கார் நிலைத்தடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் கணவன்-மனைவி காயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் ராயல் நகரில் பெட்ரிக்சாது என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆர்த்திசோபியா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் பெட்ரிக்சாது மனைவி மற்றும் மகள் ஆகியோருடன் நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது தூத்துக்குடி மாவட்டம் ராஜாபுதுக்குடி நாற்கரசாலையில் வந்து கொண்டிருந்த போது கார் திடீரென நிலைதடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் கணவன், மனைவி இருவரும் பலத்த […]
