உளவியல் சிகிச்சை அளிக்க கோரி நிர்பயா குற்றவாளி வினய் ஷர்மா வழக்கறிஞர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். கடந்த 2012-ம் ஆண்டில் டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குற்றவாளிகள் முகேஷ், வினய் குமார் சர்மா, அக்சய் சிங், பவன் குமார் குப்தா ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த ஜனவரி 22ம் தேதி, பிப்ரவரி 1ம் தேதி இருமுறை தூக்கு தண்டனை பிறப்பிக்கப்பட்டது. ஆனால் குற்றவாளிகள் […]
