வேனும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் பகுதியில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முருகராஜ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு அனுசுயாதேவி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு திருமணம் நடந்து இரண்டு மாதமே ஆனது. இந்நிலையில் முருகராஜ் மோட்டார் சைக்கிளில் மணலூரிலிருந்து சங்கரன்கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து புளியம்பட்டியிலிருந்து வேனில் சில […]
