சென்னை குடிநீர் வாரியம் சார்பாக கீழப்பாக்கம், வீராணம், செம்பரம்பாக்கம், புழல் சூரப்பட்டு நீரேற்று நிலையங்கள், நெம்மேலி, மீஞ்சூர் கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்கள் மூலமாக தினமும் 1,000 மில்லியன் லிட்டர் பாதுகாப்பான குடிநீர் பொதுமக்களுக்கு விநியோகிக்கபடுகிறது. இதற்காக 300 இடங்களில் தினமும் குடிநீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் பருவ மழை காரணமாக தற்போது 600 இடங்களில் ஆய்வு நடைபெற்று வருகிறது. இதுவரை 24,520 இடங்களில் குடிநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு குடிநீரின் தரம் பரிசோதனை […]
