பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியத்தில் 7 பேர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்திலிருந்து திருமண விழாவிற்காக ஒரு கோஷ்டியினர் பேருந்தில் கேரள மாநிலத்திற்கு சென்றுள்ளனர். இந்நிலையில் இன்று மதியம் சுமார் 12.30 மணியளவில் காசர்கோடு மாவட்டம் ராசிபுரம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது பேருந்து கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியுள்ளது. மேலும் சாலையை விட்டு விலகி பள்ளத்தில் பாய்ந்த பேருந்து ஒரு வீட்டின் மீது மோதி கவிழ்ந்தது. இந்த பேருந்து விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். […]
