மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தக்கலை பகுதியில் இருக்கும் கேரளபுரத்தில் ரமேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ரமேஷ் எல்லை பாதுகாப்பு படை வீரரான ராஜசேகர் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் மணவாளக்குறிச்சி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிளிலிருந்து இருவரும் கீழே விழுந்தனர். இந்த விபத்தில் ரமேஷ் மற்றும் ராஜசேகர் ஆகிய இருவருக்கும் பலத்தகாயம் ஏற்பட்டுள்ளது. […]
