திங்கள்கிழமை நடைபெற இருக்கும் மகாராணியின் அரசு இறுதிச் சடங்கிற்கான ஒத்திகைகள் வின்ட்சர் கோட்டையின் மைதானத்தில் தொடங்கியது. பிரித்தானியாவை 70 ஆண்டுகள் வரை ஆட்சி புரிந்த மகாராணி இரண்டாம் எலிசபெத் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் அரண்மனையில் தனது 96-வது வயதில் உயிரிழந்துள்ளார். மகாராணியின் இறப்பைத் தொடர்ந்து நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், செப்டம்பர் 19ஆம் தேதி திங்கள்கிழமை மகாராணியின் இறுதிச் சடங்கு லண்டனிலுள்ள வெஸ்மின்ஸ்டர் அபேயில் நடைபெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து மகாராணியாரின் பூத உடல் இளவரசர் […]
