கார் மோதிய விபத்தில் பேருந்துக்காக காத்து கொண்டிருந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள சாயிநாதபுரம் பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் உதவி இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வெங்கடேசன் தனது மனைவியுடன் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணத்தில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு காரில் சென்றுள்ளார். இவர் சாலை கிராமம் எஸ்.ஆர் கண்டிகை பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது கட்டுப்பாட்டை […]
