விபத்தில் காயமடைந்த இளைஞருக்கு திருஷ்டி கழிக்க ஆட்டுக்குட்டியுடன் உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் அருகே இருக்கும் கொத்தப்பள்ளி கிராமத்தை சேர்ந்த முருகன் என்பவர் சென்ற 25ஆம் தேதி தனது சகோதரியுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பொழுது எதிர்பாரா விதமாக பேரண்டப்பள்ளி பகுதியில் இரண்டு பேரும் தவறி விழுந்து பலத்த காயமடைந்தார்கள். முருகன் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் முருகனின் உறவினர்கள் கண் திருஷ்டி காரணமாகவே விபத்தில் முருகன் சிக்கியதாக […]
