திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகில் உள்ள எட்டிக்குளத்துப்பட்டியில் சின்னதண்ணன், கசுவம்மாள், மதுரை வீரன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை திருவிழா நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டு கோவிலில் திருவிழா நடத்த விழா குழுவினர் முடிவு செய்தனர். இதனையடுத்து நேற்று முன் தினம் கோவிலில் விழா தொடங்கியது. அப்போது கோவிலில் சன்னதியில் இருந்து மின்னொளி ரத்தத்தில் சாமிகள் எழுந்தருளி வீதி உலா வந்தனர். அப்போது பக்தர்களின் சேர்வையாட்டம், கரகாட்டம், வானவேடிக்கை உள்ளிட்டவை […]
