பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது நடிகர் விநாயகன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றது. மலையாள சினிமாவுலகில் குணச்சித்திர வேடங்களில் முன்னணி நடிகராக வலம் வரும் விநாயகன் தமிழில் திமிரு, மரியான், சிறுத்தை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து இருக்கின்றார். இந்நிலையில் சமீபத்தில் இவர் கொச்சியில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றது. இவர் மீது முன்னாள் மாடல் அழகி ஒருவர் மீடூ குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். இதைப் பற்றி அவரிடம் கேட்டபோது இதைப்பற்றி கேரளாவில் பலரும் பேசி வருகின்றார்கள். […]
