திருச்சி மாவட்டத்தில் உள்ள மண்ணச்சநல்லூர் அயனாபுரம் காலனியில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி(52) என்ற மனைவி உள்ளார். இவர் திருவெள்ளறை அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் விஜயலட்சுமி இருசக்கர வாகனத்தில் மண்ணச்சநல்லூரில் இருந்து திருவெள்ளறை நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் திருச்சி- துறையூர் செல்லும் சாலையில் பூனாம்பாளையம் அருகே சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் விஜயலட்சுமி மீது மோதியது. இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்து […]
