விபத்தில் இறந்தவரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள மூர்த்தியான் கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் தனது மகனுடன் ஆடுகளை மேய்த்துக்கொண்டு திருச்சி-சிதம்பரம் இடையேயான தேசிய நெடுஞ்சாலையை கடந்து சென்றார். அப்பொழுது அவ்வழியாக வந்த கார் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதில் உடன் வந்த மகன் பாலமுருகனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது. இதைத்தொடர்ந்து போலீசார் செந்தில்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி […]
