ஃபேஸ்புக்கில் அரசியல்வாதிகளுக்கென கொண்டுவரப்பட்ட விதிவிலக்குகள் தற்போது முடிவுக்கு வரவுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. உலக அளவில் பிரபல வலைதளமான ஃபேஸ்புக் அரசியல் தலைவர்களுக்கும், மக்களுக்கும் இடையேயான ஒரு பாலமாக திகழ்கிறது. இதனால் பேஸ்புக் பயன்படுத்துவதில் அரசியல்வாதிகளுக்கு பேஸ்புக் நிறுவனம் பல்வேறு விதிவிலக்குகளை அளித்துள்ளது. அதன்படி ஃபேஸ்புக்கில் அரசியல்வாதிகள் வெளியிடும் அறிக்கைகள் மற்றும் கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாகவோ அல்லது வன்முறையை தூண்டும் விதமாக இருந்தாலும் கூட அவை அனைத்தும் ஒரு செய்தி மற்றும் பொதுநலன் உடையதாக கருதப்படுகிறது […]
