மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் முதியவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சின்னக்காமன்பட்டியில் பஞ்சவர்ணம்(65) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பன்குளத்தில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த முதியவரை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். […]
