மோட்டார் சைக்கிளில் சென்ற போது ஏற்பட்ட விபத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாலைப்புதூர் கிராமத்தில் சங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு கனகலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகள்களும், 1 மகனும் உள்ளனர். இந்நிலையில் சங்கர் தனது சொந்த ஊரான சாலைப்புதூர் கிராமத்திற்கு வந்துள்ளார். இதனையடுத்து சாலைப்புதூர் […]
