கடலூர் மாவட்டத்தில் உள்ள எனதிரிமங்கலம் தென்பெண்ணை ஆற்றுப்பகுதியில் தொல்லியல் ஆய்வாளர் இமானுவேல் மற்றும் வரலாற்று ஆர்வலர் மோகன கண்ணன் ஆகியோர் கள ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஆய்வாளர்கள் 15 சென்டிமீட்டர் உயரமும், 7 சென்டிமீட்டர் அகலமும் உடைய சூடு மண்ணால் ஆன விநாயகர் சிலையை கண்டெடுத்தனர். இதுகுறித்து ஆய்வாளர்கள் கூறியதாவது, கண்டெடுக்கப்பட்ட விநாயகர் சிலையின் தலையில் கரண்ட மகுடமும், இரு காதுகளில் ஓட்டையும், துதிக்கை நீண்டும் காணப்படுகிறது. சிலையின் தோள்களிலும் காப்பு அணிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிலை […]
