சாலையில் கவிழ்ந்த கார் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 7 பேர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஏழாயிரம்பண்ணை பகுதியில் பரமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் மதுரையில் இருக்கும் குலதெய்வ கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக காரில் சென்றுள்ளார். அங்கு சாமி கும்பிட்டுவிட்டு மீண்டும் சொந்த ஊர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் மதுரை மாவட்டத்திலுள்ள வெள்ளாகுளம் விலக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென காரின் […]
