திருச்சியில் இருந்து அரசு பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு புதுக்கோட்டை நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்தை பாலமுருகன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் எதிரே இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை இறக்குவதற்காக பாலமுருகன் மெதுவாக சென்றுள்ளார். அப்போது புதுக்கோட்டையில் இருந்து திருச்சி நோக்கி வந்த கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அரசு பேருந்து மீது பயங்கரமாக மோதி சுக்குநூறாக நொறுங்கியது. இந்த விபத்தில் கார் ஓட்டுநர் அறிவொளி, அசார், யாஸ்மின் ஆகிய 3 பேரும் […]
