காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் அடுத்த காரணைமண்டபம் கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த கன்னியம்மன் கோவிலில் அரசமரம் ஒன்று இருக்கிறது. அதனை ஒட்டியவாறு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வேப்பமரம் தானாக வளர்ந்தது காலை, மாலை என இரு வேளைகளிலும் கிராம மக்கள் அதனை வழிபட்டுள்ளனர். இந்நிலையில் பொதுமக்கள் நோயின்றி வாழவும், உலக நன்மைக்காகவும், அரச மரத்திற்கும் வேப்ப மரத்திற்கும் திருமணம் செய்ய கிராம மக்கள் முடிவு எடுத்து அழைப்பிதழ் அச்சடித்தனர். இதனையடுத்து மணமகன் அரசன் என்றும், […]
