்தது. அப்போது தொப்பூர் கணவாய் முதல் வளைவில் வந்தபோது டிரைவர் தன் கட்டுப்பாட்டை இழந்ததால் லாரி தாறுமாறாக ஓடி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிரைவர் குலாம் சிறு காயங்களுடன் […]

Categories
உலக செய்திகள்

‘அடக்கடவுளே! இப்படியா ஆகணும்’…. வெடித்து சிதறிய டேங்கர் லாரி…. பிரபல நாட்டில் சோக சம்பவம்….!!

டேங்கர் லாரி வெடித்து சிதறியதில் 60க்கும் மேலானோர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹைதியில் பெட்ரோல், டீசல்,சமையல் எரிவாயு  போன்றவைகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த நிலையில் ஹைதி நாட்டின் வடக்கில் உள்ள கேப்-ஹைடியனில் பெட்ரோல் ஏற்றி வந்த டேங்கர் லாரி ஓன்று விபத்தில் சிக்கியுள்ளது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் அதிலிருந்து வெளியேறிய பெட்ரோலை பாத்திரங்களில் பிடிக்கச் சென்றுள்ளனர். அப்போது திடீரென்று ஏற்பட்ட தீயினால் லாரி வெடித்து சிதறியுள்ளது. அதில் 60 பேர் […]

Categories
தேசிய செய்திகள்

JUSTIN : அமைச்சர் தன் சிங் ராவத் பயணித்த கார் விபத்து…. பெரும் பரபரப்பு….!!!

உத்தரகாண்ட் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தன் சிங் ராவத் தலிசைனில் இருந்து டேராடூனுக்கு சென்று கொண்டிருந்தபோது கார் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  தன் சிங் ராவத் லேசான காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில் அவர் அருகில் உள்ள பாபோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Categories
உலக செய்திகள்

‘பூமிக்கடியில் ஏற்பட்ட கசிவு’…. இடிந்து விழுந்த கட்டிடங்கள்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியானது தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இத்தாலியில் உள்ள ரவனுசா நகரில் பூமிக்கு அடியில் செல்லும் எரிவாயு குழாய்களில் கசிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சக்தி வாய்ந்த வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் அங்கிருந்த நான்கு கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன. இந்த விபத்தினால் கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியானது 30 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகின்றது. இதுவரை 9 மாத கர்ப்பிணி செவிலியர் உட்பட 7 பேரின் உடல்கள் […]

Categories

Tech |