சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு பிள்ளையார் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் பகுதியில் கடைவீதி சக்தி விநாயகர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த பூஜையை முன்னிட்டு பிள்ளையாருக்கு பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம் போன்ற 16 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதன்பின் பிள்ளையாருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். […]
