சரக்கு வேன் சாலையில் கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை நான்காக உயர்ந்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தீர்த்தம் பகுதியில் 16 பெண்கள் உட்பட 19 பேர் சரக்கு வேனில் கடந்த 22-ஆம் தேதி கூலி வேலைக்கு சென்று கொண்டிருந்தனர். இந்த வேலை முருகன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் ராமன்தொட்டி என்ற பகுதியில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வேன் தாறுமாறாக ஓடி சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வீரபத்திரன்(40), சின்னக்கா(60) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]
