கார் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் மூதாட்டி பலியான நிலையில், 6 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கோவில்பாளையம் பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தாய் பொன்னம்மாள் உள்பட குடும்பத்தினர் 7 பேருடன் குலதெய்வம் கோவிலுக்கு காரில் சென்றுள்ளார். இந்த காரை ஐயப்பன் என்பவர் ஓட்டி உள்ளார். இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில் சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையோரம் […]
