கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பயங்குளம் பகுதியில் ரவீந்திரன்-ராஜகுமாரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அஜிதா(29) என்ற மகளும், அஜின்(27) என்ற மகனும் இருந்துள்ளனர். இதில் அஜிதா நாகர்கோவில் ஆயுதப்படையில் போலீசாக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் அஜின் தனது அக்காவை அழைத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தேங்காப்பட்டினத்தில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி மருந்து வாங்குவதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் முன்சிறை பகுதியில் சென்ற போது தனது தாய் ராஜகுமாரி கோவிலுக்கு சென்று கொண்டிருந்ததை அஜின் பார்த்தார். இதனால் […]
