வாலிபர் கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு அடுத்த பரதபுரம் பகுதியில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஷ் கண்ணா (22) என்ற மகன் இருந்துள்ளார். இவர் டாடா மேஜிக் வாகனம் வைத்து தொழில் செய்து வந்துள்ளார். இவருடைய வீட்டின் அருகே விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலைக்கு இரவு நேர காவலாக ராஜேஷ் மற்றும் அவருடைய நண்பர்கள் கார்த்திக் மற்றும் ஆல்பர்ட் ஆகியோர் […]
